பெளத்தம் பற்றி நாட்டுக்கு தினந்தோறும் வகுப்பெடுக்கும் இந்த அரசின் மிக வக்கிரமான இனவாத மனசை அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் காட்டுகின்றதா? என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ட்விட்டர், முகநூல் தளங்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“இராஜாங்க அமைச்சர் ஒருவர் அநுராதபுரம் சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட செய்து அவமானப்படுத்தி, பயமுறுத்தி உள்ளார். இது பாரிய மனித உரிமை மீறல், மனிதர்களின் ஆத்ம கெளவரத்தை அவமானப்படுத்தும் ஒரு செயல், ஒரு கிரிமினல் செயல்.
பெளத்தம் பற்றி நாட்டுக்கு தினந்தோறும் வகுப்பெடுக்கும் இந்த அரசின் மிக வக்கிரமான இனவாத மனசை இது காட்டுகின்றதா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்குப் பதில் கூற வேண்டும்” – என்றுள்ளது.