கிழக்கு மாகாணத்தில் கருணா அம்மான் தலைமையில் இயங்கும் அனைத்து பணிமனைகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகமாக பெயர்மாற்றம் செய்யப்படவுள்ளன.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கருணா அம்மான் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படுமென முரளிதரன் எம்.பி யின் பேச்சாளர் கமலநாதன் தெரிவித்தார்.
‘நானும் கட்சியின் மூத்ததலைவர்கள் பலரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியில் சேரப்போகிறோம்’ என கருணா அம்மான் இணையத்தளம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நானும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து விலகி இருக்கிறோம். நாங்கள் சுதந்திரக் கட்சியில் சேரப் போகிறோம். இதற்காக ஒருவாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச இருக்கின்றேன். அதன் பிறகு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அலுவலகம் அனைத்தையும் சுதந்திரக் கட்சி அலு வலகமாக மாற்றுவோம் என முரளிதரன் எம். பி. கூறியதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
palli
அப்பாடா தமிழ் மக்களுக்கு பிடித்த நோய் ஒன்று விலகுகிறது. அதுசரி யார் அந்த மூத்த தலைகள்.?? இனிய பாரதியும்; மங்களம் வாத்தியும்தானே? குமாரதுரையையும் கையோடு கூட்டி போங்கோ. அத்துடன் கருனா எனி கருனரட்ன வாக மறுவார்; அப்படியே பிள்ளையானுக்கு மகிந்தாவின் அதிகாரத்தை வைத்து பல வழியிலும் சிக்கலை கொடுத்து நாட்டை விட்டோ அல்லது உலகத்தை விட்டோ மிக சீக்கிரம் பிள்ளையான் தனது கோளையர்களுடனோ அல்லது தனியாகவோ துரத்த படலாம். அல்லது அனுப்பபடலாம். பிறகென்ன. இடைதேர்தல் வரும் அதில் மகிந்தா கட்ச்சி மிக பெரிய வெற்றி பெற்று கருனரட்ன தலமையில் ஆட்ச்சி அமைக்கும். ஆனாலும் பாருங்கோ மகிந்தாவின் கட்ச்சியில் உள்ள பலர்(இரண்டாவது நிலையில் உள்ள தலவர்கள்) கருனரட்ன வருகையால் அதிர்ந்துபோய் இருப்பதாக தெற்க்கு செய்திகள். கற்பனைதான் இருப்பினும் பல்லி இப்படியும் யோசிக்கிறது மகிந்தா சந்திரிகாவுக்கு கொடுத்த நாமத்தை கருனரட்ன (கருனாதான்) மகிந்தாவுக்கு கொடுக்க முயற்ச்சி செய்யலாம்.வேறு எந்த அமைப்பும்(தமிழ்) இந்த அளவுக்கு அரசை தடவவில்லை. ஏன் தோழர்கூட. மிக விரைவில் தோழரும் மகிந்தாவின் சிந்தனையில் இனையலாம்.
சங்கரி சிறப்பு நடிகர்தானே அவர் எங்கு இருந்தால் என்ன. அவரும் மகிந்தாவின் வீட்டில் சேர்ந்து கொண்டால் ஏதாவது ஒரு நாட்டுக்கு தூதுவராக நியமிக்கபடுவார் என கருனரட்னா சொல்லியதாக புலம் பெயர் பணனாயகவாதிகள் புடுங்கு படுகிறார்கள். புதிய தகவல் ஒன்று புலம்பெயர் நாட்டில் சிலரால் தொடங்கி விலைபடாத ஒரு …… அமைப்பு இன்று கொழும்பில் மகிந்தாவின் வீட்டருகே கருனாவின் உதவியாளரின் உதவியுடன் தவம் இருப்பதாக செய்தி. இதனால் தோழர் கடுப்பில் இருப்பதாகவும் செய்தி. காரனம் அவர்கள் கேப்பது வடக்கை அதுவும் தலமை பொறுப்பை. இப்படியே இலக்கியம்; பெண்ணியம், ஆணியம்; தலித்தியம்; வடக்கியல்; கிழக்கியம் இப்படி பலகாய் கறி சேர்ந்து இட்டலிக்கு வைக்கும் சாம்பாராக மகிந்தாவின் சட்டியில் வேகுகிறார்கள்.
தொடரும் பல்லி..
பகீ
கருணா நோய் விலகாது வேறு உருவத்தில் வரும்.
தற்போது வந்த செய்திப்படி ”கட்சியின் மூத்ததலைவர்” இனியபாரதிக்கும் பொறியியலாளர் ஒருவருக்கும் வீதி ஒப்பந்த விடயத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்திருக்கிறது.
பிரான்சில் இருந்து போன “கட்சியின் மூத்ததலைகள்” எந்தப்பக்கம்?
palli
ஜயோ அதை ஏன் கேக்கிறியள் பகீ அவர் பரிஸ் பக்கமே பக்குவமாக போய்விட்டதாக பரிஸ்நண்பர் வட்டம் சொல்கிறது. இருப்பினும் புதிய வேடமான தலித்திய முன்னனியுடன் தேர்தலை சந்திக்க எங்கோ போக போவதாக அதே நண்பர்கள் சொல்லுகிறார்கள். தலை தப்பியது குழந்தையான் புண்ணியமாம். தேவையா இது.