“தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வீட்டு வன்முறை சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த போது ,
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வீட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலையில் கடந்த 10 நாட்களில் (ஓகஸ்ட் 21 முதல் ஓகஸ்ட் 31 வரை) கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் 150 க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 30 மனைவிகள் தங்கள் கணவர்களால் தாக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் – அக்கம் பக்கத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆண்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், கடந்த 10 நாட்களில் வீட்டில் விழுந்து தீக்காயம் அடைந்ததால் சுமார் 100 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் 23 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.