தேசத்தை பாதுகாக்கவென வந்த அரசுக்கு வீட்டின் சமையலறையைப் பாது காக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,
முட்டாள் தனமான பேச்சுக்களை நிறுத்தி விட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த நிறுவனங்களுக்கு இதனை விட்டு விட்டுச் செல்ல முடியாது. இரண்டு காரணங்கள் உள்ளன.
எரிவாயு சிலிண்டர் வெடிக்காவிட்டாலும் எரிவாயு கசிவின் மூலமாகத் தான் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
எரிவாயு வெடிப்புகள் காரணமாக உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கணிசமான இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர நுகர்வோர் அதிகார சபை சிஐடி மூலம் முறையான பரி சோதனை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் பின்புறம் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய தொழில்நுட்பம் மூலமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையை மாற்றியதற்கான காரணம் என்ன? யார் மாற்றினார்? அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.