ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு ஒன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
GSP+ சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே குறித்த குழு இலங்கை வரவுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் 27 ஆம் திகதி குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு 2015ஆம் ஆண்டில் மீள வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீண்டும் இரத்து செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து பேச்சு நடத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேடக் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிகிறது.
மிகநீண்டகாலமாக தமிழர் பிரச்சினை தொடர்பில் எதுவித மாற்றங்களும் முறையாக ஏற்பட்டிராத சூழலில் இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினரின் வருகையை சரியாக தமிழ்தலைவர்கள் பயன்படுதட்துவார்களா என்பதை பொறுத்திருந்து பாரப்போம்.