தென்னிலங்கை சிங்கள தரப்புடன் இணைந்து அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலம் இது தொடர்பில் பேசிய அவர்,
ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஒற்றையாட்சிக்குள் திணிக்கும் சதி வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது. இந்தியாவின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் பேசும் தலைவர்களான மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளமை வேதனையளிக்கின்றது.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் முஸ்லிம் மக்களே பேரினவாதிகளால் இலக்கு வைக்கப்படுகின்றமையை உணர்ந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை செயற்பட வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.