பாகிஸ்தான் – சியால்கோட் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், இனந்தெரியாத குழுவொன்றின் தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இலங்கையரை அடித்துக் கொலை செய்த கும்பல் அவரது உடலை தீயிட்டுக் கொளுத்துவதையும் அதனை வீடியோவில் பதிவு செய்து கொள்வதையும் காண்பிக்கும் வீடியோக்களும் படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், தொழிற்சாலை ஒன்றின் ஏற்றுமதி மேலாளரை தாக்கி, அவரது உடலை எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதிக்கு பலத்த பொலீஸ் குழு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையிலேயே, சம்பவம் குறித்து தெரிவித்துள்ள சியால்கோட் மாவட்ட பொலிஸ் அதிகாரி உமர் சயீத் மாலிக், உயிரிழந்த நபர் இலங்கையர் என தெரிவித்துள்ளார்.