ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம், 9 மாதங்களுக்குள், குறிஞ்சாக்கேணி பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பேமசிறி தெரிவித்துள்ளார்.
‘இலங்கையின் வீதிக் கட்டமைப்பின் புதிய தகவல்கள்’ என்ற தலைப்பில், இன்று முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போதே அமைச்சின் செயலாளர் குறித்த விடயத்தை தெரிவித்தாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி களப்பில், மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் விபத்துக்குள்ளாகி, பாடசாலை மாணவர்கள் உட்பட அறுவர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.