இலங்கையின் பல்கலைகழக தரப்படுத்தலின் அடிப்படையில் தொடர்ச்சியாக பேராதனைபல்கலைகழகம் முன்னிலையில் இருந்து வருவதுடன் சர்வதேச அளவிலும் இந்த பல்கலைகழகம் பெயர்பெற்ற பல்கலைகழகமாக உள்ளது.
இந்த நிலையில் Times Higher Education World Ranking – 2022 என்றழைக்கப்படும் தரப்படுத்தலின் பிரகாரம், உலகின் முதன்மையான 500 பல்கலைக்கழகங்களின் வரிசையில் மூன்றாம் இடத்தையும், இலங்கை பல்கலைக்கழகங்களில் முதலாம் இடத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
இந்த தரப்படுத்தலானது ஆய்வுப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் தர வரிசையை உருவாக்குகிறது.
பல்கலைக்கழகங்களின் ஆய்வை மையப்படுத்திய நோக்கங்கள், கற்றல் பின்புலம், தொழிற்துறை வருமானம், சர்வதேச ரீதியிலான தோற்றப்பாடு முதலான விடயங்களின் அடிப்படையில் தரப்படுத்தல் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
மாணவர்கள், கல்விமான்கள், பல்கலைக்கழக பிரதானிகள் ஆகியோருடன் அரசுகள் மற்றும் கைத்தொழில் அமைப்புக்களின் நம்பிக்கையை வென்ற முழுமையான மற்றும் நடுநிலையான ஒப்பீடுகளை மேற்கொள்ளக்கூடிய செயலாற்றுகை குறிக்காட்டிகளை அமைப்பு பயன்படுத்துகிறது.