இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஆராயப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை தயாராகவிருப்பதாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர், அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். நிறைவேற்று அதிகார முறையை ஒழித்தல் மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் முறையை மீண்டும் அமுல்படுத்தல் போன்ற பிரதான விடயங்கள் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இணக்கம் காணப்பட்டிருப்பதாக அவர் கூறினார்