இலங் கைத் தமிழர்களைக் காக்கக் கோரி சென்னையில் திமுக இளைஞர் அணி நடத்திய மனித சங்கிலியின்போது தரமணியைச் சேர்ந்த தொண்டர் தீக்குளித்தார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார். சென்னை தரமணி மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(55). மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து 1999ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் டிரைவராகப் பணியாற்றி வந்தார்.
இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.நேற்று திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் சிவப்பிரகாசமும் கலந்து கொண்டார். அப்போது திடீரென தான் வைத்திருந்த பையில் இருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீயைக் கொளுத்தி வைத்துக் கொண்டார். சிவப்பிரகாசம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தி.மு.க. பகுதி பிரதிநிதியாகவும், டாக்டர் கலைஞர் மன்ற செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பிரகாசம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Suresh-MM.A
கொழுத்திகினு செத்துப்போற யெவனுக்குமே சர்க்காரு துப்பு கொடுக்கமாட்டோம்னு கலைஞர் சொன்னாரே… ஆமா இப்போ இன்னாவாம் ரெண்டு பெரியரூவா கொடுக்குறாராமில்ல…!