அரசாங்கம் பிரதேச தோட்டக் கைத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய நிவாரணத் திட்டத்தை இலங்கை அரச பெருந்தோட்டக் கைத்தொழில் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் அல்கடுவ தோட்டக் கைத்தொழில் நிறுவனம் ஆகிய அரச தோட்ட நிறுவனங்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மக்கள் தோட்ட முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.