வன்முறைகள் காரணமாக சர்வதேச ரீதியில் 84 மில்லியன் பேர் இடம்பெயர்வு !

வன்முறைகள், பாதுகாப்பின்மை மற்றும் காலநிலை மாற்றம் என்பனவற்றின் காரணமாக, சர்வதேச ரீதியில் 84 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தினால், கடந்த 11ம்திகதி வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில், குறிப்பாக ஆபிரிக்காவில் உள்ளக மோதல் காரணமாக அதிகளவானோர் தப்பிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எவ்வாறிருப்பினும், கொவிட்-19 தொற்றினால் அமுலாக்கப்பட்டுள்ள எல்லைக் கட்டுப்பாடுகள், பல இடங்களில் புகழிடக் கோரிக்கையாளர்களின் அணுகலைத் தடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வன்முறைகள், துன்புறுத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க சர்வதேச சமூகம் தவறியுள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஃப்ளிப்போ க்ரண்டி தெரிவித்துள்ளார்.

இதனாலேயே, மக்கள் அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *