இலங்கையில் ஜீலைமாதம் முதல் கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்திருந்த நிலையில் நாட்டை முடக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த போதும் அரசு கடந்த மாதமே ஊரடங்கை அமுல்படுத்தியது.
தொடர்ந்து ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட போதும் மக்கள் பெரும்பாலும் வழமையான நாட்கள் போலவே இயங்குவதாக தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் இது தொடர்பில் அரசு ஆக்கபூர்வமான எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை னஎன எதிர்க்கட்சி குற்றம்சாட்டி வந்த நிலையில் அரசு மதுபானக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளதால் அங்கு கூட்டம் அலைமோதுகின்றது. இதனால் புதிய கொரோனா அலை உருவாக வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டது.
எனினும் அரசதரப்பில் மதுபானக்கடைகளை திறக்க தாம் அனுமதி வழங்கவில்லை எனக்கூறப்பட்டது. சுகாதாரத்துறையினரே அந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பில் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ மதுக்கடைகளைத் திறக்க ‘பேய்’ மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகளைத் திறக்க யார் உத்தரவிட்டார்கள் என்பது சரியாகத் தெரியாவிட்டால் ‘பேய்’ அதற்கான அனுமதியை வழங்கி இருக்கலாம் எனவும் அரசுக்கு பணம் தேவைப்படுவதால் மதுக்கடைகள் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
செல்வந்தர்களுக்கு மதுபானங்களை இணையவழி ஊடாக வீட்டுக்கே கொண்டுவரலாம். ஆனால் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் அன்றாடம் மூன்று வேளை உணவை பெற்றுக்கொள்வதற்கு சிரமப்படுபவர்களே இன்று மதுக்கடைகளுக்கு முன்னால் வரிசையில் காத்திருக்கிறார்கள்.
எனவே மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டமையானது ஒரு அருவருப்பான செயலாகுமெனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.