‘வன்னியில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை இனப்படுகொலையென வரையறுக்க முடியாது. எல்ரிரிஈ யும் தமிழ் மக்களை கொல்கின்றனர். காயப்படுத்துகின்றனர்.’ மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு : த ஜெயபாலன்

Frances HarrisonCharu Lata Hogg‘வன்னியில் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை இனப்படுகொலையென வரையறுக்க முடியாது. எல்ரிரிஈ யும் தமிழ் மக்களை கொல்கின்றனர் காயப்படுத்துகின்றனர். அதற்கு ஆதாரபூர்வமான ஆவணங்கள் உண்டு’ என சாரு லட்டா ஹொக் பெப்ரவரி 24 (நேற்று) லண்டனில் இடம்பெற்ற பொது விவாதம் ஒன்றின் போது தெரிவித்தார். Sri Lanka – a hollow victory? என்ற தலைப்பில் சுயாதீன ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன்’ ஏற்பாடு செய்திருந்த பொது உரையாடலின் போதே சாரு லட்டா ஹொக் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

பிபிசி சிங்கள சேவைப் பணிப்பாளர் பிரியத் லியனகே இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இவ்வுரையாடலில் இலங்கையில் பிபிசி ஊடகவியலாளராகப் பணியாற்றிய பிரான்ஸஸ் ஹரிசன், தமிழ் ஊடகவியலாளர் பேர்ள் தேவநாயகம், தமிழ் டெமொகிரட்டிக் கொங்கிரஸ் தலைவர் ஆர் ஜெயதேவன் ஆகியோரின் சிற்றுரைகளைத் தொடர்ந்து கேள்விகளுக்கு இடம்கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களது உரையில் இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் கடினமான சூழலை விளக்கியதுடன் இலங்கை அரசு மனித உரிமைகளையும் ஊடகங்களின் அடிப்படை உரிமைகளையும் மீறுவதைச் சுட்டிக்காட்டினர்.

ரிச்சட்டி சொய்சாவின் படுகொலை முதல் இதுவரை 37 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய பேர்ள் தேவநாயகம், அண்மைய காலங்களில் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலேயே ஒரளவு பயமற்ற சூழல் இருந்ததாகத் தெரிவித்தார். இன்றைய ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சி மிகவும் ஆபத்தானதாக இருப்பதாகக் குறிப்பிட்டார். இலங்கை நிலவரம் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் கடைப் பிடிக்கும் போக்கு இலங்கையர்கள் மனிதர்களுக்கு குறைவானவர்கள் என்ற எண்ணத்தில் இயங்குவது போல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர்கள் பங்குபற்றும் இந்நிகழ்வில் தான் கலந்துகொண்டதன் ஊடகப்பின்னணியைக் கூறி ஆர் ஜெயதேவன் தன்னுரையை ஆரம்பித்தார். எல்ரிரியும் இலங்கை அரசும் மனித உரிமைகளை மீறுகின்றன என்றும் ஆனால் இலங்கை அரசு என்ற வகையில் பொறுப்புடன் செயறபடுவது அவசியம் என ஆர் ஜெயதேவன் தெரிவித்தார். இலங்கை அரசு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை வைத்து பொறுப்புடன் செயற்படாத வரை புலிகளும் இருப்பார்கள் என்று குறிப்பிட்ட ஆர் ஜெயதேவன் இலங்கை விடயத்தில் இந்தியா முக்கிய பாத்திரத்தை வகிப்பதாகவும் கூறினார்.

நிர்மலராஜனின் படுகொலையைச் சுட்டிக்காட்டிய பிரான்ஸஸ் ஹரிசன் இலங்கை ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தனது அனுபவத்தினூடாகப் பகிர்ந்து கொண்டார். இலங்கையில் எண்ணை வளம் இல்லை, அணுகுண்டுகள் இல்லை, இலங்கைக்கு பிராந்திய முக்கியத்துவமும் இல்லாததால் இலங்கைப் பிரச்சினை சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்கு வருவதில்லை என்றும் பிரான்ஸஸ் ஹரிசன் தெரிவித்தார்.

சர்வதேச ஊடகவியலாளராக ஆசியாவில் கடமையாற்றிய சாரு லட்டா ஹொக் தெற்காசியாவின் அரசியல் பொருளாதார பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக அரசுக்கும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கும் விளக்கும் பொறுப்புடையவராக இருந்தவர். தற்போது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளராக உள்ளார். இவருடைய உரையின் அடிப்படையே கேள்வி நேரத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொண்டது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச மனிதாபிமானப் பணியாளர்களை வன்னிக்குள் அனுமதிக்காதது, அங்கு நிலவும் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடுகள் பற்றியெல்லாம் குறிப்பிட்ட சாரு ஹொக், அரசாங்கம் நலன்புரி நிலையங்கள் என்ற பெயரில் அரச கட்டப்பாட்டுப் பகுதிக்குள் வருவோரைத் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்த யுத்தத்தில் இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை 2000 பொது மக்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும் 5000 பொது மக்கள் காயமடைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின் போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் கேள்வி எழுப்பிய அர்சுனன் எதிர்வீரசிங்கம் பொஸ்னியா, சூடான் ஆகியவற்றின் உதாரணங்களைக் குறிப்பிட்டு, தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் படுகொலையை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ‘ஏன்? இனப்படுகொலை என்று குறிப்பிடவில்லை’ எனக் கேள்வி எழுப்பினார். இந்நிகழ்வு ஏற்பாடானது முதலே புரொன்ட் லைன் கழகம், பிபிசி, மனித உரிமைகள் கண்காணிகப்பு அமைப்பு ஆகியன இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளை இனப்படுகொலை எனக் கூற மறுப்பதாக எல்ரிரிஈ க்கு ஆதரவான அமைப்புகள் குற்றம்சாட்டி இருந்தன. அதன் தொடர்ச்சி புரொன்ட்லை ஏற்பாடு செய்த நிகழ்விலும் முக்கிய இடத்தைப் பெற்றது.

அர்ச்சுனன் எதிர்விரசிங்கத்துக்குப் பதிலளித்த சாரு ஹொக் ”நான் 2000 பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் 5000 பொது மக்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டது இலங்கை இராணுவத்தினால் மட்டும் ஏற்பட்டது அல்ல. எல்ரிரிஈ யும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி தமிழ் மக்களைக் கொன்றுள்ளனர். காயப்படுத்தி உள்ளனர். இந்நிலைக்கு இரு தரப்புமே காரணம். ஆகையால் இதனை ஒரு இனப்படுகொலை என்று வரையறுக்க முடியாது” எனத் தெரிவித்தார். சாரு ஹொக்கின் இந்தப் பதில் அங்கு வந்திருந்த எல்ரிரிஈ ஆதரவு அமைப்பினருக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.

அடுத்து கேள்வி எழுப்பிய நிமலன் சீவரத்தினம், ”தமிழ் மக்கள் தான் புலிகள். புலிகள்தான் தமிழ் மக்கள். மக்கள் 100 000 பேர் திரண்டு புலிகளை ஆதரிக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலை என்று சொல்கிறார்கள்.” என்று கூறி, ”நீங்கள் சொல்வது சரியா? நாங்கள் சொல்வது சரியா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சாரு ஹொக், ”100 000 பேர் வந்து சொன்னால் எதுவும் உண்மையாகிவிடாது. அதற்கு ஆதாரங்கள் வேண்டும். சர்வதேச விதிமுறைகள் இருக்கிறது. மனித உரிமைகள் அமைப்பு யுத்தத்தில் காயப்பட்டு வந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் பெற்ற வாக்கு மூலங்களின் அடிப்படையிலேயே இதனைக் குறிப்பிடுகிறோம். நீங்கள் அந்த அறிக்கையைப் (War on the Displaced – Sri Lankan Army and LTTE Abuses against Civilians in the Vanni : http://www.hrw.org/sites/default/files/reports/srilanka0209web_0.pdf ) படியுங்கள்” என்று குறிப்பிட்டார்.

இந்த இனப்படுகொலை பற்றிய விவாதம் மீண்டும் மீண்டும் எழுந்தது. ரிஆர்ஓ, பிரிஎப், ரமிழ்ஸ் எகைய்ன்ட்ஸ்ட் ஜினோசைட், ரிவைஓ, தமிழ் பள்ளிகளின் கூட்டமைப்பு என வேறுவேறு அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்வதாகக் குறிப்பிட்டு கருத்து வெளியிட்டவர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளர் சாரு ஹொக்கைத் தனிமைப்படுத்தி அவமதிப்புச் செய்ய முயன்றனர். 30 பள்ளிகள் தங்களுக்குக் கீழ் இயங்குவதாகக் குறிப்பிட்ட ஒருவர் சாரு ஹொக்கிடம் ‘நீர் எப்படி வேலை எடுத்தீர்’ என்று கேள்வி எழுப்பினார். இன்னுமொருவர் ‘முட்டாள்தனமானது’ என்று குறிப்பிட்டடார். மற்றுமொருவர் ‘உங்கள் கைகளில் இரத்தக்கறையுள்ளது அதனை முதலில் கழுவுங்கள்’ என்றார். இவ்வாறு விவாதம் எல்ரிரிஈ ஆதரவு வட்டத்திற்கு உள்ளேயே முடங்கியது. அந்நிகழ்வின் ஓரிடத்தில் பிரான்ஸஸ் ஹரிசன் தனக்கு வந்த மிரட்டல்கள் அவமதிப்புகள் பற்றி குறிப்பிட்டார். தன்னை றோ ஏஜென்ட் என்றவர்கள் பலதையும் கூறியதாக அவர் தெரிவித்தார்.

இடையிடையே இந்நிகழ்வை மீண்டும் பொது விவாதத்திற்கு பிரியத் லியனகே கொண்டு வந்த பொழுது ஏனைய சில கேள்விகளும் எழுப்பப்பட்டது. ‘இந்த யுத்தம் எல்ரிரிஈ இன் முடிவா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரான்ஸஸ் ஹரிசன், ‘எல்ரிரிஈ நிலங்களை இழந்துள்ளார்கள். மிகக் குறுகிய நிலப்பரப்பிலேயே உள்ளனர். ஆனால் ஒரு உறுதியான இராணுவமாகச் செயற்பட்ட அவர்களுடைய கனரக ஆயுதங்கள் எதனையும் இலங்கை இராணுவம் கைப்பற்றவில்லை. அவர்களிடம் அதி விசேட கடற்படைக் கலங்களும் இருந்தது. அவையும் கைப்பற்றப்படவில்லை. புலிகளை அவ்வளவு இலகுவாக அழித்துவிட முடியாது அவர்கள் வேறு வடிவத்தில் வெளிப்படுவார்கள்’ என்ற வகையில் தனது கருத்தை வெளியிட்டார்.

இதே கருத்தை வெளியிட்ட பிரியத் லியனகே அரசாங்கம் ஓடு பாதைகளைக் கைப்பற்றியதாகக் கூறிய பின்னரும் வான் புலிகள் கொழும்பிற்கு வந்துள்ளனர். அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசனுடன் பேசிய போது அவர்கள் வழமைபோல் முழுமையான மறுப்பையே வழங்குவதாகக் கூறி உண்மை நிலையைக் கணிப்பது கடினமானதாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இவற்றைவிடவும் சில கேள்விகள் எழுப்பப்பட்டது. இரு மணி நேரம்வரை நிகழ்வு நீடித்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

46 Comments

  • Kullan
    Kullan

    கொலை செய்த கத்தியுடனும் இரத்தக்கறையுடனும் புலிகள் நின்று கொண்டு எதிரி கொல்கிறான் கொல்கிறான் என்பதில் எந்த நியாயமும் இல்லை. இதை நாம் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வந்திருக்கிறோம். எதிரி செய்வது இனவழிப்பு என்பது எமக்குத் தெரியும். இதை ஆதரிப்பதும் துணைபோவதும் ஊக்கிவிப்பதும் புலிகள் என்பதே உண்மையும் சர்வதேசத்தின் நோக்குமாகும். இப்படி ஒரு விவாதம் வெளிநாட்டவர்களிடம் இருந்து வரும் என்று என்றோ எதிர்பார்த்திருந்தேன். புலிகள் தமிழரைக் கொல்வது மட்டுமல்ல மக்களிடையே ஒழிவதனாலும் எம்மக்களை மனிதக்கேடயங்களாய் பாவிப்பதனாலும் அழிவது எம்மக்கள்தான். உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள். புலிகள் ஆட்சியில் இல்லாத போதே துரோகிகள் என்று கொன்று குவித்த தமிழர்கள் எத்தனை சக இயக்கங்கள் எத்தனை. ஆட்சிக்கு வந்தால் நினைத்துப்பாருங்கள். இனியாவது தமிழ்மக்களே ஒப்புக்கொள்ளுங்கள் சிங்களவர் மட்டுமல்ல புலிகளும் தமிழர்களின் விரோதிகள் துரோகிகள். தமிழ் மக்களே! நீங்கள் இனவழிப்பு என்று சுட்டிக்காட்டும் எதிரியான சிங்கள அரசு செய்யும் அதே வேலையைத்தான் புலிகளும் செய்தார்கள் செய்கிறார்கள். சிங்களவன் செய்தால் இனவழிப்பு புலிகள் செய்தால் தியாயமா? மடைத்தமிழா! மண்டைக்குள் ஏறுகிறதா?

    தயவுசெய்து தேசத்தில் வந்துள்ள இந்தக்கட்டுரையை தேசம் எங்கும் அனுப்புக. உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தமிழனின் மனங்களைத் தட்டட்டும். புலிகள் உள்ள வரை தமிழனுக்கு அழிவு என்பதில் சந்தேகமே இல்லை. புலிகள் எந்த வகையிலும் தங்களை இங்கே நியாப்படுத்த முடியாது. புலிக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தால் என்ன நடக்கும் என்று புரிகிறதா? நீங்கள் தமிழர்களாக பொது மக்களாக ஆர்ப்பாட்டம் செய்திருக்கலாம். புலிக்கொடிகளுடன் போனதால் நீங்களும் இனவழிப்பாளர்கள் தான். புலிக்கொடி தூக்கும் ஒவ்வொருவனும் இனவழிப்பாளனே. மண்வேண்டும் என்று கூறும் புலி மாவியாக்களே! மக்களை விட்டுவிட்டுப் தனியே நின்று போராடுங்கள். முடியுமா உங்களால்? ………

    Reply
  • tharanya
    tharanya

    பொய் சொல்வது. ஒன்றை பத்தாக மிகைப்படுத்தி சொல்வது. இவையெல்லாம் ஐரோப்பியருக்கு பிடிப்பதில்லை. ஐரோப்பியர்களுக்கு இலங்கையில் நடப்பது எதுவும் தெரியாது என்று நினைப்பது முட்டாள்தனம். இந்த உண்மையை எத்தனை தடவை சொன்னாலும் தமிழருக்கு புரிவதில்லை. இலங்கையில் இன அழிப்பு நடக்கிறதென்றால் கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலையகத்தில் வாழும் தமிழர்களுக்கு எதுவும் நடக்கவில்லையே என்ற கேள்விக்கு எம்மால் பதில் சொல்ல முடியாது. சிங்களவர்கள் திட்டம் போட்டிருக்கிறார்கள் என்று வெறும் ஊகங்களை சொல்வதால் எந்த நீதிமன்றமும் கேட்கப் போவதில்லை.

    Reply
  • tamilspeek
    tamilspeek

    1.கியூமன்றைற்ஸ் வோச் 100000 பேர் வந்து சொன்னால் உண்மையாகிவிடாது. ஆனால் இவர்களில் மறைமுகமான தகவலாளர்களாக உள்ள வன்னியில் உள்ள ஒட்டுமொத்த சனத்தொகையில் (250000)25 பேர் சொன்ன தகவல் உண்மையாகிவிட்டது. நடுநிலையாகி விட்டது. இதுதான் உலகம் சொல்லும் ஏன் ஊடகங்கள் சொல்லும் நடுநிலமை. இவர்களின் சோர்ஸ் மட்டும் மிகமிக நம்பிக்கையானது. மூதூரில் அக்சன் பாம் கொலை, திருமலையில் மாணவர்கள் கொலை, சிவராம் முதல் கொண்டு இல்லை இல்லை நிமலராஜன் முதல் கொண்டு லசந்த வரையும், இறுதியாக சத்தியமூர்த்தி வரையும், பரராஜசிங்கம் முதல் சிவமகராஜா வரையும் படுகொலையை இவர்களின் அரசகட்டுப்பாட்டில் உள்ள சோர்ஸ் உம் ஏன் சாருவின் தனிப்பட்ட சோர்ஸ்சும் சரியாக சொல்லவில்லையோ யார் குற்றவாளியென்று, இவற்றின் விசாரணைகள் எந்தமட்டில் உள்ளது? இனி வன்னியில் செத்த 2000 பேருக்கும் எப்ப விசாரணை கமிசன் வைத்து தீர்மானம் எடுக்க போகினம்.முன்னமே நடந்த பல கொலைகள் கியூவில் நிற்குது சாரு அம்மணி.

    2. சாரு அம்மணி வேலைக்கு புதுசு. அவருக்கும் தெரியவில்லை, அதில் கலந்து கொண்ட பேளூக்கும் வரலாறு தெரியாமல் கேள்வி கேட்டவர்களின் நேரத்திலும் பார்க்க அதிகநேரத்தை முன்னுக்கு பின் முரணாக கதைத்துக் கொண்டிருந்ததை பார்த்து இவர்கள் தானா தமிழரின் பிரச்சனையை விவாதிக்க வந்த கனவானுகள் எனநினைக்க தோன்றியது. பேள் முதலில் தனது சொந்த மொழியில் விவாதங்களில் பங்குபற்றி தமிழரின் வரலாற்றை அறிந்து கொள்ளட்டும்.

    3. சாரு, இனப்படுகொலையை வரையறுக்க முடியாது என்பது அவரது அறியாமைதான் காரணம். சிலவேளை அவர் பிறந்திருக்க முன்னரோ அல்லது அவர் இந்த பணிக்கு வர முன்னரே அதையும் விட புலியும் செய்யும் செய்யுது அதனால் இதை இனப்படுகொலையாக கருதமுடியாது என சொல்ல அவருக்கு எந்த தகுதியுமில்லை என்பது உண்மைதான். ஏனெனில் 1958 இல் இருந்து இனப்படுகொலை நடந்து வருகிறது. 1977க்கு பின்னரே தேவையென்றால் புலிகளோ சரி ஏனைய அமைப்புக்களோ சிங்களவரையோ, தமிழரையோ,முஸ்லிம்களையோ கொலை செய்ய தொடங்கினர். ஒரு கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தின் படுகொலையின் எண்ணிக்கையையும், ஒரு விடுதலை அமைப்பு செய்த கொலைகளில் எண்ணிக்கையையும் ஏன் அந்த விடுதலை அமைப்பு செய்தது என்ற ஆய்வையும் செய்யாமல் கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தின் இனப்படுகொலையை இவர் நியாப்படுத்தியது இந்த அமைப்பின் நடுநிலைமையின் அவலட்சணம் துலாப்பாரமாக தெரிகிறது. இதற்கும் மேல் சிங்கள இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் கொன்ற சிங்கள அரசு என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் தங்களை உலகதரத்தில் மேம்படுத்துவதற்காகவும், மனித உரிமையின் பேரால் அறிக்கை சமர்பித்து சம்பாதிப்பவர்கள் என்பது ஒன்றும் பரமரகசியமில்லை. உதாரணத்துக்கு அண்மையில், பிரபல ஊடகநிறுவனம் எனது நண்பரை தொடர்பு கொண்டு இப்போதய நிலவரம் தொடர்பில் செவ்வியொன்றுக்கு அணுகிய போது, நடுனிலமையாக சொல்லவேண்டும், அதாவது கனடாவில் உள்ள அந்த ஊடகவியலாளரின் பெயரை குறிப்பிட்டு அவர் போன்று சொன்னால் தான்நீங்களும் எல்லோரும் மதிக்கும் நடுநிலையான ஆய்வாளராக வரமுடியும் என்ச்சொன்னாராம், இல்லை நான் உண்மையான மக்களின் எண்ணத்தை தான் சொல்லுவேன் என சொல்ல, அதுகளையும் நடுநிலையாக சொல்லப்பார்க்க சொன்னாராம், இருந்த போதும், அவர் சொன்ன எல்லாக்கருத்தும் வராமல் தங்களுக்கு சார்பான கருத்துக்களை மட்டும் விட்டு ஏனையவையை கத்தரித்தது அந்த ஊடகம்.” இதுதான் இவர்களின் நடுநிலை.

    4.பிரியத் உட்பட பிரான்ஸிஸ் கரிசன் நேற்றய கலந்துரையாடலில், நிமலராஜ் தொடர்பில் தமது காலேஜ் என பிரசங்கம் பண்ணினர், ஆனால் அவரின் கொலையாளி இங்கு லண்டனில் சுதந்திரமாக திரியும் போது இவர்களின் சோர்ஸ்களுக்கு லண்டனிலும் பஞ்சமா? அல்லது லண்டனிலும் கொலை அச்சுறுத்தலா? எத்தனை தடவை இது பற்றி பிரியத்துக்கு மின்னஞ்சல், தொலைபேசி ஊடாக இந்த கொலையாளி பற்றி சொல்லப்பட்டுள்ளது. இதற்கும் ஆதாரம் வேண்டுமா? வவுனியாவில் கேஸ்நடந்து கொண்டிருக்கும் போதே களவாக ஓடிவந்த இந்த கொலையாளிக்கு பிரித்தானியாவே புகலிடம் கொடுத்து கொலையாளியை காப்பாற்றி வைத்துள்ளது இதை பிரியத் தனது கலேஜ்க்காக என்ன குரல் கொடுத்தார்? சட்டத்தின் முன் கொலையாளியை லண்டனில் அம்பலப்படுத்தினாரா? பிரியத் ஆதாரங்களை மிகவடிவாக கேட்டுப் பெற்றுக்கொண்டதோடு சரி, பின்னர் என்ன நடவடிக்கை எடுத்தார்? சும்மா நிமலராஜனை வைத்து வியாபாரம் பண்ணும் இந்தநடுநிலை கனவான்களே 2000 பேரின் இனப்படுகொலைக்கு ஆதாரங்களை எந்த தராசில் வைத்துநிறுக்க போகிறீர்கள். அமெரிக்காவின் முன்னாள் சட்டம் தெரிந்த சட்டமா அதிபரே இனப்படுகொலையென விலாவாரியாக 1000 பக்கத்தில் சொல்லிவிட்டார். இனி இனப்படுகொலைக்கு டெபினிசன் தேடப்போகினமாம் கியூமன் ரோங் வோச்?

    Reply
  • tamilspeek
    tamilspeek

    இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக ‌இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலை குறித்து அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்டமா அதிபர் புரூஸ் ஃபெ‌ய்‌ன் அளித்துள்ள வாக்குமூலம் தொடர்பில் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய ‌விவகாரங்களுக்கான அமெரிக்க செனட்சபையின் துணைக்குழு இன்று (25) ‌விசாரணை நடத்தவுள்ளது.

    இலங்கையில் அண்மையில் நடைபெற்றுள்ள வன்முறைகள் பற்றிய எழுத்துமூலமான வாக்குமூலத்தை நேரில் அளிக்குமாறு மத்திய ‌கிழக்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க செனட்சபையின் துணைக்குழு தலைவர் ரொபர்ட் கேசேயின் அலுவலகத்தில் இருந்து தன‌க்கு அழைப்பு வந்துள்ளதாக ஃபெய்ன் தெரிவித்துள்ளார்.

    கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் இனப்படு கொலைகள் தற்போது முன்னரைவிட மாற்றபட்டுள்ளதுடன் அவர்களை தொடர்ந்து தாக்கி இடம்பெயரச் செய்தல், உடல்ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்தை அழித்தல் என்ற வகையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாக புரூஸ் ஃபெய்ன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    அத்துடன் இலங்கையில் உள்ள நடுநிலையாளர்களின் கூற்றுக்களுக்கு இணங்க கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட‌கிழக்கு பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்து ‌உள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இடம்பெயர்ந்து உள்ளவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத் என மதிப்பிடப்பட்டு உள்ளது. சிங்கள பௌத்த அரசாங்கம் போர் நடைபெறும் இடங்களுக்கு செல்ல ஊடகங்களுக்குத் தடை விதித்து‌ள்ளதுடன் தன்னார்வத் தொண்டு ‌நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேற்றியுள்ளது.

    மனிதாபிமானப் பணியாளர்கள் அனைவரையும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சர்வதேச் செஞ்சிலுவைச் ச‌ங்க‌ம், மனித உரிமைக் கண்காணிப்புக் குழு என அனைத்தும் தரப்பினரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். இலங்கை அரசின் தமிழர்கள் அறவே இல்லாத ‌சிங்கள ஆயுதப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கும் மோதலை அவதானிக்க நடு‌நிலையான கண்காணிப்பாளர்களோ, சுதந்திரமான செய்தியாளர்களோ களத்தில்‌‌இல்லை.

    பாதுகாப்பு வலயங்கள், பாடசாலைகள், தேவாலயங்கள், கோயில்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் ‌மீது தினமும் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. குறு‌கிய நிலப்பரப்பில் ‌சிக்கியுள்ள தமிழ்மக்களின் ‌மீது அவர்களை அழிக்கும் நோக்கில் பெரும்பா‌ன்மை ‌சி‌ங்களப் படையினர் செய‌ல்படுகின்றனர் புரூஸ்ஃபெய்ன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் ,இதனை தடு‌க்க‌ப் பின்வரும் நடவடிக்கைகளை அமெரிக்க செனட்சபை மேற்கொள்ள வேண்டும்.

    ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ‌விதிகளின் கீழ் இலங்கைக்கு ச‌ர்வதேச நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்.

    அமெரிக்கச் சட்டங்களின் ‌கீழ் சூடான், ஈரான், ‌சிரியா, கியூபா உள்ளிட்ட நாடுகளை‌ போன்று இலங்கையையும் அரச பயங்கரவாத நாடுக‌ள் பட்டியலில் இணைத்து மேலும் பல தடைகளை விதிக்க வேண்டும். இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜப‌க்ஷ, இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா ஆ‌கியோருக்கு அமெரிக்க‌க்வில் உள்ள சொத்து‌க்களை முடக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளி‌ட்ட இலங்கை அரசின் தலைவர்கள் அனைவருக்கும் விசாக்களை மறுக்க வேண்டும்.

    ஐ.எ‌ம்.எஃப், உலக வங்கி ஆகியன ‌இலங்கைக்கு நிதி உதவி செய்வதை தடுக்க அமெரிக்கா வாக்களிக்க வேண்டும்.

    இலங்கையின் பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டணச் சலுகைகளை ‌நீக்க வேண்டும்.

    இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ சரத் பொன்சேக்கா ஆகியோரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

    இலங்கை இனப்‌பிரச்சனைக்கு சுயாட்சி கொண்ட இரண்டு நிர்வாக அமைப்புகள் என்ற அடிப்படை‌யிலான அரசியல் தீர்வை ஆதரிக்க வேண்டும்.

    இனப்படுகொலையும் அப்பாவித் தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவதும் நிறுத்தப்படும் வரை கொழும்பில் இருந்து அமெரிக்கத் தூதரை திரும்ப அழைக்க வேண்டும் என புரூஸ் ஃபெய்ன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    Reply
  • tharanya
    tharanya

    இந்திய முஸ்லீம்களும் இந்தியாவில் முஸ்லீம் மக்கள் மீது இன அழிப்பு யுத்தம் நடப்பதாக சொல்கிறார்கள். இப்படி உலகம் முழுவதும் நிறையப் பேர் தங்களையும் இன அழிப்பு பட்டியலில் போடும்படி நிர்ப்பந்திகின்றனர்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //அடுத்து கேள்வி எழுப்பிய நிமலன் சீவரத்தினம், ”தமிழ் மக்கள் தான் புலிகள். புலிகள்தான் தமிழ் மக்கள். மக்கள் 100 000 பேர் திரண்டு புலிகளை ஆதரிக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலை என்று சொல்கிறார்கள்.” என்று கூறி, ”நீங்கள் சொல்வது சரியா? நாங்கள் சொல்வது சரியா?” என்று கேள்வி எழுப்பினார்.//

    இப்படியானவர்களின் அதீத கற்பனைகளினால்த் தான் எமது பிரைச்சினைகள் தீர்க்கப்படாமல் நீண்டு கொண்டே போகின்றன. இவருக்கு யார் சொன்னது பிரித்தானியாவில் திரண்ட மக்களனைவரும் புலிகளைத் தான் ஆதரிக்கின்றார்கள் என்று. இப்படி இவர்கள் அந்த மக்களின் ஆதரவை திசை திருப்ப முற்பட்டதால்த்தான், அதன் பின் பிரித்தானியாவில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் மக்கள் திரள்வது குறைந்தது. என்று இவர்களால் வெறும் புலிக்கோசங்கள் இல்லாது அங்கு துன்பப்படும் வன்னி மக்களுக்கு ஆதரவாக புலம் பெயர் மக்களால் ஒரு எழுச்சி மேற்கொள்ளப்படுகின்றதோ, அன்று தான் உலகமும் எம்மைத் திரும்பிப் பார்க்கும்.!!

    Reply
  • VADIVELU
    VADIVELU

    தமிழ்ஸ்பீகுக்கு ஹியூமன் ரைட் வாச் சொன்னது அவர் விரும்பியவாறு அமையவில்லை என்பதற்காக அது உண்மையாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு முன்னாள் செனற்றர் கூறிய கருத்து அவர் விருப்பத்துக்கேற்றவாறு அமைந்து விட்டதால் செனற்றரின் கூற்றை மேற்கோள் காட்டி ஆமோதிக்கிறார்.

    Reply
  • muthu
    muthu

    /சாரு அம்மணி வேலைக்கு புதுசு. அவருக்கும் தெரியவில்லை அதில் கலந்து கொண்ட பேளூக்கும் வரலாறு தெரியாமல் கேள்வி கேட்டவர்களின் நேரத்திலும் பார்க்க அதிகநேரத்தை முன்னுக்கு பின் முரணாக கதைத்துக் கொண்டிருந்ததை பார்த்து இவர்கள் தானா தமிழரின் பிரச்சனையை விவாதிக்க வந்த கனவானுகள் எனநினைக்க தோன்றியது. /

    சாரு இனப்படுகொலையை வரையறுக்க முடியாது என்பது அவரது அறியாமைதான் காரணம். சிலவேளை அவர் பிறந்திருக்க முன்னரோ அல்லது அவர் இந்த பணிக்கு வர முன்னரே அதையும் விட புலியும் செய்யும் செய்யுது அதனால் இதை இனப்படுகொலையாக கருதமுடியாது என சொல்ல அவருக்கு எந்த தகுதியுமில்லை என்பது உண்மைதான்./

    சரியாகச் சொன்னீர்கள் ரமிழ்ஸ்பீக்.
    1 சாரு பிறக்க முதலே புலி அமைப்பு பிறந்திருக்கும். அதேமாதிரித்தான் உந்த ஒபாமாவும். முந்தாநாள்தான் வேலை எடுத்தவர். அவருக்கு என்ன தெரியும்? தேசிய தலைவர் உவருக்கு முதலே பிறந்தவர். தலைவரின் அனுபவம் ஒபாமாவின் வயது.(எந்த அனுபவமென கேட்கக் கூடாது) பிறகு ஏன்தான் இந்த சனங்கள் போய் அவரிட்டை மகஜர் கொடுக்கினம்? ஒபாமாவுக்கும் எங்கட பிரச்சினைபற்ற்க் கதைக்க எந்த தகுதியுமில்லை.

    2. இங்கை ஒருத்தனுக்கும் வரலாறு தெரியுதில்லை. புலிகள்தான் கவனமெடுத்து எல்லாருக்கும் படிப்பிக்க வேணும்.

    /1958 இல் இருந்து இனப்படுகொலை நடந்து வருகிறது. 1977க்கு பின்னரே தேவையென்றால் புலிகளோ சரி ஏனைய அமைப்புக்களோ சிங்களவரையோ தமிழரையோ முஸ்லிம்களையோ கொலை செய்ய தொடங்கினர். /

    3. உங்களுக்குத் தேவையெண்டால் 1958 என்ன அதுக்குப் பின்னும் போய் கதைப்பீங்கள். ஆனால் 1985இனை மட்டும் ஒருத்தரும் கதைக்கப்படாது. ஏன்1958ஜயும் தமிழீழம் கண்டாப்பிறகு கதச்சுக் கொள்ளுவம் எண்டு தள்ளிப் போடலாம்தானே
    4. 1977க்குப்பின் தேவையெண்டால் கொலை செய்யலாமென லைசென்ஸ் தந்ததுயார்?
    என்னவெல்லாம் கதக்கிறீங்கள்.

    Reply
  • tamilspeek
    tamilspeek

    கருணா லண்டனுக்கு வந்தபோது அவரை நீதியின்முன் நிறுத்த முடியாமல் போனபோது இந்த கியூமன் ரைட்ஸ் வோச்சின் சோசுகள் எங்கே மறைந்து கொண்டனர்? யாருக்கு இவைகள் சோஸ் கதை சொல்லுகிறார்கள்.

    இங்கே வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரிய எல்லோரது பொய்களையும் முதலில் ஆய்வு செய்தால் தெரியும் ஏன் இவர்கள் புலியின் தீவிர ஆதரவாளராகவும் குடும்பத்தில் ஒருவர் போராளியாகவோ அல்லது மாவீரராகவோ இருந்து கொண்டே புலியாலும் பிரச்சனை, அரசாங்கத்தாலும் பிரச்சனை எனக்கேஸ் கொடுப்பது தான் இவர்களின் பிரதான சோஸ். இது புலிகளின் அனுதாபிகளின் ஒரு மிக சிறிய உதாரணம். அதே போன்றதே இபோது வன்னியைவிட்டு சூடுபட்டு வந்தவர்களதும், ஏன் சுயமாக வந்தவர்களின் வாக்குமூலங்களும், இவை தான் இவர்களின் இன்னொரு சோஸ். இப்போது புலிகளின் ஆதரவாளர்கள், புலிகளின் முழுக்குடும்பங்களும் ஒரே சேர ஒரு இடத்துக்குள் முடக்கப்பட்டுள்ளனர். புலி தான் மக்கள் நோக்கி செல் அடிக்குது என்று வைத்துக்கொண்டால் அடிப்பவரின் குடும்பமும், பிரபாகரனின் குடும்பமும் கூட கொல்லப்படும். கியூமன் ரைட்ஸீன் கூற்றைப் பார்த்தால் புலிகளின் எல்லாத் தரப்பினருக்கும் கழுத்தில் ஜி.பி.எஸ் கட்டிப்போட்டு அவர்கள் இல்லாத நெட்டாங்கு அகலாங்கு பார்த்துதான் செல் அடிக்கவேண்டும். இல்லையென்ரால் புலியின் கழுத்தில் எலாம் கட்டிவிட்டுதான் செல் அடித்து அப்பாவிகளை கொன்று புலி உலகத்துக்கு மக்கள் கொலை செய்யப்படுகினம் என்று ஸ்கோர் தினசரி காட்டவேண்டும். செல் அடித்தும் விமானம் குண்டுவீசுவதையும் விட தினசரி பல வயோதிபர்கள் அதிர்ச்சியில் இறப்பதும், வயதுபோனவர்களை கட்டிக்காவ முடியாமல் அனாதரவாக விட்டுச்சென்று கைமோசக் கொலைகள் நடப்பதும் கியூமன் ரைட்ஸ் வோச்ச்சுக்கு தெரியாமல் போய்விட்டது. சிலவாரங்களுக்கு முன்னர் ஜரோப்பிய நாடொன்றில் கோமாநிலையில் உள்ளவருக்கு மருந்தை நிறுத்தியதுக்கே பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணிய வெள்ளையின கனவான்களுக்கு தமிழர் கொலை செய்யப்படுவது இனப்படுகொலையாக தெரியவில்லை!!

    Reply
  • Kullan
    Kullan

    ஒருவரது அறிவை வயது தீர்மானிப்பது இல்லை. புலிகளே! கொலைக்குப் பட்டியலை செட்டியில் இருந்து போடுவீர்களா? சிங்களவன் செய்வது இனவழிப்பு என்பது எமக்குத் தெரியும் ஆனால் அதை இனவழிப்பு இல்லை என்று கூறுமளவுக்கு கொண்டு வந்து இன்று விட்டது புலிகள்தான். ஒரே இனமென்பதால் இனவளிப்பு இல்லை என்று வாதாடலாம். அப்போ புலிகளை மாவியாக்கள் என்று கூறலாமா? பணத்துக்காகவும் தான் வாழ்வதற்காகவும் எதையும் செய்பவர்கள் மாவியாக்கள். தானும் தன்னைச்சார்ந்தவர்களும் வாழ்வதற்காக தன்னினத்தையே அழிப்பவனை என்ன என்று சொல்வது? துரோகியா? இனத்துரோகியா? மாவியாவா? இனச் சுத்திகரிப்பாளனா? களையெடுக்கிறோம் என்றீர்களே அதுவும் இனச்சுத்திகரிப்புத்தான். முதலில் நீங்கள் பயிராக இருங்கள் களைகளைப் பற்றிப்பார்க்கலாம்.

    புலிகள் பிரேமாதாசாவிடம் ஆதயும் வாங்கினார்கள்; இரணிலுடன் கைகோத்தார்கள்; பின் ராசபக்சவிடம் பணம்வாங்கி ரணிலைத்தள்ளி விழுத்தினீர்கள். எதிரியான சிங்கள அரசுடன் சேர்ந்து இனச்சுத்திகரிப்பை நடத்துவது புலிகளே தவிர வேறு யாருமில்லை. புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் முஸ்லீம்கள் பட்டியலை தேதிதேதி யாக இங்கே என்னால் தரமுடியும். அவர்களும் தமிழர்கள்தான். தாய்மொழி தமிழ்தான்.

    சிங்களவரசு செய்வது இனவழிப்புத்தான் அதேவேளை புலிகள் செய்வதும் முஸ்லீம்களுக்குச் செய்ததும் இனவழிப்புத்தான். இதை இல்லை என்று யாரும் கூறமுடியாது. புலிகளுக்கு மண்வேண்டும் ஆண்டாண்டு காலமாக இருந்த முஸ்லீம்களுக்கு தம் பகுதியில் இருப்பதற்கு ஒரு குடிசை கூட இருக்கக் கூடாது ஏன்? தமிழைத்தாய் மொழியாகக் கொண்ட ஒவ்வொருவனும் தமிழன்தான் இதை முஸ்லீம்கள் கூட நிராகரிக்கலாம்.

    நான் ஒரு முஸ்லீம் இல்லை என்றாலும் புலிகளின் இன மதச்சுத்திகரிப்பை பட்டியலிடுகிறேன்:
    1.1990 வடமாகாண 75000 முஸ்லீம்களை 50ரூபாவுடன் மட்டும் பாரம்பரிய பிரதேசத்தில் இருந்து கலைத்தது
    2.1985 உன்னிச்சைக்கிராமம் மட்டக்களப்பு: புலிகள் கலைத்தார்ர்கள்
    3.அக்கரைப்பற்று 1.08.1990 அன்று 40 முஸ்லீம் தொழிலாளிகள் கை கால்கள் கட்டப்பட்டு கொல்லப்பட்டனர்.
    4. 2/3.8.1990 மதவாச்சி மஜீட்புரம் 15 முஸ்லீம்கள்
    5. 3ம்திகதி காத்தான்குடி மீரா ஜிம்மா பள்ளிவாசல் 103 இதில் 25 சிறுவர்கள்
    6. சியம்பலாகஸ்கந்தயில் தாக்குதல் இராணுவம் வர தப்பிஒட்டம்
    7.18ம் திகதி சதாம் குசெயின் கிராமம் 31 சிறார்கள்; 27 தாய்மார்கள் 115 ஆண்களும், ஒரு கற்பிணித் தாயின் வயிற்றைக் கிழித்து அதனுள்ளிருந்த குழந்தையை வெளியெடுத்து அதையும் வெட்டியதுடன் தாயின் வயிற்றில் அம்மிக் குழவியை வைத்திருந்தனர்.
    8. 14யூலை ஒன்தாச்சிமடம் புனித ஹஜ் கடமையை முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஹாஜிகள் 69 பேரை புலிகள் கடத்தி கொலைசெய்தனர்
    9. யூலை 19கல்முனை சயனைட் தேனீர்
    10.ஜுன் 23திகதி 90ம் ஆண்டு சம்மாத்துரையில் ஜாரியா மஸ்ஜிதில் 05பேர் கொலை 03பேர் காயம்
    11. யூன் 29 ஒட்டமாவடி ஹிஜார் மஸ்ஜி 6முஸ்லீம்கள்
    12.யூலை 2 அக்கரைப்பற்றில் 14 முஸ்லீம் விவசாயிகள்
    13.ஒகஸ்ட் 12 சம்பாந்துறை 4 விவசாயிகள்
    14.ஒகஸ்ட் 8 அக்கரைப்பற்று
    15. ஏப்ரல் 1992 அழிஞ்சிப்பொத்தானையில் 69
    16. ஏப்ரல் 15 பள்ளியகோடல; அக்பர் புரம்; அகமட் புரம்; பங்குரான ஆகிய கிராமங்களில் 187

    இன்னும் பல பல இங்கே எல்லாவற்றையும் குறிப்பிட இயலாது. பக்கங்கள் போதாது. அத்தனையும் ஆதாரங்களுடன் உள்ளன.
    கண்மூடித்தனமான விசுவாசம் ஒரு வகையில் முட்டாள்தனமே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக ‌இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலை குறித்து அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்டமா அதிபர் புரூஸ் ஃபெ‌ய்‌ன் அளித்துள்ள வாக்குமூலம் தொடர்பில் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய ‌விவகாரங்களுக்கான அமெரிக்க செனட்சபையின் துணைக்குழு இன்று (25) ‌விசாரணை நடத்தவுள்ளது.//- tamilspeek

    புலிகளால் இலங்கை அரசுக்கெதிராக வழக்கு நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட வக்கீல் தனது வாதத்தை அரசுக்கு எதிராகத் தானே வைக்கலாம். வாங்குற காசுக்கு வஞ்சனையில்லாமல் தன் வேலையைச் செய்யிறார். இந்த வழக்கு வெற்றியடையுதோ இல்லையோ இதை வைச்சுப் பலர் கோடீஸ்வரராவது மட்டும் நிச்சயம். அந்த மாதிரி பணச் சேகரிப்பு நடக்குது. அதுவும் இப்ப ஒன்லைன்னிலையே காசு புடுங்க வசதியும் செய்து அதற்கான விளம்பரங்களை எல்லா புலி ஆதரவு இணையத்தளங்களிலும் வெளியிட்டுள்ளார்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //புலி தான் மக்கள் நோக்கி செல் அடிக்குது என்று வைத்துக்கொண்டால் அடிப்பவரின் குடும்பமும், பிரபாகரனின் குடும்பமும் கூட கொல்லப்படும்.//- tamilspeek

    இப்ப என்ன சொல்ல வாறியள் பிரபாகரனின் குடும்பம் பங்கருக்கேயில்லை, மக்களுக்குள்ளே தான் பதுங்கியிருக்கினம் எண்டோ……

    Reply
  • tamilspeek
    tamilspeek

    குலன் புலிகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் பட்டியலில் கூட்டினால் ஆயிரம் வராது, ஆனால் இந்த வருடத்தில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்கள் 1000 தாண்டிவிட்டது. நேற்றுவரை காயப்பட்ட 2000 பேர் திருமலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இதேநேரம்நீங்கள் கூறும் முஸ்லிம்களால் கொல்லப்பட்ட கிழக்கு தமிழர்களின் எண்ணிக்கையின் விபரத்தை முஸ்லிம்களிடம் பெற்றுத்தரவும் குலன். இங்கு கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்காக கவலைப்பட உம்மைபோன்ற பல தமிழர்கள் உள்ளனர் ஆனால் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக முஸ்லிம்கள் கவலைப்பட்டதுமில்லை. அவர்கள் தரப்பிலிருந்து மன்னிப்பு கிழக்கு தமிழரிடம் கேட்டதுமில்லை. யாழ்ப்பாணத்தைவிட்டு முஸ்லிம்கள் துரத்தப்படுவதற்கு அடிகோலிட்டதும் உங்களுக்கு தெரியாமலிருக்கும். அதேபோல் இந்திய இராணுவகாலத்தில் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து தேசிய இராணுவத்தால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் பட்டியலையும் தேடி எடுக்கவும். செட்டிகளும், மாணிக்கதாஸர்களும் என்ன உத்தமர்களா தண்டனை பெறாமல் இருக்க, அல்லது நாளை பிள்ளையானும் கருணாவையும் உங்கள் உத்தமர்கள் பட்டியலில் சேர்ப்பீர்கள் போல் உள்ளது.

    Reply
  • T.Sriram
    T.Sriram

    Congratulations human rights watch. Perfectly told that what is happening is collateral damage not genocide. According to well respected UTHR(J) LTTE has killed more than 25,000 Tamils. As Kulan has said we should call it as Mafia Mass murders. 1983 pogram against Tamil is genocide – I agree. But the present one is collateral damage

    Reply
  • பகீ
    பகீ

    அமெரிக்க செனற் துணைக் குழுவின் முன்னால் நடந்த விசாரணையின் வீடியோ இங்கே…

    http://www.senate.gov/fplayers/CommPlayer/commFlashPlayer.cfm?fn=foreign022409&st=435

    Reply
  • Dylan
    Dylan

    HISTORY OF MASSACRES TAMILS
    1. Inginiyakala massacre – 05.06.1956
    2. 1958 pogramme
    3. Tamil research conference massacre -10.01.1974
    4. 1977 communal pogrom
    5. 1981 communal pogrom
    6. Burning of the Jaffna library -01.06.1981
    7. 1983 communal pogrom
    8. Thirunelveli massacre -24, 25.07.1983
    9. Sampalthoddam massacre – 1984
    10. Chunnakam Police station massacre – 08.01.1984
    11. Chunnakam market massacre – 28.03.1984
    12. Mathawachchi – Rampawa – September 1984
    13. Point Pedro – Thikkam massacre – 16.09.1984
    14. Othiyamalai massacre – 01.12.1984
    15. Kumulamunai massacre – 02.12.1984
    16. Cheddikulam massacre – 02.12.1984
    17. Manalaru massacre – 03.12.1984
    18. Blood soaked Mannar – 04.12.1984
    19. Kokkilai-Kokkuthoduvai massacre – 15.12.1984
    20. Vankalai church massacre – 06.01.1986
    21. Mulliyavalai massacre – 16.01.1985
    22. Vaddakandal massacre – 30.01.1985
    23. Puthukkidiyiruppu Iyankovilady massacre – 21.04.1985
    24. Trincomalee massacres in 1985
    25. Valvai-85 massacre 10.05.1985
    26. Kumuthini Boat massacre 15.05.1985
    27. Kiliveddi massacre in 1985
    28. Thiriyai massacre – 08.06.1985
    29. Sampaltivu – 04 to 09.08.1985
    30. Veeramunai massacre – 20.06.1990
    31. Nilaveli massacre 16.09.1985
    32. Piramanthanaru massacre – 02.10.1985
    33. Kanthalai-85 massacre – 09.11.1985
    34. Muthur Kadatkaraichenai – 08,09,10.11.1985
    35. Periyapullumalai massacre in 1986
    36. Kilinochchi Railway Station massacre – 25.01.1986
    37. Udumbankulam massacre – 19.02.1985
    38. Vayaloor massacre – 24.08.1985
    39. Eeddimurinchan massacre – 19, 20.03.1986
    40. Anandapuram shelling – 04.06.1986
    41. Kanthalai-86 massacre – 04, 05.06. 1986
    42. Mandaithivu sea massacre – 10.06.1986
    43. Seruvila massacre – 12.06.1986
    44. Thambalakamam massacres – 1985, 1986
    45. Paranthan farmers massacre – 28.06.1986
    46. Peruveli refugee camp massacre – 15.07.1986
    47. Thanduvan bus massacre – 17.07.1986
    48. Muthur Manalchenai massacre – 18.07. 1986
    49. Adampan massacre – 12.10.1986
    50. Periyapandivrichchan massacre – 15.10.1986
    51. Kokkadichcholai-87 massacre – 28.01.1987
    52. Paddithidal massacre – 26.04.1987
    53. Thonithiddamadu massacre – 27.05.1987
    54. Alvai temple shelling – 29.05.1987
    55. Eastern University massacre – 23.05.1990
    56. Sammanthurai massacre – 10.06.1990
    57. Xavierpuram massacre – 07.08.1990
    58. Siththandy massacre – 20, 27.07.1990
    59. Paranthan junction massacre – 24.07.1990
    60. Poththuvil massacre – 30.07.1990
    61. Tiraikerny massacre – 06.08.1990
    62. Kalmunai massacre – 11.08.1990
    63. Thuranilavani massacre – 12.08.1990
    64. Eravur hospital massacre – 12.08.1990
    65. Koraveli massacre 14.08.1990
    66. Nelliyadi market bombing – 29.08.1990
    67. Eravur massacre – 10.10.1990
    68. Saththurukkondan massacre – 09.09.1990
    69. Natpiddymunai massacre – 10.09.1990
    70. Vantharamullai-90 massacre – 05, 23,09,1990
    71. Mandaithivu disappearances – 23.08.1990, 25.09.1990
    72. Oddisuddan bombing – 27.11.1990
    73. Puthukkudiyiruppu junction bombing
    74. Vankalai massacre – 17.02.1991
    75. Vaddakkachchi bombing – 28.02.1991
    76. Vantharumoolai-91 – 09.06.1991
    77. Kokkadichcholai-91 massacre – 12.06.1991
    78. Pullumalai massacre – 1983-1990
    79. Kinniyadi massacre – 12.07.1991
    80. Akkarayan hospital massacre – 15.07.1997
    81. Uruthrapuram bombing – 04.02.1991
    82. Karapolla-Muthgalla massacre – 29.04.1992
    83. Vattrapalai shelling – 18.05.1992
    84. Thellipalai temple bombing – 30.05.1992
    85. Mailanthai massacre – 09.08.1992
    86. Kilali massacre -1992, 1993
    87. Maaththalan bombing – 18.09.1993
    88. Chavakachcheri-Sangaththanai bombing – 28.09.1993
    89. Kokkuvil temple massacre & bombing – 29.09.1993
    90. Kurunagar church bombing – 13.11.1993
    91. Chundikulam-94 massacre – 18.02.1994
    92. Navali church massacre – 09.07.1995
    93. Nagarkovil bombing – 22.05.1995
    94. Chemmani mass graves in 1996
    95. Kilinochchi town massacre – 1996-1998
    96. Kumarapuram massacre – 11.02.1996
    97. Nachchikuda strafing – 16.03.1996
    98. Thambirai market bombing – 17.05.1996
    99. Mallavi bombing – 24.07.1996
    100. Pannankandy massacre – 05.07.1997
    101. Kaithady Krishanthi massacre – 07.09.1996
    102. Vavunikulam massacre – 26-09-1996, 15-08-1997
    103. Konavil bombing – 27.09.1996
    104. Mullivaikal bombing – 13.05.1997
    105. Mankulam shelling – 08.06.1997
    106. Thampalakamam-98 massacre – 01.02.1998
    107. Old Vaddakachchi bombing – 26.03.1998
    108. Suthanthirapuram massacre – 10.06.1998
    109. Visuvamadhu shelling – 25.11.1998
    110. Chundikulam-98 bombing 02.12.1998
    111. Manthuvil bombing – 15.09.1999
    112. Palinagar bombing and shelling – 03.09.1999
    113. Madhu church massacre – 20.11.1999
    114. Bindunuwewa massacre
    115. Mirusuvil massacre – 19.12.2000
    The list keeps growing ( 2000-2008 ???). So are tamils living happily in SL?

    Reply
  • palli
    palli

    தமிழ் ஸ்பீக் உமது வாதம் என்ன?
    //செட்டிகளும், மாணிக்கதாஸர்களும் என்ன உத்தமர்களா தண்டனை பெறாமல் இருக்க, //
    இவர்களை நாம் சரியென சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்கு தண்டனை குடுக்க ஒரு வீத தகுதியும் புலிக்கோ பிரபாவுக்கோ இல்லை. அதேபோல் புலம் பெயர் தமிழரையும் நாட்டுக்கு அனுப்ப அயிடியா போடுவது உமது பின்னோட்டத்தில் தெரிகிறது. இவர்களது வரலாறோ அல்லது சிமிசங்களோ தெரிய புத்தகங்கள் படிக்க வேண்டியதில்லை. எம் கண்முன்னே தறுதலைதனம் செய்துகொண்டு விடுதலை என்னும் போலி போர்வைக்குள் வாழ்ந்த வழுகின்ற மிருகங்கள்தான். ஆக இங்கே ஓலமிடும் பலருக்கும் இவை நிழலல்ல நிஜம். இதுவரை பிரபாவும் உளவுகொலை பொட்டரும் ஈழதமிழர்க்கு ஆற்றிய மாபெரும் தொண்டு கொலை கொலை கொலை.

    Reply
  • Suresh-MM.A
    Suresh-MM.A

    டிலான்! அப்படியே தமிழனைத் தமிழன் செய்த மசாக்கர்களையும் பஞ்சியப் பார்க்காமல் எடுத்துப் போடுங்கோ. பெரிய உபகாரமாயிருக்கும். இத்தனை காலம் நான் தேடித் திரிந்த விடையத்தில் பாதியை இங்கே குறிப்பிட்டு எனது பாதி வேலையை முடித்து விட்டீர்கள். நம்மை நாமே போட்டுத் தள்ளியது… அப்புறம் பட்டப்பகலில் வள்ளத்தில் ஏற்றி நாடு கடத்தி கடற்படை கொன்றது… அப்புறம் இப்போ கொன்று கருக்குவது… ப்ளீஸ் டிலான். போற வழிக்குப் புண்ணியமாப் போகும் அந்த லிஸ்டையும் ஒருக்கால் எடுத்துப் போட்டு விடுங்கோ. நம்ம அடுத்த தலைமுறையும் உங்களுக்கு நன்றிக் கடனாயிருக்கும்.

    சுரேஸ்- டபுள் எம்.ஏ

    Reply
  • Suresh-MM.A
    Suresh-MM.A

    ரமில் ஸ்பீக்! கருணா ஐரோப்பா வந்தபோது நீங்களும்தானே செங்கம்பளம் விரித்து பின்னால் வழிஞ்சு திரிஞ்சீங்கள். இல்லையென்று சொல்லுங்கள். ஏன் சொல்ல மாட்டீர்கள். இல்லையென்றுதான் சொல்வீர்கள்.
    கருணா ஐரோப்பா வந்தபோது தலையில் வைத்துக் கொண்டாடித் திரியவில்லையென்று எந்தப் புலிகாரராவது சொல்லட்டும் பார்ப்போம். நீங்கள் அம்மான், தளபதி, தலையின் வலதுகை,…… எண்டு சொல்லேக்க நாங்களும் ஆமாஞ்சாமி போட வேண்டும். பிறகு துரோகி, எட்டப்பன் எண்டு சொல்லுவியள் அதுக்கும் நாங்கள் ஆமாஞ்சாமி போடவேணும். என்ன கூத்து இது?

    சுரேஸ் டபுள் எம்.

    Reply
  • Suresh-MM.A
    Suresh-MM.A

    //புலிகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் பட்டியலில் கூட்டினால் ஆயிரம் வராது//ரமில்ஸ்பீக்.

    ப்பூ.. இவ்வளவுதானா…? தலைவர என்னமோ ஏதோவெண்டு நினைச்சால் ஆக ஆயிரத்துக்குள்ளதானா முஸ்லிம்களப் போட்டுத் தள்ளியிருக்கிறேர்…? எண்டது போல தமிழ்ஸபீக் ஆதங்கப் படுகிறியள் போல இருக்கு…?! அந்தளவுக்க உங்களுக்கு மனிதப் பலியெடுப்பு மலிந்ததாகி விட்டதா…? எப்படித்தான் இப்படியெல்லாம் மனித உயிர்கள் பற்றிய மதிப்பீட்டை சர்வ சாதாரணமாய் எடுத்தவிட்டுப் போக முடிகிறது உங்களால்…? புலிவிசுவாசியாகினால் இப்படியெல்லாம் சிந்தனை மரத்துப் போய் விடுமா? அல்லது இப்படியான கோரச் சிந்தனைகள்தான் புலி விசுவாசத்துக்கான தகுதியா…?

    சுரேஸ்- டபுள் எம்.ஏ

    Reply
  • Kullan
    Kullan

    தமிழ்ஸ்பீக் உங்களுக்கு செட்டியைத் தெரிந்திருக்க சாத்தியமில்லை. அவர் பிரபாவின் காலத்துப் போராளி அவருடைய இயற்பெயர் பற்குணம். இவரிடம் இருந்த பிழை என்னவெனில் பிரபாவை விட திறமைசாலி என்பது தான். நட்புரீதியா கொட்டிலுக்குள் அழைத்து பொட்டுப்போட்டு தாட்ட செட்டியைத்தான் சொல்கிறேன். தாயார் மகன் வருவான் என்று பலவருடங்களாகக் காத்திருந்தார். இவர் சுதுமலையைச் சேர்ந்தவர். புளொட் பிரிந்து போன பின்புதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

    தமிழ்ஸ்பீக்! பிரபாவால் சுடப்பட்டது என்றவுடன் பிள்ளையான கருணா மாதிரி என்று துரோகிகள் பட்டியலில் செட்டியையும் சேர்த்தீர்களே! அதைத்தான் சொல்வது பக்தி வாதம் என்று. எமது சமூகம் இப்படித்தான் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதான் காலம்காலமாக சிங்கள அரசுகள் எம்மை ஏமாற்றுவதற்கும் காரணமாக அமைவது. பக்தி வேறு, விசுவாசம் வேறு.–kullan

    ………………………………………….

    புலிகள் தமிழர்களைக் கொன்றார்கள் என்பதற்காக அரசு செய்யும் இனவழிப்பை நியாயப்படுத்து முயல்வது படு விபச்சாரத்தனமானது. இனவழிப்புக்கு எதிராக மிலோசவிச்சை போரில் குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளியாக்கண்டது கெறில்லாக்கள் இருந்தார்கள் தமக்கு விரும்பாதவர்கள் அவர்களும் அழித்தார்கள். அதுசரியென்றோ அல்லது புலிகளை நியாப்படுத்தவோ வரவில்லை. இங்கு நான் சொல்ல வருவது அரசுக்கு என்று ஒரு பொறுப்பு உள்ளது. இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள்; சட்டம், மனித உரிமைகள் என்பவற்றையும் ஒப்புக்கொண்டு ஒப்புக்கொடுத்தவர்கள் மனிதஅழிப்புக்குக் காரணமாக இருந்தார்கள் என்றால் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்பதையே அது காட்டுகிறது. சரியான முறையில் சரியான ஆதாரங்களையும் ஆவனங்களையும் சரியான இடத்தில் சமர்ப்பிக்கும் பட்டசத்தில் சந்திரிகா கூட குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம்.–kullan

    ……………………………………………………

    பல்லிக்கும் சுரேசுக்கும் நன்றி கூறும் அதே நேரத்தில் பல்லியைப்போல் ஆரூடம் சொல்ல ஆசைப்படுகிறேன். புலிகள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் போது பிரபாவின் தலைமையில் தமிழ்ஈழம் காண்போம் என்றே சொல்வார்கள். அன்று நாம் அதை எதிர்த்தோம் காரணம் ஒரு தனிமனிதன் மேல் சத்தியப்பிரமாணம் எடுப்பது அம்மனிதனின் அழிவின்பின் போராளிகள் மட்டுமல்ல இனமே வலுவிழந்துவிடும். தற்சமயம் தம்பி பிடிபடுவாரானால் மீண்டும் புலிக்குட்டிகளும் புலிப்பக்தர்களும் நிமிர எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். போராட்டங்கள் எதுவுமே ஒரு தனிமனிதனைச் சுற்றி இருக்கக்கூடாது என்பது மநோவியல் உண்மை. மனிதன் மரணம் என்பதைக் கடக்க முடியாதவன் ஒழுங்காகக் கட்டியமைக்கப்பட்ட விடுதலையோ இயக்கமோ மரணமின்றி வாழக்கூடியது. ஒரு இனம் நம்பிக்கை இழப்பது தற்கொலைக்குச் சமானம். அப்படித் தம்பிக்கு ஏதாவது நடந்தால் தமிழினத்தின் தற்கொலைக்கும் தம்பியே காரணமாவார்.–kullan

    Reply
  • Tharanya
    Tharanya

    //அடுத்து கேள்வி எழுப்பிய நிமலன் சீவரத்தினம், ”தமிழ் மக்கள் தான் புலிகள். புலிகள்தான் தமிழ் மக்கள். மக்கள் 100 000 பேர் திரண்டு புலிகளை ஆதரிக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலை என்று சொல்கிறார்கள்.” என்று கூறி, ”நீங்கள் சொல்வது சரியா? நாங்கள் சொல்வது சரியா?” என்று கேள்வி எழுப்பினார்.//

    இந்த எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமான மக்கள் மகிந்தவை ஆதரிக்கிறார்கள். அப்போ மகிந்த சொல்வதெல்லாம் சரியா?

    Reply
  • Suresh-MM.A
    Suresh-MM.A

    //பிள்ளையான கருணா மாதிரி என்று துரோகிகள் பட்டியலில் செட்டியையும் சேர்த்தீர்களே! // குலன்.

    எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்?

    இவர்கள் எந்த வகையில் துரோகிகள் கொஞ்சம் சொல்ல முடியுமா குலன். அரசாங்கத்தோடு நிற்பதாலா? இவர்கள் துரோகிகள் என்றால் துரோகிகளின் பின்னால் அணிதிரளும் மக்களும் துரோகிகள்தானே?

    குலன் குறிப்பிட்டுள்ள இந்த துரோகிகள் என்ற போர்மிலாவுக்குள் யார் யார் அடங்குகிறார்கள்?

    புலியை விமர்சிப்பவர்களை புலிகள் சொல்வதும் இப்படித்தான். அந்த வகையான துரோகிகளா?

    அரசாங்கத்தோடு முன்பு பல்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு ஆட்சியின்போதும் புலிகள் கூட்டுக்கலவி நடாத்தியது நீங்கள் கூறும் இந்தத் துரோகத் தனத்துக்குள் அடங்குமா? அப்படி அடங்குமானால் புலிகள் பின்னால் நிற்கும் மக்களும் துரோகிகள்தானே?

    துரோகிகள் அற்றவர் யாருமே மிஞ்ச மாட்டார்கள் போல் தெரிகிற… மாதிரிக் கிடக்கே குலன்?

    புலி விசுவாசிகளே! தயவு செய்து இந்த முடிச்சை நீங்கள்தான் உங்கள் தலையிடம் கேட்டு அவிழ்க்க வேண்டும்.

    “துரோகிகள்” எந்தெந்த வேலைகளைச் செய்பவர்கள் துரோகிகள்? எனக்குப் பதில் தெரிஞ்சாகணும்.

    சுரேஸ்- டபுள் எம்.ஏ

    Reply
  • tamilspeek
    tamilspeek

    குலன் எனக்கு இந்த போராட்ட வரலாறு தொடர்பாக உங்கள் ஏன் எல்லோரையும் விட மிக துல்லியமாக எல்லா அமைப்புகளையும் பற்றி தெரியும். செட்டி, கல்வியங்காடு. செல்லக்கிளியின் ஒன்றுவிட்ட அண்ணன். சுதுமலை பற்குணம், மட்டக்களப்பு மைக்கல் இது வேறான கதை. செட்டி அநுராதபுரம் சிறையிலிருந்து தப்பிவரும்போது பூநகரில் வைத்து கண்ணாடி பத்மநாதனை இரத்தினகுமாருடன் சேர்ந்து கொலை செய்த வரலாறு தொடங்கி, கழுகுப்படையின் ஜெயாமாஸ்ரர் தொண்டைமானாற்றில் கொலை செய்யப்பட்டது தொடங்கி ——– கருணாவும்,பிள்ளையானும் யார் யாரை கொலை செய்தவர்கள் நேற்று வரை என்பது வரையான எல்லா வரலாறு என்னிடமுள்ளது. நான் சமயம் வரும் போது பட்டியலிடத்தான் போகிறேன். எனக்கு செட்டியின் வரலாறும், செட்டியை தெரியாது எனச்சிம்பிளாக சொல்லி பற்குணத்தின் வரலாறினை திரிக்க முற்படவேண்டாம். பற்குணம் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதற்கும் காரண்மிருக்கு குலன். இந்த செட்டியின் அண்ணாதான் இப்ப வன்னியில் இருக்கும் த.தே.கூ.பா.உறுப்பினர் சதாசிவம்.கனகரட்ணம். இருவாரங்களுக்கு முன்னர்தான் செட்டியின் அண்ணன் இந்தியாவில் இறந்தார். இங்கு சிறி டெலோ தலைவர் உதயனையும், சிறிசபாரத்தினத்தின் அண்ணன் சிறிகாந்தாவையும் கூட ஒன்றாக கண்டுள்ளேன்.

    Reply
  • ganeshan
    ganeshan

    தேசத்தினர்க்கு, ஊடகவியலாளர் சந்திப்பில் விவாதம் திசைமாறிச் செல்லும் கருத்துக்களை தவிர்த்து, கட்டுரைக்குள் உள்ளடங்கக்கூடிய விடயங்களில் கவனம் செலுத்தினீர்கள் என்றால் நல்லது

    Reply
  • போராளி
    போராளி

    /தமிழ்ஸ்பீக் உங்களுக்கு செட்டியைத் தெரிந்திருக்க சாத்தியமில்லை. அவர் பிரபாவின் காலத்துப் போராளி அவருடைய இயற்பெயர் பற்குணம். இவரிடம் இருந்த பிழை என்னவெனில் பிரபாவை விட திறமைசாலி என்பது தான்/

    Thangathurai was not part of the TNT, because he thought Chetti, who was in our group, had been sent to a rehabilitation school for young people and was a thief.

    RAGHAVAN, LTTE’s co-founder with Prabha, TELLS ALL
    http://nitharsanam.net/?p=23296#more-23296

    Reply
  • rajai
    rajai

    இந்த செய்திய வாசிங்க
    “Die with us” rebels tell Sri Lanka’s refugees
    http://www.reuters.com/article/worldNews/idUSTRE51O8DM20090226?rpc=401&feedType=RSS&feedName=worldNews&rpc=401&pageNumber=1&virtualBrandChannel=0

    Reply
  • Kullan
    Kullan

    விவாதம் திசைமாறிப்போகவில்லை. புலிகளையும் இனவழிப்புகளையுமே கதைத்துக்கொண்டிருக்கிறோம். போராளி சொன்னதை தமிழ்ஸ்பீக் கேட்டீர்களா? செட்டி என்ற பெயரில் பலர் உண்டு. நாம் செட்டி என்று தான் பற்குணத்தை அழைப்பது வளக்கம். சரி பற்குணத்தைப் பிரபா போட்டதற்கு சரியான காரணம் செல்லமுடியுமா? பற்குணத்தின் கொலை நடந்தபோது நாம் அந்த ஏறியாவில்தான் நின்றோம் எமக்கு மறைந்தே இவ்வளவும் நடந்தது என்பதை அறிய. இப்போதும் புலிகள் பிழைகளை நியாயப்படுத்துவது போல் பக்தர்களும் செய்கிறீர்கள். பற்குணத்தின் காலத்தில் இருந்தவர்கள் ஏறக்குறைய உயிரோடு எவரும் இல்லை. அந்தக்காலத்தில் எத்தனை பேர் புலிகளில் இருந்தார்கள் என்பதை விரல்விட்டு எண்ணலாம். கருணா பிள்ளையான்யாரையும் நான் நியாயப்படுத்த விரும்பவில்லை.

    சுரேஸ்! நான் தமிழ் பேசும் எவனையும் துரோகி என்று கருதியது கிடையாது. நான் மண் எனும் மண்ணாங்கட்டிப் போராட்டத்தை அடியோடு வெறுப்பவன். தமிழ் இருக்கும் வரைதான் தமிழன் என்று கருதுபவன். தமிழ்ஸ்பீக்குக்கு பதில் சொல்லும் போது தான் அவர்பாணில் அதாவது புலிப்பாணியில் துரோகி என்று எழுதவேண்டி இருந்தது. பற்குணத்தினதும் பிள்ளையான் கருணாவினதும் அரசில், செயற்பாடுகள், கருத்துக்கள் முற்றிலும் மாறுபட்டது. தமிழ் பேசும் ஒவ்வொருவனும் தமிழுக்குத் தொண்டு செய்பவன் என்பது என் எண்ணம் இதனுள் தமிழ் முஸ்லீம்களும் அடங்குவார்கள். அனுராதபுரம் பொலநறுவையில் தமிழர் செறிந்து வாழ்ந்தார்கள் தமிழ்மன்னர் தலைநகர் அமைத்தும் இருந்தார்கள். தமிழ் எங்கே தமிழர் எங்கே? மண் யாரைத்தாங்கி இருக்கிறது. தமிழ் இருக்கும் வரைதான் தமிழர்.நான் கண்ட அவதானித்த துரோகிகள் புலிகளுக்கு யார் யாரைப்பிடிக்க வில்லையோ அல்லது யார் யாரைப் போடப்போகிறார்களோ அவ்வளவு பேரும் துரோகிகள்தான். இதோ போன்றுதான் மற்றய பல இயக்கங்களும் இருந்தன. எல்லாம் அல்ல. துரோகி துரோகி என்று போட்டுத்தள்ளிய அனைத்தும் இனச்சுத்திகரிப்புத்தான் சந்தேகமே இல்லை.

    மேலுள்ள கட்டுரையில் எனக்கு உடன்பாடில்லாத விடயம் அரசால் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் இனச்சுத்திகரிப்பை புலிகளும் தமிழ்இனச்சுத்திச் செய்கிறார்கள் என்பதனூடாக நியாப்படுத்துவது நிஜத்துக்கு முரணானது. என்நோக்கில் புலிகள் செய்வதும் செய்ததும் இனச்சுத்திகரிப்புத்தான் என்பதில் சந்தேகம் இல்லை. புலிகள் தமிழர்களைக் கொல்வதால் இலங்கையில் நடப்பது இனச்சுத்திகரிப்பு இல்லை எனும் வாதத்தை என்னால் ஏற்க முடியாது.

    Reply
  • palli
    palli

    சுரேஸ்;;
    செட்டி ;கருனா; பிள்ளையான் தொடரும் பெயர்பட்டியல்?? இவர்கள் எப்படி துரோகிகள் என்பதுகூட தெரியாமலா இந்த ஆட்டத்தில் பங்குகொண்டீர் வேடிக்கைதான். இருப்பினும் உமது ஆர்வம் கருதி சிலதினங்களில் பல்லி சில வபரம் தருகிறேன்.
    தமிழ் பீக்;;
    உங்களை விட எனக்கு தெரியும் என்பதால் தாங்கள் சொல்லும் செய்தி உன்மையாகிவிடாது. ஒபாமாவை பல்லி கூட நேரில் பார்த்தேன் (படத்தில்) அதுக்காக அவரது வரலாறு பல்லிக்கு தெரியுமா என்ன. கருனாவும் பிள்ளையானும் ஏன் பிரிகிறார்கள் என்பது கூட எமக்கு தெரியவில்லை. சில சம்பவங்கள் எமக்கு உன்மைபோல் தெரிந்தால் கூட அதில் பல மர்மம் அடங்கி இருக்கும். உமக்காக ஒரு பின்னோட்டம் பல்லி விடுகிறேன் படித்துவிட்டு பின்னோட்டம் விடவும். குலனின் பின்னோட்டம் சரியானதுதான் என்பது பல்லியின் கருத்து.

    Reply
  • Suresh-MM.A
    Suresh-MM.A

    பல்லி இவர்கள் எப்படித் துரோகிகள் ஆனார்கள் என்பதல்ல எனது கேள்வி? “இவர்கள் எந்த வகையில் துரோகிகள் கொஞ்சம் சொல்ல முடியுமா?” என்று நான் கேட்பதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் எந்த வகையில் துரோகிகளாகக் கணிக்கப் படுகிறார்களோ அந்த வகையறாவுக்குள் எத்தனை தடவைகள்தான் புலிகள் சமன்பாடு அடைகிறார்கள் என்பதே! புரியுதோ?

    சுரேஸ் டபுள் எம்.ஏ

    Reply
  • mohamed
    mohamed

    //புலிகளால் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் பட்டியலில் கூட்டினால் ஆயிரம் வராது//
    புலிகளால் ஏன் முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும் முஸ்லிம்களுக்கு தீர்ப்பளிக்க புலிகள் யார் ? முஸ்லிம்கள் ஒரு போதும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்லர் ஒன்றிலுமே சம்பந்தப்படாத முஸ்லிம்கள் ஏன் 1000 பேர் கூட திட்டமிட்டு கொல்லப்பட வேண்டும் ? கொல்லப்பட்டவர்களில் அரச அதிபர் அரசியல்வாதி எஸ் எல் ஏ எஸ் பட்டதாரி கல்விமான்கள் வணிகர்கள் எல்லாம் அடக்கம்.

    “முஸ்லிம் மக்களால்” தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. ஆயுதப் போராட்டத்திலும் நம்மபிக்கை வைக்கவுமில்லை.

    புலியில் அல்லது ராணுவத்தில் அல்லது ஏனைய தமிழ் குழுக்களால் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது “தமிழ் மக்களால்” முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக யாரும் குற்றம் சுமத்தவில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் வேறு ஆயுதக் குழுக்கள் வேறு என்பதை முஸ்லிம்கள் நன்றாகப் புரிந்துள்ளார்கள் அதே போல முஸ்லிம்களில் சிலர் கிழக்கில் ராணுவதுடன் சேர்ந்து தமிழ் மக்களை கொலை செய்திருந்தால் அதற்காக முழு முஸ்லிம் மக்களும் எப்படிப் பொறுப்பாவார்கள் ?

    இஸ்லாத்தைப் பொறுத்தவரை “யார் ஒரு மனிதனை அநியாயமாகக் கொலை செய்கிறானோ அவன் இவ்வுலகிலுள்ள முழு மனிதனையும் கொலை செய்தவன்” எனக் குர்ஆன் கூறுகிறது. கொலையைப் பொறுத்தவரை முஸ்லிம்களின் நிலை இதுதான். ஆக கொலையை சமய ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது.கொலை செய்தவன் கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்திடமே மன்னிப்புக் கோரவேண்டும் அவர்கள் மன்னிக்காதவிடத்து அவனுக்குத் தண்டனை கொலைதான்.

    யாழ்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் துரத்தப்பட்டதற்கு காரணம் தெரிந்த நீர் முஸ்லிம்களைத் துரத்தியவரில் தொடர்யுடையவராக இருப்பீர்.சரி யாழ்ப்பாணத்திற்கு காரணம் உண்டு என்றால்
    மன்னாரில் துரத்தியதற்கு ?
    கிளிநொச்சியில் துரத்தியதற்கு ?
    முல்லைத் தீவில் துரத்தியதற்கு ?
    வவுனியாவில் துரத்தியதற்கு ?

    …….செய்வதையும் செய்து விட்டு பதிலும் தயாராக உள்ளது? நானும் பல காரணங்களை பலரின் வாயால் கேட்டிருக்கிறேன். புலிகள் துரத்தியதைவிட பதில்கள் மனதைக் காயப்படுத்துகின்றது.

    Reply
  • Kullan
    Kullan

    கேட்டீர்களா மொகமட்டின் வேதனையை? நியாயமான வேதனை. முஸ்லீம்களை முஸ்லீம் என்று வெறுமனே மதம்சார்ந்து முத்திரை குத்தாதே தமிழ் இனமே! நீ எந்தத்தமிழ் தாய் வயிற்றில் பிறந்தாயோ அதே தமிழ்தாயின் வயிற்றில்தான் எம்நாட்டு முஸ்லீங்களும் பிறந்தார்கள். தமிழர்கள் பலமதங்களைச் சார்ந்து இருக்கிறார்கள். மாறினார்கள் மாறுகிறார்கள். இன்னுமொரு சரித்திர உண்மை தெரியுமா? யாழ்பாணத்தில் தமிழர்கள் புத்தமத்தைத் தழுவியிருந்தார்கள் என்பதற்கு அகழ்வாராட்சிகள் மட்டுமல்ல நான் நேரடியாக கண்டதும் கேட்டதுமான சாட்சிகள் உண்டு. மாதகல் எனும் கடற்கரையோர கிராமத்தை அடுத்த கடற்கரைக்கிராமம் சம்பில்துறை அது ஒருகாலத்தில் சிறு துறைமுகமாக இருந்தது. சங்கமித்திரை எனும் பிச்சுணி அங்குதான் வெள்ளரசமரக் கிளையுடன் வந்தாள் அதற்கான வளைவு நான் நாட்டை விட்டு வெளிக்கிடும் வரை இருந்தது. அவள் கொண்டுவந்து நட்ட அரசமரம்தான் இன்றும் பறாளாய் முருகமூர்த்தி கோவிலடியில் நிற்கிறது. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டு காப்பியம் புத்தகாப்பியங்கள் என்பதை அறிக. சிங்களத்துக்கும் புத்தமதத்துக்கும் உரிய தொடர்பைவிட தமிழுக்கம் புத்தமதத்துக்கம் தொடர்பும் நெருக்கமும் அதிகம் என்பதை முக்கியமாக சிங்களவர் அறிவது முக்கியமானது.

    மொகமட் கூறும் ஒருவிடயத்தை நான் மறுதலிக்க விரும்பகிறேன். கிழக்கில் காரைதீவு போன்ற பல கிராமங்களில் முஸ்லீம்தமிழர் பல இந்துதமிழர்களை கொலை செய்திருக்கிறார்கள். காரைதீவு கண்ணையம்மன் கோவில் மாட்டு இறைச்சியும் இரத்தத்தையும் போட்டு அவமானப்படுத்தினார்கள். இத்துடன் உங்களது கூற்றில் இன்னுமொன்றை மறுதலிக்க விரும்புகிறேன். உங்களது கூற்று
    /கொலை செய்தவன் கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்திடமே மன்னிப்புக் கோரவேண்டும் அவர்கள் மன்னிக்காதவிடத்து அவனுக்குத் தண்டனை கொலைதான்/
    இத்துடன் எனக்கு உடன்பாடில்லை. மன்னிப்புக்கோருவது மனம்திருந்து உணர்ந்து கேட்கவேண்டும். பிரபாவும் குற்றத்தை ஒப்பக்கொண்டவர்தான். நடேசனின் விளக்கப்படி தலைவருக்குத் தெரியாதாம் யாழ்பாணத்தை விட்டு முஸ்லீங்களைக் கலைப்பதற்கு இட்ட உத்தரவை. உங்களது கருத்துபடி கொலைக்கு கொலைதான் தண்டனை அல்ல. கொலைக்கு மன்னிப்பே கிடையாது. ஒரு சாதாரண மனிதனின் உடலில் உள்ள நாடி நாளங்கள் நீளம் சுமார் உலகத்தை சுற்றிக்கட்டப் போதுமானது. சுமார் 30000 மைல்கள் என்று எண்ணுகிறேன். கொலை என்றும் மன்னிக்கப்பட முடியாதது.

    Reply
  • palli
    palli

    //கொலை என்றும் மன்னிக்கப்பட முடியாதது.//
    குலன் பல்லிக்கு இதில் உடன்பாடு இல்லை. கொலைக்கு கொலைதான் சரியான தீர்வெனில் எமது நாட்டில் நடந்த பல கொலை நியாயபடுத்த முடியும். உதாரனதுக்கு சுந்தரத்துக்காக இறைகுமாரன் ;உமை குமாரன்; அவர்களுக்காக யார்?? கொலைக்கு கொலை தீர்வல்ல. சதாமை தூக்கில் போட்டதால் அவர் செய்த அக்கிரமத்தைவிட அவர்மீது அனுதாப அலைதான் இன்று உள்ளது. சதாம் இருந்து இன்று இராக் படும் துன்பத்தை பார்ப்பதைவிட அவருக்கு தூக்குதண்டனை மிக குறைந்த தண்டனைதான். அதே போல் பிரபாவும் ஒரேநாடியில் உயிரைவிட்டால் அவர் தியாகி விடுவார். அவர் செய்த கொடூரங்கள் மறைந்துவிடும். ஆககொலைக்கு இன்னொரு கொலை தீர்வல்ல.

    Reply
  • Kullan
    Kullan

    அன்புடன் பல்லிக்கு! நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள். நான் கூறியதை பாருங்கள் /கொலைக்கு கொலைதான் தண்டனை அல்ல/ இதைதான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். அதாவது கொலைக்குக் கொலை தீர்ப்பல்ல. நீங்கள் நானும் கூறுவது முழுஉண்மை. கொலை என்றும் மன்னிக்கப்பட முடியாதது. இதையே நானும் எழுதியிருந்தேன் தயவு செய்த மீண்டும் ஒருமுறை எனக்காக வாசிக்கவும். இத்தருணம் இறைகுமாரன் சுந்தரம் பற்றிய சில குறிப்புகளைத் தருகிறேன் இறைகுமாரன் படுகொலை உண்மை விளங்காது செய்யப்பட்ட ஒன்று. முக்கிய குறிப்பு சுந்தரமும் இறைகுமாரனும் நல்ல நண்பர்கள் மட்டுமல்ல ஒரே தத்துவார்த்தத்தை மேற்கொண்டவர்கள், சேர்ந்து வேலைத்திட்டங்கள் செய்தவர்கள் இவர்களை நான் நன்கறிவேன். இக்கொலைகள் வெறும் சந்தேகத்தில் செய்யப்ட்டனவோ தவிர உண்மை எதுவும் கிடையாது. பாலமோட்டை சிவத்தை அறிந்திருப்பீர்கள் என்று எண்ணிகிறேன். தமிழன் மேல் தமிழன் செய்யும் எந்தக் கொலையையும் என்னால் மன்னிக்க இயலாது. தண்டனை நீங்கள் சொல்வதுபோல் இருந்து அழுந்தவேண்டும்.

    Reply
  • palli
    palli

    குலன் அதை விட இறைகுமாரனும் உமை குமாரனும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆக தண்டனை என்பது பாலைபோட்டை சிவத்துக்கு கிடைத்து விட்டது என்பது லண்டன் வாழ் சிலருக்கு தெரிய வாய்ப்பு.

    Reply
  • pannagam kannan
    pannagam kannan

    This is normaly incedent in srilanka. But how to save the civilins talking is ok.But thinking is very bad.Please how make save our peoples.

    Reply
  • ashroffali
    ashroffali

    முற்று முழுதாக அழியப் போகும் தருணத்திலும் புலிகளுக்கும் அவர்களின் ஆதரவுகளுக்கும் இன்னும் அகங்காரமும் ஏக பிரதிநிதித்துவ திமிரும் அடங்கவில்லை என்பதற்கு மேற்கண்ட நிகழ்வும் ஒரு சாட்சி.

    //இந்த இனப்படுகொலை பற்றிய விவாதம் மீண்டும் மீண்டும் எழுந்தது. ரிஆர்ஓ பிரிஎப் ரமிழ்ஸ் எகைய்ன்ட்ஸ்ட் ஜினோசைட் ரிவைஓ தமிழ் பள்ளிகளின் கூட்டமைப்பு என வேறுவேறு அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்வதாகக் குறிப்பிட்டு கருத்து வெளியிட்டவர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வாளர் சாரு ஹொக்கைத் தனிமைப்படுத்தி அவமதிப்புச் செய்ய முயன்றனர். 30 பள்ளிகள் தங்களுக்குக் கீழ் இயங்குவதாகக் குறிப்பிட்ட ஒருவர் சாரு ஹொக்கிடம் ‘நீர் எப்படி வேலை எடுத்தீர்’ என்று கேள்வி எழுப்பினார். இன்னுமொருவர் ‘முட்டாள்தனமானது’ என்று குறிப்பிட்டடார். மற்றுமொருவர் ‘உங்கள் கைகளில் இரத்தக்கறையுள்ளது அதனை முதலில் கழுவுங்கள்’ என்றார். இவ்வாறு விவாதம் எல்ரிரிஈ ஆதரவு வட்டத்திற்கு உள்ளேயே முடங்கியது//

    புலிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் ஒரு போதும் மாற்றுக் கருத்துக்களை மதிப்பதில்லை. இன்றைய அவலங்களுக்கு அதுதான் முக்கிய காரணம் என்பதை நான் பல தடவைகள் குறிப்பிட்டிருந்தேன். இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதும் அதுதான்.

    இலங்கையில் இன அழிப்பு நடைபெறுவதாக இருந்தால் அதை ஆதாரங்களுடன் முன் வைக்க முடியுமா என்று நான் உங்களிடம் சவால் விடுகின்றேன்.

    புலிப் பயங்கரவாதிகளின் முக்கிய பிரமுகர் என்றும் பாராமல் தயா மாஸ்டருக்கு சிகிச்சைக்காக கொழும்புக்கு வருகை தர அனுமதி வழங்கிய மனிதாபிமான அரசாங்கம் இந்த அரசாங்கம். அப்படியிருக்க மற்ற சிவிலியன்களை அழிப்பதற்கான எந்த நோக்கமும் அரசாங்கத்திடம் இல்லை. அனைவரும் இலங்கைப் பிரஜைகள் என்பதே இலங்கை அரசாங்கத்தின் தாரக மந்திரமாகும். அதன் காரணமாகவே இந்தியாவுக்கு அகதிகளாக குடிபெயர்ந்த மாணவருக்கும் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இவ்வாறாக அரசாங்கம் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதாபிமானத்தை வெளிக்காட்டியே வந்துள்ளது. ஆனால் புலிகள் தான் இன்று வரை தமிழ் மக்களுக்கு அநியாயங்களை இழைத்து வருகின்றது. இன்றும் கூட புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கு மட்டுமன்றி புலிகளுக்கும் கூட தேவையான அத்தியாவசிய உணவு வகைகளை பல்வேறு சிரமங்களின் மத்தியிலும் தொடர்ச்சியாக வழங்கி வருவது இந்த மனிதாபிமானமுள்ள மகிந்த சிந்தனை அரசாங்கம் தான்.

    Reply
  • Kullan
    Kullan

    அஸ்ரவ்அலி! நாம் புலிகளை விமர்சிக்கிறோம் என்பதற்காக அரசு செய்வதை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகாது. இனவழிப்பை அரசு செய்யவில்லை என்று சொல்கிறீர் இரண்டாமுலகயுத்தத்தில் இராட்சதன் கிட்லர் என்ன செய்தானோ அவனைவிட மோசமாக இராசதபக்ச செய்தார். கிட்லர் வைத்தியசாலைகளில் அகதிகள் முகாங்களில் இராட்சதன் இராசபக்ச குண்டு போடுவது போல் குண்டு போட்டு அப்பாவி மக்களை அழிக்கவில்லை. சும்மா எழுதவேண்டும் என்பதற்காக எழுதாதையும். புலிகளுடனே எவ்வித தொடர்புமில்லாத தமிழ் இளையர்கள் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு தமிழ்பகுதிகளிலும் சிங்களப்பகுதிகளிலும் புதைக்கப்பட்டனர். இது மாதங்களுக்கு முன்பும் நடந்தது. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள். எதுவுமே வாசிப்பதில்லையா? மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு மக்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுக்கவேண்டும். தமிழர்களின் விடுதலை தனிய ஒரு இராசபக்சவில் தங்கியில்லை இன்று இராசபக்ச நாளை இன்னொருவர். புலிகளை அடக்கமுயலும் அரசு ஏன் கொழும்பில் வெள்ளைவான் கோஸ்டியை அடக்கவில்லை முயலவில்லை. வெள்ளைவான் கோஸ்டிக்கம் புலிகளுக்கும் அதிக வித்தியாசம் கிடையாது. 1948ல் இருந்து வந்த சிங்களஅரசுகள் தமிழர்களுக்கு செய்ய வேண்டிய, கொடுக்கவேண்டிய அடிப்படை உரிமைகளைக் கொடுக்கவில்லை. திட்டமிட்ட இனவழிப்பின் ஆரம்பம்தான் சிங்கள சிறீ. சிங்களச்சட்டம். கோடீஸ்வரன் வழக்கு. இன்று பிரபாகரனை உருவாக்கியதும் மாறிமாறி வந்த சிங்கள அரசுதான். ஒரிரு தரவுகளை வைத்துக்கொண்டு சரித்திரத்தைத் தோண்டிப்புதைக்க முற்படவேண்டாம்.

    Reply
  • palli
    palli

    குலன் உமது பின்னோட்டம் பல்லியின் நீண்டநாள் கருத்து ஆகவே உமது பின்னோட்டத்தையே வழி மொழிகிறேன்.பல்லி.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    அஸ்ரப்அலி: ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது பிடித்துத்தின்னத்தான். ராசபக்சபோல்தான் பிரபாகரனும் சொன்னார் தமிழ் மக்களுக்காகப் போராடுவதாக. பிரபாகரன் தமிழ்மக்களைக் கொல்லவில்லையா அழிக்கவில்லையா? எல்லோரும் இலங்கையர் என்ற தாரகமந்திரம் எண்டால் குண்டுகளையும் ஏவுகளையளையும் தமிழ்மக்கள் தலையில் போடுகிறார் ராசபக்ச? ……………………..

    Reply
  • கந்தப்பு
    கந்தப்பு

    //புலிகளை அடக்கமுயலும் அரசு ஏன் கொழும்பில் வெள்ளைவான் கோஸ்டியை அடக்கவில்லை முயலவில்லை// குலன்.

    சரியான கேள்வி கேட்டீர்கள் குலன். ஆனால் “வெள்ளைவான் கோஸ்டிக்கம் புலிகளுக்கும் அதிக வித்தியாசம் கிடையாது” என்று தடாலடியாய் ஒரு உன்னத தலைவனை இந்தக் கோஸ்டிகளோடு ஒப்பீடு செய்வதுதான் புரியவில்லை. முதலில் நீங்கள் எந்தப் பக்கத்தில் என்பதை தெளிவாக்குங்கள். மண்விடுதலைக்கு ஆதரவு போலவும் கதைக்கிறீங்க சில சமயம் எதிர் போலவும் கதைக்கிறீங்க……..

    இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்.

    Reply
  • Thaksan
    Thaksan

    பாலமோட்டை சிவம் லண்டனில் இருக்கிறார் என்று கேள்வி. சுந்தரத்தின் கொள்கைக்காகவல்லாமல் நட்புக்காகவே சுந்தரத்தின் இழப்பில் சிவம் துவண்டார் என்பது செவி வழி கேள்வி. அந்த நேரத்தில் பிரபா குழுவை(அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரை யாரும் பாவிப்பதில்லை என்ற உடன்பாடு பிரபா-உமா பிரிவின்போது செய்யப்பட்டிருந்தது) தேடியலைந்த உமா குழுவிற்கு கிடைத்த கடைநிலை உயிர் தான் இறைகுமாரன்>உமைகுமாரன். இன்றுவரை இறைகுமாரன்>உமைகுமாரன் புலிகளின் மாவீரர் பட்டியலில் இல்லை. அவர்களை பிரபா நினைவுகூர்ந்ததாக வரலாறும் இல்லை. சிவத்தின் தவறுக்கு புளொட் பொறுப்பெடுத்தது. அந்த கொலையின் விசாரணைக்காகவே சிவம் அப்போது இந்தியாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என சந்ததியார் தெரிவித்ததாக ஞாபகம்(அப்போது உமா>பிரபா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தியாவிலேயே தலைமறைவாக இருந்தனர். சுந்தரம் சித்திரா அச்சகத்திற்கு அன்று அந்தநேரத்தில் இருப்பார் என்ற தகவல் இறைகுமாரன் மூலமாகவே பிரபா குழுவிற்கு தெரியவந்தது என்ற சந்தேகம் நியாயமானதாவே பட்டது. இறைக்கும் சுந்தரத்திற்குமிடையே இருந்த உறவை பிரபாவும் ராகவனும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

    Reply
  • ashroffali
    ashroffali

    தமிழ் சமூகம் இவ்வளவு அழிவுகளுக்குள்ளாகியிருக்கும் நிலையிலும் சுயாதீன தகவல்களுக்குப் பதிலாக பக்கச் சார்பான தகவல்களை நம்பிக் கொண்டிருக்கும் பேர்வழிகள் தான் பெரும்பாலும் கருத்துக் களத்தில் மேதாவிலாசத்தை வெளிப்படுத்த முற்படுகின்றார்கள். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை விட வன்னியின் நிலை வித்தியாசமானது. வன்னி மக்கள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதை நம்பாதவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும். நான் நேரடியாக வன்னிக்கு அழைத்துப் போய் நிலைமையை நேரில் பார்த்து வர ஏற்பாடு செய்கின்றேன். எனது சவாலை ஏற்றுக் கொள்ள யாருக்குத் தைரியம் உள்ளது? அதை விடுத்து வெட்டிப் பேச்சு வேண்டாம். …..

    Reply
  • palli
    palli

    எங்களுக்கு தைரியம் குறைவுதான் அதுக்கு பல காரனம் உண்டு. அதை பின்பு ஆறுதலாக இருந்து ஒரு பட்டிமன்றம் சலாமன் பாப்பையா தலமையில் நடத்துவோம். அதுக்கு முன்பு சாத்தியபடதா விடயத்துக்கு சவால் விடுவது மிக பழசு. உங்களால் முடிந்த விடயம் ஒன்றுக்கு பல்லி சவால் விடுகிறது அதை முடிந்தால் முயற்ச்சிக்கவும். நிறைவேறினால் தங்களுக்கு பின்னாலும் சிலர் வரகூடும். ஜயா இந்த தமிழர் அமைப்பு பத்துக்கு கிட்ட கொழும்பில் இருக்கிறார்கள் (உங்களுக்கு கண்டிப்பாக தொடர்பு இருக்க வாய்ப்பு உண்டு) அவர்களில் அமைப்புக்கு ஒருவராய் பத்து பேரை கூட்டி சென்று அங்கு நடக்கும் (அரச கட்டுபாட்டில்) வசதிகளை (வன்முறையை) காட்டி அதன் பின்னும் அவர்கள் அரசு சரியாகதான் செயல்படுகிறது என சொல்லட்டும். அதன் பின் ஜெயபாலனையும் சேனனையும் நமது சார்பாய் அனுப்புவோம். பயப்படவேண்டாம் அமைப்பல்ல ஊடகமாகதான். அதுக்கு முன்பு இந்த வித்தியாகரன் தேசத்துக்கு ஒரு தகவல் தர வேண்டும். இலங்கையில் யாரும் வரலாம் ஒரு பிரச்சனையும் இல்லை. நான் மகிந்தா வீட்டுக்கு விருந்துக்குதான் வெள்ளை வானில் அழைத்து செல்லபட்டேன். இடையில் அன்பின் நிமிர்த்தம் சில நண்பர்கள் தொட்டு விளையாடி விட்டனரென. வித்தியாகரன் பிடிபட்ட செய்தியே பலருக்கு (இலங்கையில்- கொழும்பிலும்தான்) புலம்பெயர் தமிழர் சொல்லிதான் தெரியும். இந்த நிலையில் ஓட்டிறியள் விமானம் புலியைவிட எங்களுக்கு. நண்பரே இருக்கும் இடமோ அல்லது அறிவோ பிரச்சனையல்ல மக்களின் வாழ்க்கை முறையும் அவர்கள்படும் இன்னல்களும் தான் பிரைச்சனை. இதை சொல்லவோ எழுதவோ கொழும்பில் தவம் இருக்க அவசியம் எமக்கு இல்லை. இந்த பின்னோட்டம் சவாலுக்காக எழுதவில்லை.

    Reply
  • செல்லாச்சி
    செல்லாச்சி

    முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாமில் இடம்பெயர்ந்த மக்கள்.
    http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/03/090302_vavuniacamp.shtml

    இவ்விபரமான ஒலிவடிவமும் அதிலுள்ளது.
    http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2009/03/090302_kathircamp?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&bbwm=1

    இந்தப் பின்னூட்டம் நான் யாருக்கும் சார்பாக இடவில்லை. ஒரு தகவல்தான்.

    Reply
  • ashroffali
    ashroffali

    /தமிழர் அமைப்பு பத்துக்கு கிட்ட கொழும்பில் இருக்கிறார்கள் (உங்களுக்கு கண்டிப்பாக தொடர்பு இருக்க வாய்ப்பு உண்டு) அவர்களில் அமைப்புக்கு ஒருவராய் பத்து பேரை கூட்டி சென்று /

    நண்பர் பல்லி நான் எந்த அமைப்புக்களுடனும் தொடர்பைக் கொண்டிருப்பவன் அல்ல. எனவே அதற்கான ஒழுங்கை நீங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு முதல் ஒரு தடவை அவர்களில் ஒருவரையாவது தமிழ்நாட்டு அகதிமுகாம்களுக்கு அனுப்பி அங்குள்ள நிலைமைகளையும் அவதானித்து வரச் செய்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும். அப்போது தான் வன்னியின் நிலைமை பற்றிய தெளிவைப் பூரணமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

    மற்றது சிவில் சமூகத்தினரை அழைத்துச் செல்வதை விட ஊடகத்துறை சார்ந்தோரை அழைத்துச் செல்வதே சிறந்தது என்று நான் கருதுகின்றேன். ஏனெனில் அப்போதுதான் அங்குள்ள உண்மை நிலவரம் ஆவணப்படுத்தப்படும். யாராவது தயாராக இருப்பின் எனது மின்னஞ்சல் முகவரி தரப்பட்டுள்ளது. என்னோடு தொடர்பு கொள்ளவும்.
    ashroffali@gmail.com

    Reply