உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது விழா இன்றிரவு நடைபெறும் நிலையில், இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் விருதை வென்று புதிய வரலாறு படைப்பாரா எனும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ஸ்லம்டாக் மில்லினர்’ திரைப்படம் சர்வதேச அளவில் விருதுகளை வென்றுள்ளது. கோல்டன் குளோப் விருது உட்பட பல்வேறு விருதுகளை இந்தப்படமும், ஏ.ஆர்.ரஹ்மானும் வென்றுள்ளனர்.
.
ஆஸ்கர் விருதுக்காக 10 பிரிவில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 3 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஹாலிவுட்டின் மதிப்புமிகு விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்றிரவு கோலாகலமாக நடைபெறுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த விருதை வென்று வரலாறு படைக்க வேண்டும் என்று இந்திய திரைப்பட ரசிகர்கள் ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும் காத்திருக்கின்றனர்.