இலங்கை மத்திய வங்கி 4000 கோடி ரூபா நாணயதாளினை அச்சிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரி உண்டியல்களுக்கான ஏலத்தை முகாமைத்துவம் செய்யமுடியாமற் போனமை காரணமாக 39.97 நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய வங்கி செப்டம்பர் 1 ஆம் திகதி 68. 5 பில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல் ஏலத்திற்கு விடப்பட்டிருந்தது, எனினும் பன்னிரெண்டு மாத முதிர்வு காலம் கொண்ட 5.97 வீத நிர்ணய விலையில் 43.24 பில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களை விற்க முடியாமல் போனது, இதன் காரணமாக அதனை ஈடு செய்யும் பொருட்டு புதிய நாணய தாள்கள் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் மாதம் அளவில் பண வீக்கம் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளர். பண வீக்கம் காரணமாக பொருட்கள் சேவைகளிளும் விலை அதிகரிப்பு ஏற்பட கூடிய சூழ்நிலை உள்ளது இதன் காரணமாக சந்தை சமநிலையும் குழப்பமடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.