நாட்டின் தற்போதைய நிலையில் 2 நாட்கள் வாழவே 2000 ரூபா போதுமானது என கூறியுள்ளது. மாதம் முழுவதும் 2000 ரூபாவுடன் வாழ இந்நாட்டு மக்கள் யாசகர்களா…? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் கேள்வி எழுப்பியுள்ளார் .
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர்,
நாட்டில் பணம் தொடர்பாக எந்தத் தட்டுப்பாடும் இல்லை என ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் கூறியுள்ளனர். எங்களுக்குப் பணம் இருக்கின்றது என அரசாங்க அமைச்சர்கள் தொடர்ந்து கூறினர் தாம் வாக்குறுதி வழங்கியவாறு அனைத்து விடயங்களையும் நிறைவேற்றுவதாக அரசாங்கம் கூறியது. அவ்வாறு நிறைவேற்றுவதை நாங்கள் நடைமுறையில் காணவில்லை.
ஆனால் அவர்கள் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டால் சொர்க்கலோகம் போன்று வாழலாம். ஆனால் அவர்கள் முன்வைத்துள்ள வாக்குறுதி வாய் வார்த்தையில் மாத்திரம் தங்கியுள்ளது. இந்த நாட்டில் பணம் இல்லை என்றும் அரசாங்கம் நாட்டு மக்களை யாசகர்களாக நினைத்துச் செயற்படுகின்றது என்றும் மாதம் 2000 ஆயிரம் ரூபாவை கொடுப்பதாகவும் இந்நாட்டின் வாழ்க்கைச் செலவின் படி 2 நாட்களுக்கு மாத்திரமே 2000 ரூபா போதுமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேநீர் தயாரிப்பதற்காக ரூபா 2 பில்லியன் பணத்தை அமைச்சர்கள் ஒதுக்கியுள்ளமை தெரியவந்துள்ளதென அவர் சபையில் தெரிவித்துள்ளார்.
மூன்று நேர உணவை உண்ண பணம் இல்லை என்றால் இரண்டு நேரம் மாத்திரம் உட்கொள்ளுமாறு உங்கள் அமைச்சர்கள் கூறியுள்ளார்கள். அமைச்சர்கள் இரண்டு நேரம் உணவை எடுத்தால் உடலிலுள்ள கொலஸ்ட்ரோல் தானாகக் குறைந்து விடும். அதிக அளவில் பணம் செலுத்திக் கொழுப்பைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
நிதி நிலைப்பாடு வலுவாக உள்ளதென அரசாங்க அமைச்சர்கள் கூறினாலும், மக்களின் துயரம் அதன் பொய்யை உறுதிப்படுத்துகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன் சேகா தெரிவித்துள்ளார்.