அம்பாறை இங்கினியாங்கலை ரத்மல்கம பிரதேசத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்மீது புலிகளால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 12 பேர் மரணமானதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து அந்த பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்தத் தாக்குதலினை தோல்வியின் விளிம்பில் விரத்தியடைந்துள்ள புலிப்பயங்கரவாதிகளே மேற்கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அருட்சல்வன் வி
அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சுட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தோர் தொகை 15ஆக அதிகரிப்பு
prasha
கிழக்கில் புலிகளே இல்லயே ….நீர்தான் சொன்னியல்….இப்ப புலிகளெண்டு சொல்லிறயல் நாங்க முட்டாளா, இல்லை நீங்க முட்டாளா
VADIVELU
பிரசாவின்ட கருத்தப் பார்த்தா வெளிநாடுகள்ல இருக்கிற பிரசாக்கள குஷிப்படுத்தத்தான் இந்த இரத்தக் காட்டேறிய அரங்கேற்றிக் காட்டுறாங்களோ…?? இன்னும் கொஞ்சம் கூட அள்ளிக் குடுங்கோ எங்காவது இருக்கிற ஒரு முஸ்லிம் கிராமத்தையும் அடிச்சு விரட்டுவாங்கள். அப்பதான் நாம வெளிநாட்டுல இருந்துகொண்டு ஒரு ரெஸ்லிங் ஸீரியல பார்த்து இரசிக்கிற மாதிரி இரசிக்கலாம்.
வன்னியில விழுற குண்டுல புலிக்கு மூளை குழம்பிப் போட்டு போல கிடக்கு. அதால இப்ப அதுக்கு என்ன செய்ற ஏது செய்ற என்டு எதுவுமே விளங்குதில்ல. கடந்த காலங்கள்ல சகோதர இயக்கத்தவர்களைப் படுகொலை செய்தமை வடபுல முஸ்லிம் மக்களை அங்கிருந்து விரட்டியமை எல்லைக் கிராம சிங்கள பொதுமக்களைக் கொலை செய்தமை ராஜீவ் காந்தி கொலை இது போன்று எத்தனையோ புலி விட்ட தவறுகள் ஈழப்போராட்டம் பின்னடைவு காண்பதற்கு காரணமாக அமைந்துள்ளன. மீண்டும் மீண்டும் புலி அதே தவறுகளைச் செய்யுதென்றால் அதன் தலைமையின் அகங்காரமும் ஆணவமுமே தவிர வேறில்லை.
மேலும் தற்போதைய நிலைமையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு இனக்கலவரத்தை தூண்டி விட்டு அதன் மூலம் உலக நாடுகளின் யுத்த நிறுத்தத்துக்கான அழுத்தத்தை அரசாங்கத்துக்கு கொடுக்க வைப்பதன் மூலம் புலித்தலைமை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறது.
தனது தலைவனின் தலையை காப்பாற்ற சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் என எத்தனை பேர்களுடைய தலைகளை வேண்டுமானாலும் புலி உருள வைக்கும். அது பற்றி அதுக்கு கவலையே இல்லை. ஏனெனில் அது ஆறறிவு மனிதக்கோட்பாட்டிலிருந்தும் மாறுபட்டது.
esan
இதை யார் செய்தார்கள் என்பது தான்???
nathan
யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சனையை கொண்டு வருவதாகக் கூறும் இராணுவ ஆட்சியாளர்கள் திறந்த வெளிச் சிறையில் நாம் எதிர்பார்த்ததைப் போலவே மக்களை வைத்திருக்கின்றனர். மறுபக்கத்தில் புலிகள் இவ்வாறு அப்பாவி சிங்கள மக்களை கொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து வகை கொலைகளை நிறுத்துங்கள்.
பார்த்திபன்
உண்மையில் புலிகள் அந்த அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்றிருந்தால், அது மிகவும் கண்டிக்கத் தக்கது. இதன் மூலம் புலிகள் சிங்கள அரசின் பிரச்சாரத்திற்குத் தான் வலுச் சேர்ப்பதாக அது அமைந்து விடும். இயலாமையின் வெளிப்பாடுகளினால் புலிகள் இப்படிச் செய்வதாயின் அது எந்த வகையில் தமிழர்களுக்கு விடிவைப் பெற்றுத் தரும்??