சமீபத்தில் வெளியாகி ஆஸ்கார் வரை சென்றுள்ள திரைப்படமான “ஸ்லம்டாக் மில்லியனர்” (Slumdog Millionaire) திரைப்படத்தில் வரும் ‘ஓ சயா’ என்ற பாடலை எழுதி பாடியவர் MIA. இவருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் தமிழனின் வேதனை உணர்த்த தக்க சமயத்தில் MIA என்ற தமிழ் பாடகிக்கு ஆஸ்கார் மற்றும் மிகவும் உயர்ந்த பாடகர் விருதான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்து தமிழ்பெண் ‘MIA’ மாதங்கி அருள்பிரகாசம் இவர் இங்கிலாந்தில் புகழ் பெற்ற பாடல் ஆசிரியர், ராப் பாடகர். தமிழ் ஈழத்தில் 17 ஜுலை 1977-ல் கலா மற்றும் அருட்பிரகாசம் தம்பதியினருக்கு பிறந்தவர். இவரது தந்தை அருட்பிரகாசம் தீவிர ஈழ ஆதரவாளர் மற்றும் அப்போதையை தமிழ் ஈழ மீட்பு போர்ப்படை (தற்போது த.ஈ.வி.புலிகள்) பணியாற்றியவர். முதலாம் உள்நாட்டு போரில் சிங்களப்படைகள் தமிழர்களை குடும்பம் குடும்பமான கொலை செய்தபோது தனது தாயுடன உயிர் பிழைத்து சென்னைக்கு வந்தார். சென்னையில் தங்கிருந்த இவர் சில வருடங்கள் கழித்து மீண்டும் தனது தந்தையைக் காண யாழ்ப்பாணம் சென்றார்.
அங்கு தனது வீடு மற்றும் படித்த பள்ளிக்கூடம் முழுவதும் இலங்கை இராணுவத்தினரால் சூரையாடப்பட்டு கொண்டிருந்தது. அவரது தந்தையும் இலங்கை இராணுவத்துடன் போராடிக்கொண்டிருந்த காரணத்தால் இராணுவம் இவரையும் இவரது தாய் மற்றும் இவரது இரண்டு சகோதரர்களையும் தேடிக்கொண்டிருந்தது. உயிருக்கு பயந்து மீண்டும் தமிழகம் வந்த இவர்கள் உறவினர் இருவரின் ஆதரவால் லண்டன் நோக்கி பயணம் ஆனார்கள். MIAவிற்கு வயது 11 லண்டனில் அகதியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர். லண்டனில் உள்ள சென்ட்ரல் செயிண்ட் மார்சியல் ஆர்ட் அகேடமியில் தனது கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பட்டப்படிப்பு முடிந்ததும் இவர் தனி இசைப்பாடல்கள் இயற்றுவதும் தானாகவே ஆல்பங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது பாடல்கள் இங்கிலாந்து மட்டுமின்றி அமெரிக்க நாடுகளிலும் பிரபலமானது. தனி இசை ஆல்பம் இங்கிலாந்தில் மிகவும் பிரபலமானது. 2005-ஆம் ஆண்டில் ‘ஆல்பம் ஆப் த இயர்’ என்ற விருதை பெற்றுத்தந்தது. இந்த வருடம் பேப்பர் ப்ளேன்ஸ் (Paper Planes-2008), சகா லைக் அஸ் என்ற இரண்டு ஆல்பங்களுக்கு மிக உயரிய விருதான கிராமிவிருது இவருக்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது.
palli
பாராட்டுவதா?? அதிசயபடுவதா?? வாழ்த்துவதா?? மகிழ்ச்சியில் எதுவுமே புரியவில்லை. எம்மினமும் வாழுகிறது என்பதுக்கு இப்படி சில நிகழ்வுகள் தான் சர்வதேசத்துக்கு சென்றடைகிறது. தமிழனாய் நன்றி.
Surash
தமிழர்கள் குரல்கள் எங்கோ இன்றும் உலகின் ஒரு மூலைகில் கேட்கிறதே எனும் பொழுது மகிழ்சிதான்….
பகீ
ஈழப்பிரச்சினையை கலை உலகுக்கு ஒரு சிறிய நேர்காணல் மூலம் எடுத்துச்சென்ற பெருமையும் இவருக்குரியது. கிராமி விருதுகளுக்கு ஓரிரு வாரங்களின் முன்னர் அமெரிக்க தொலைக்காட்சியில் “ரவிஸ் ஸ்மைலி” என்கின்றவரின் நேர்கானலில் அவர் ஈழத்தில் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கைச்செலவு செய்தார்.
அந்த நேர்கானலின் பின்னர் கிராமி விருதுகள் நாளில் அவரின் முதலாவது குழந்தை பிறக்க இருந்தும் மேடைக்கு வந்து அமெரிக்காவின் ‘ஹிப்-ஹொப்’ கலைஞர்களான ஜே-ஸி, கெயான் வெஸ்ற், லில்-வெய்ன், ரிஐ ஆகியோருடன் மேடையில் தோன்றி பாடினார். அடுத்தநாள் அமெரிக்க ஐரோப்பிய மீடியாக்களில் இதேபேச்சு ஆக இருந்தது. மாயா குழந்தை பிறக்க இருந்த நேரத்தில்கூட மேடையில் தோன்றிய காரணம் புகழுக்காக அல்ல விருது கிடைக்கும் நேரத்தில் ஈழம் பற்றிய கருத்தை சொல்ல வேண்டும் என்பதே.
PAPER PLANE
மியாவின் இசையைக் கேட்டிருக்கிறீர்களா?, எனக்கு, ரிமிக்ஸ் மற்றும் “ஜெர்மனியின் ஹெவி மெட்டல்” இசையை நினைவுப் படுத்தியது. பரிணாம வளர்ச்சியின்படி (இங்கிலாந்து டார்வின்), வாழ்வின் பெரும் பகுதியை தொழிற்சாலைகளில் செலவிடுவதால், அங்கு ஒலிக்கும் உலோகங்களின்(மெட்டல்) ஒலியே மக்களுக்கு வருங்காலத்தில் பிடித்தவைகளாகி விடுகின்றன .”மியாவின்” இசையில் துப்பாக்கி வேட்டு சத்தங்களும் அழுகுரலும் இருக்கின்றன. தனிப்பட்டவர்கள் பிரபலமடைவதற்கு ஈழப் போர் ஒரு நல்ல தளம், இங்கிலாந்து கல்வி முறை எங்களுக்குள் ஏற்ப்படுத்தும் செல்வாக்கு. மற்றப்படி இவர் வருங்கால, “லண்டன் ஈரோஸ்” தலைவர்.