இலங்கையில் தற்போதைய அரசாங்கம் டிசம்பர் மாதம் கவிழ்ந்து விடும் என்றும் அரசாங்கம் வங்குரோத்து நிலைமையை அடையும் என்றும் வெகு விரைவில் முழுப் பொருளாதாரமும் வீழ்ச்சியடையக் கூடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தை அடையும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,
இந்த ஆண்டின் இறுதிக்குள், இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வங்குரோத்து நிலைமையை அடையும் நாடாக மாறும்.
அப்போதைய நிலையில் நாட்டிற்கு எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை உலகின் மோசமான நாடாகச் சரிந்து வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளப்பட்டமைக்கு இந்த அரசாங்கத்தின் அசாதாரண ஆட்சியே காரணமாக அமைந்துள்ளது. பொருளாதாரச் சரிவில் உலக நாடுகள் பட்டியலில் இலங்கை முதலாவது இடத்தில் உள்ளமையை ஆளுந்தரப்பு உறுப்பினரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண சுட்டிக்காட்டியுள்ளார்.