விடுதலைப்புலிகளை அழித்ததால் உங்களிற்கு கிடைத்தது என்ன என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர்,
தமிழர்களை அழித்தீர்கள். இன்று முஸ்லீம்கள் இலக்காகியுள்ளனர். அடுத்ததாக உங்கள் சொந்த இனமே பலியாகும். கடந்த காலத்தை சிந்திக்காது போனால் இனியும் இது ஐக்கிய இலங்கையாக இருக்காது. ஒற்றையாட்சி சிந்தனை தொடர்ந்தால் நாடு பூஜ்ஜியமாக மாறும்.
இலங்கை ஒற்றையாட்சி சிங்கள பௌத்த நாடு என்ற சிந்தனையில் ஏனைய இனத்தவர்களை எதிரியாக கருதும் மனநிலையில் ஆட்சியாளர்கள் இனியும் பயணிப்பாளர்கள் என்றால் ஒருபோதும் இலங்கை நாடாக மீள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்