கொழும்பு நகருக்குள் பிரவேசித்து தாக்குதல் நடத்த முயன்ற விடுதலைப்புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக விமானப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் விமான எதிர்ப்பு ஏவுகணையின் சில பாகங்கள் ராஜகிரிய பகுதியில் விழுந்தனால் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் ராஜகிரிய ஒபயசேகரபுரவை சேர்ந்த உதேசிகா என்ற 20 வயது மாணவியே வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
விமானப்படையினரின் விமான எதிர்ப்பு தாக்குதலை தமது அயலவர்களுடன் பார்த்துக் கொண்டிருந்த போதே வெடித்துச் சிதறிய ஏவுகணை வெடிபொருளின் பகுதியொன்று இம் மாணவியின் கழுத்துப்பகுதியை தாக்கியதையடுத்தே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.