மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள சின்ன உப்போடை பிரதேசத்தில் வீடு ஒன்றில் பூச்சாடியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 19 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று புதன்கிழமை (17) உத்தரவிட்டார்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மட்டக்களப்பு தலைமையக போதை ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவதினமான நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த வீட்டை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது வீட்ன் பூச்சாடி இரண்டில் 3 அரை அடி, மற்றும் 2 அரை அடி உயரமான கஞ்சா செடியை வளர்த்து வந்தை கண்டுபிடித்ததையடுத்து 19 வயது இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்வரை நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 19 திகதிவரை விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதே நேரம் நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே “கஞ்சா செய்கையில் ஈடுபட்டு அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.