ஐபிஎல் போட்டிகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் – அடுத்தவருடம் விளையாடவுள்ள புதிய இரண்டு அணிகள் !

அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் 8அணிகளுக்கு மேலதிகமாக இன்னும் இரு அணிகள் சேர்த்துக் கொள்ளப்படும் என இந்திய கிரிக்கெட் சபை தகவல் வெளியிட்டிருந்தது.

இதனடிப்படையில் இன்று அணிகளை இறுதிப்படுத்துவதற்காக இடம்பெற்ற ஏலம் கிரிக்கெட் வர்த்தகத்தில் ஒரு முக்கியமான தருணமாக எல்லோராலும் பார்க்கப்பட்டது,

வருடத்திற்கு ரூ.3 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்றன. புதிய அணிகளுக்கான அடிப்படை விலை ரூ.2,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இரண்டு வணிக நிறுவனங்களான – RP சஞ்சீவ் கோயங்கா குழுமம் (RPSG -முன்னைய ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் IPL அணி ) மற்றும் CVC குழுமம் ஆகியன இரண்டு புதிய ஐபிஎல் உரிமைகளை வாங்குவதற்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் ஏலம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை மையப்படுத்தி இரண்டு அணிகள் போட்டிகளில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

RPSG குழுமம் லக்னோ அணிக்கான உரிமையை பெறுவதற்கு 7000 கோடியை செலுத்தியது, அதே நேரத்தில் CVC குழுமம் அகமதாபாத் அணிக்கான உரிமையை பெறுவதற்கு 5200 கோடியை செலுத்தியது.இந்த இரு புதிய அணிகள் மூலமாக இந்திய கிரிக்கெட் சபை 12,200 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அடுத்தாண்டு இடம்பெறும் IPL போட்டிகளில் மொத்தமாக 74 போட்டிகள் இடம்பெறும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. இதுவரை IPL போட்டிகளில் 56 குழுநிலை போட்டிகளும் 4 play off போட்டிகளுமாக மொத்தம் 60 ஆட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *