இலங்கை இராணுவத்தினர் இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் வசம் எஞ்சியுள்ள ஒரேயொரு நகரமாகிய புதுக்குடியிருப்பு பிரதேசத்தினுள் முன்னேறிய இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு நந்திக்கடலுக்கு கிழக்கே இராணுவ முன்னரங்க பகுதிக்குள் ஊடுருவ முயன்ற விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இன்று காலை கடும் சண்டைகள் நடைபெற்றதாகவும், இதி்ல் பல விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது,
இந்த மோதல்களின்போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் 19 சடலங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அது கூறியுள்ளது. இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் இன்று அதிகாலையும் நேற்றும் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல்களில் 40 சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம் தெரிவித்திருக்கின்றது.
Suresh-MM.A
//இதி்ல் பல விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது//
//கடந்த மூன்று நாட்களாக விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1000 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் //புலிகளின் சமர் கட்டளைப் பீடம்//
ஒன்றும் விளங்கேல்ல. உண்மையாகவே இவர்கள் யார் யார் எத்தனை மாங்காய் அடிச்சினமெண்டு ஒருகாலமும் சரியான கணக்குச் சொல்ல மாட்டினமோ? எல்லாரையுமெல்லோ மாங்கா மடையராக்கிக் கொண்டிரக்கிறாங்கள்.
சுரேஸ்- டபுள் எம்.ஏ
palli
பல்லிக்கு ஒன்னுமே புரியவில்லை. புதுக்குடியிருப்புக்குள் ராணுவம் நுளைந்து விட்டது. புலிகளுடன் கடுமையான மோதல். பாதுகாப்பு வலயத்துக்குள் எறிகணை தாக்குதல். மோதலில் புலி மட்டுமா மடியும். ராணுவம் என்ன ரம்போவா? சரி அதுதான் நுழைவாசலில் போர்நடக்குதல்லே. பின்பு எதுக்கு பாதுகாப்பு வலயத்தில் தாக்குதல். சிலவேளை புதுகுடியிருப்புக்கு ஏவும் குண்டுகள் கடல்காற்றால் பாதுகாப்பு வலயத்துக்குள் விழுகுதோ. புதுகுடியிருப்பு குடியே இல்லாத பிரதேசமாகும் வரை பாதுகாப்பு வலயத்துக்கு ராணுவம் தாக்குவதை நிறுத மாட்டாது. ஆடேங்கப்பா என்ன ராணுவ தந்தரம்.
பார்த்திபன்
//கடந்த மூன்று நாட்களாக விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1000 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் //புலிகளின் சமர் கட்டளைப் பீடம்//
அநேகமாய் நான் நினைக்கிறன் புலிகள் உந்த இறந்த இராணுவத்தை 1000, 2000 ….5000 எண்டு எண்ணி மினக்கெடக்கேக்கை தான் உந்த இராணுவம் புலிகளின் இடத்தைப் பிடிக்குது போல…