நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலம் திருகோணமலைக்கு 398 பொதுமக்கள் கூட்டிவரப்பட்டனர். அவர்களையும் சேர்த்து பெப்ரவரி 11 ஆம் திகதியிலிருந்து முல்லைத்தீவிலிருந்து கூட்டிவரப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 1,610 ஆக அதிகரித்துள்ளது நேற்று சனிக் கிழமை நண்பகல் 12 மணியில் உள்ள நிலைவரத்தின் படி 911 பேர் திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியே அனுப்பிவைக்கப்பட்டனர். வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் வருமாறு;
கந்தளாய்160, தம்பலகாமம்65, பொலன்னறுவ183, கொழும்பு மற்றும் கண்டி86, வவுனியா ஆஸ்பத்திரி23, திருகோணமலையில் திருமலை ஆஸ்பத்திரியில் 646, திருமலை மெதடிஸ்த மகளிர்கல்லூரி 53 பேரும் ஆக 699 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்தவர்களுக்கான நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 441.
முல்லைத்தீவில் இருந்து கொண்டுவரப்பட்ட காயமடைந்தவர்களில் 528 பேருக்கு பெப்ரவரி 11 இருந்து பெப்ரவரி 20 வரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.