கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல் ஆதாயம் பெறுவதற்காக முன்னெடுக்கவில்லை எனவும் மொழி மத அடிப்படையில் இதனை முன்னெடுக்கவில்லை எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எந்தமாவட்டங்களிற்கு தடுப்பூசியை வழங்கவேண்டும் எவ்வளவு தடுப்பூசியை வழங்கவேண்டும்,எந்த தடுப்பூசியை வழங்கவேண்டும் என்பதை சுகாதார அமைச்சே தீர்மானிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். சமீபவாரங்களில் மன்னார் கண்டி ஆகிய பகுதிகளிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.