அண்மையநாட்களில் இலங்கையில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக இந்த துஷ்பிரயோக சம்பவங்கள் வெளியே இருந்தல்லாமல் குடும்பங்களினுள்ளிருந்தோ – அல்லது நன்கு அறிமுகமான நபர்களாலோ இடம்பெறுகின்றன என்பது கவலை தருகின்ற விடயமாகும்.
இது போன்றதான சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.
தனது மகளான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து தப்பி செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்குறித்த சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் திங்கட்கிழமை(6) மாலை இடம்பெற்றுள்ளது.
இதன் போது சுமார் 13 வயது மதிக்கத்தக்க மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை இரவு கொழும்பிற்கு தப்பி செல்வதற்காக காத்தான்குடி பஸ் தரப்பிடத்தில் மறைந்திருந்த போது காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைதானவர் 36 வயதுடையவர் என்பதுடன் இவரது மனைவி மத்தியகிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருகின்றமையும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கைதாகிய சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.