“தடைகளுக்கு மத்தியிலும் நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறோம்.” என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இரத்கம பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இதனை கூறியுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,
உலகில் தற்போது எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்திலும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் நிற்கின்றனர்.
உலகில் பல நாடுகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. எனினும் இலங்கை ஓரளவு அந்த நிலைமையில் இருந்து மீண்டு, தொழிற்சாலைகளை இயக்கி வருகிறது. தடைகளுக்கு மத்தியிலும் நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறோம்.
ஆர்ப்பாட்டங்களை நடத்தி மீண்டும் நாட்டை மூடும் தேவையே எதிர்க்கட்சிக்கு இருக்கின்றது. எனினும் அப்படியான நிலைமை ஏற்பட இடமளிக்கப் போவதில்லை.
எவ்வாறான சவால்கள் வந்தாலும் சௌபாக்கிய நோக்கதை முன்னெடுத்துச் செல்வோம். எதிர்கால சந்ததிக்காக நாட்டை கட்டியெழுப்புவோம் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.