கட்டுநாயக்காவில் சுட்டு வீழ்த்திய விமான விமானியின் சடலம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில்

041.jpgவிடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று கட்டுநாயக்காவில் விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தையடுத்து, அந்த விமானம் விழுந்த இடத்திற்கு நேற்று சனிக்கிழமை நீர்கொழும்பு நீதிவான் ஜயகிடி அல்விஸ் சென்று விசாரணை நடத்தினார்.  கட்டுநாயக்க விமான நிலையத்துக்கும் கட்டுநாயக்க ரயில் நிலையத்துக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இரவு இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த விமானம் விழுந்த இடத்தில் இறந்து கிடந்த விமானியின் சடலத்தை நீர்கொழும்பு நீதிவான் பார்வையிட்டார். இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

வெள்ளை நிறத்திலான விமானியின் சடலம் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் வெள்ளிக்கிழமை இரவு வந்த விடுதலைப்புலிகளின் இரு விமானங்களில் ஒன்றை விமானப்படையினர் கட்டுநாயக்காவில் சுட்டுவீழ்த்தியதாக விமானப்படையினர் தெரிவித்தனர்.

இலங்கை இறைவரித்திணைக்கள கட்டிடத்தின்  மோதுண்ட விமான சிதைவுகள்

ltte-2nd-fight-03.jpg

ltte-2nd-fight-01.jpg

ltte-2nd-fight-02.jpg

புகைப்படங்கள் www.lankadeepa.lk,   இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டவை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • palli
    palli

    இதிலும் வாழபழ கணக்குதனா?? வந்தது இரு விமானம் ஒன்று அரச விமானபடை சுட்டு வீழ்த்தியது. மிகுதி ஒன்று எங்கே?? அதுதான் வீழ்ந்த விமானமென உதய நோனயகாரா சொல்லுகிறார். அப்படியாயின் சுட்ட பட்டம் எங்கே?? அதுதான் படத்தில் பார்க்கிறீர்களே?? அப்படியாயின் வந்ததில் மற்றது எங்கே?? விடுமுறை நாளும் அதுவுமாய் பல்லியை சஜீர் அகமட் குளப்பி விட்டீர்கள்.

    Reply
  • muthu
    muthu

    வந்தது இரு விமானம். ஒன்று அரச விமானபடை சுட்டு வீழ்த்தியது.அதுதான் படத்தில் பார்க்கிறீர்கள் மற்றது இறைவரித் திணைக்களத்தில் அடிபட்டது. அதன் படம் இந்த செய்தியின் கீழ் இல்லை. அதெல்லாம் பழைய செய்தியாகிவிட்டது. இந்த செய்தி இறந்தவர்களில் ஒருவரின் பிரேத பரிசோதனை பற்றியது. இறந்தவர்களில் மற்றவரின் சடலம் எங்கே என என்னை கேட்க வேண்டாம் பல்லி எனக்கும் தெரியாது.

    Reply
  • சஜீர் அஹ்மட்
    சஜீர் அஹ்மட்

    //அப்படியாயின் வந்ததில் மற்றது எங்கே?? விடுமுறை நாளும் அதுவுமாய் பல்லியை சஜீர் அகமட் குளப்பி விட்டீர்கள்.//

    பல்லி… இலங்கை இறைவரித்திணைக்கள கட்டிடத்தின் மோதுண்ட விமான சிதைவுகள் -செய்தியின் பின்னால் படங்களை இணைத்துள்ளேன். புகைப்படங்கள் lankadeepa.lk, இணையத்தளத்திலிருந்து பெறப்பட்டவை.

    Reply
  • Surash
    Surash

    முதலாம் உலகயுத்தத்தில் பாவித்த பழைய விமானம் போல் இருக்கிறது. இதைவைத்தே ஒரு கலக்குக்கல்கிய புலிகளுக்கு வாழ்த்துக்கள். ஆனால் அதைக்காட்டி உள்ளதையும் காட்டிவிட்டீர்களே.எதிரியின் பயத்தைக் கலைத்து விட்டீர்களே. மோட்டரின் உக்குநிலையைப்பார்த்தால் செக்கியர் நன்றாக ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது புரிகிறது……

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி இலங்கைப் பாதுகாப்புத்தறையின் இணையத்தளத்தில் இரண்டு விமானங்கள் விழுந்த இடத்தையும் விமானனங்களின் சிதைவுகளையும் தெளிவாக வெளியிட்டிருக்கிறார்கள். ஒன்று கட்டுநாயக்கா விமானத்தளத்திற்கு அருகாமையிலும் மற்றையது இறைவரித் திணைக்களத்திற்கு அருகாமையயிலும் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

    http://www.defence.lk/new.asp?fname=20090221_09

    Reply