வன்னி நிலவரமும் – புலிகளும் – புலி எதிர்ப்பாளர்களும் – அடுத்த கட்ட அரசியல் நகர்வும் : நாதன் (தேசம்நெற் கருத்தாளர்)

Protest_Genevaமனித அவலங்களை அரசியல் இருப்புக்காக பாசீஸ்டுகள் பயன்படுத்துவதை உலகின் வரலாற்றில் காண முடிகின்றது. இவ்வழியே இலங்கை மண்ணிலும் மக்களின் அழிவை மூலதனமாக வைத்தே அரசியல் இருப்பை உறுதி செய்கின்றனர். மனிதத்தை இழந்த மானிடர்களுக்கு மக்களின் உதிரம் என்பது தமது இருப்பின் பசளையாக மாறுகின்ற போது மக்களின் உயிர்கள் என்பது நுண்ணுயிர்களை விட பெறுமதியற்றதாக இருக்கின்றது. யுத்தவெறியால் இழக்கப்படும உயிர்களுக்கு கணக்கு கொடுக்கும் நிலையை அனைத்து மக்கள் பிரிவினரது உதவியுடன் உருவாக்கப்பட வேண்டும். இவைகள் தான் நீண்ட கால குறிக்கோளாக செயற்பட வேண்டும். இழப்புக்கள் யுத்த வெறி மூலம் மறைக்கப்படுகின்றது.

இழப்புகள் தமிழ் மக்களை மாத்திரம் பாதிக்கவில்லை. இலங்கையின் அனைத்துப் பிரிவினரையும் பாதித்துள்ளது. சிங்கள உழைக்கும் மக்களின் வாரிசுகள் சில சொற்பசலுகைக்காக படைகளில் இழந்து தமது உயிரை விட்டுள்ளனர். இதனால் தமது சொந்தங்களை இழந்த சிங்கள தாய் தந்தையர் தமது பிள்ளைகளை இழந்தது தெரியாது இருக்கின்றனர். யுத்தவெற்றியானது தமது சொந்தங்களை தேடுவதை தற்காலிகமாக முயற்சிக்காதவர்களாக இருக்கின்றனர். யுத்த வெறி ஊட்டப்பட்ட நிலையில் இருக்கின்ற மனேநிலையானது சிங்கள உழைக்கும் வர்க்கம் தமது இழப்புக்களை பற்றி சிந்திக்க காலம் தாழ்த்தப்படுகின்றது. இழப்புக்களை உணர்வதற்கான காலம் தாழ்த்துவதை தவிர்த்துக் கொள்வதற்கு யுத்த நிறுத்தம் என்பது அவசியமானதாகும்.

வன்னியில் இடம்பெறும் அவலத்தை காரணம் காட்டி சர்வதேச நாடுகள் தலையிடும் நிலை தோன்றியுள்ளதை அவதானிக்கு முடிகின்றது. இந்தத் தலையீடு எப்போ? எவ்வாறு? நடைபெறப்போகின்றது என்பதை ஆரூடம் கூற முடியும். மக்கள் காப்பற்றப்படலாம். இவை அவசியமான முன்தேவையாகும். ஆனால் அதனைத் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகள் தான் தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கப்போகின்றது. நாம் சர்வதேச நாடுகளின் சூழ்ச்சியை எவ்வாறு முறியடிக்கப் போகின்றோம் என்பது பற்றி அறிவுறுத்தல் நம்மிடம் மிக முக்கியமான தேவையாகின்றது. இவற்றிற்கான புரிதல் விடுதலைப் புலிகளிடம் உள்ளதா? மக்களிடம் உள்ளதா? ஏன் புலியெதிர்ப்பாளர்களிடம் இருக்கின்றதா?

சிங்கள மக்களை அணிதிரட்டுவதில் உள்ள சிக்கல் சிங்கள மக்கள் தம் இழப்பை அறியாத வண்ணம் யுத்த வெற்றிகள் அவர்களை இனப்பெருமிதத்தினுள் ஆழ்த்தி வைத்திருக்கின்றது. இதற்கு அடிப்படையாக பெரும்பான்மையினர் இனவாதக் கட்சிகளை ஆதரிப்பதும், வர்க்க உணர்வு அற்ற நிலையும் காரணமாகின்றது. இனங்களுக்கிடையேயான ஒற்றுமையை வலியுறுத்தவல்ல மார்க்சீய லெனினிய சிந்தனை கொண்ட கட்சியாக தம்மை சுயவிளம்பரம் செய்யும் ஜே.வி.பியானது இனவாதிகளாக சிதைந்துள்ளனர். சிறுபான்மையினரை யுத்த வெறிகொண்டு ஒடுக்கும் எதிரியை பெரும்பான்மை இனத்தின் பாட்டாளிவர்க்கத்தின் கடமையானது
அன்னியச் சக்திகளின் தலையீட்டு என்பது இன்று தவிர்க்க முடியாத நிலையை அடைந்துள்ளது. இவற்றை எதிர்கொள்ளக் கூடிய கட்டமைப்பு என்பது இலங்கை நாட்டிலேயே இல்லை. இவ்வாறான பிற்போக்குவாதிகளான ஜே.வி.பி, புலிகளினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துரதிஸ்ர நிலையை மாற்றிக் கொள்வதற்கு குறுங்குழுவாத நிலைப்பாட்டை தகற்தெறிவது முக்கியமான செயற்பாடாகும்.

தமிழ் நாட்டில் ஆழும் வர்க்கம் போராட்டத்தை திசை திருப்பியிருந்தனர். அடக்குமுறைக்கு துணைபோகும் சக்திகள் அதனை எதிர்க்கும் சக்திகளின் கவனத்தை திசை திருப்பியிருந்தனர். இவ்வாற ஒரு செயற்பட்ட அடக்குமுறையாளனுக்கு எதிராக திருப்ப முடியாத நிலைதான் இலங்கையில் இருக்கின்றது.

சிறிலங்கா அரசின் யுத்தவெறியை எதிர்க்கொள்ள தேவையானது அனைத்து முற்போக்குவாதிகளிடமும், மனிதநேயவாதிகளிடமும் கடமை சுமத்தப்பட்டுள்ளது. யுத்த நிறுத்தத்திற்கான போராட்டமானது இலங்கை தேசத்தில் அனைத்து மக்கள் மத்தியில் இருந்தும் எதிர்ப்பு வெளியேற வேண்டும். யுத்த எதிர்ப்பிற்கான பரந்த போராட்டங்கள் எதனையும் நடத்தவில்லை அல்லது நடத்த முடியவில்லை. யாழில் நடைபெற்று வன்னி மக்களை விடுதலை செய்யும்படி இ.பி.டி.பியினரால் திரட்டப்பட்ட போராட்டமும், தமிழ் தேசிய கூட்டணியினரும் செய்த போராட்டத்தின் போது புலியெதிர்ப்பணியில் இருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா) யுத்த நிறுத்தத்தைக் கோரும் போராட்டத்தில் இணைந்து கொண்டனர். இவைகள் எல்லாம் புலிகளின் என்ற எல்லைக்குள் சுருங்கி விட்டது.

த.தே.கூட்டமைப்பினரினர் கோரிக்கைக்கு மக்கள் இசையவில்லை எனக் புலியெதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு சுதந்திரமாக சிந்திக்கும் நிலை இருக்குமாயின் தம் சகோதரர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடுமையை எதிர்க்காமல் மக்கள் இருக்கமாட்டார்கள். மக்கள் தாம் தப்பிப்பிழைப்பதையேதான் முதன்மை குறிக்கோளாக கொண்டுள்ளனர். இதனால் தான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழும் மக்கள் புலிகளுக்கும் – யாழில், கிழக்கில், கொழும்பில் வாழும் மக்களும் அரசுக்கும் கட்டுப்பட்டு வாழ்கின்றனர்.

இன்று இளையோர் அமைப்பே போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். இளையோர் தேசியத் தலைவர் பிரபா! புலிகளின் தாகம் தமிழீழம்! புலிகளே ஏகபிரதிநிதிகள்! என்பதை வைத்தே இன்றைய அவலத்தைத் போக்க போராடுகின்றனர். இளையோருக்கேயுடைய போர்க்குணம் என்பது விறுவிறுப்பாக செயற்பட முடிகின்றது. இவர்களுக்கு ஏற்றவாறு செயற்பட முடியாது. (இளையோரின் உழைப்பை உறுஞ்சும் தற்காலிகமாக தலைமை தாங்குவதில் பின்வாங்கியுள்ளது.) இந்தச் சமூக பொருளாதார அமைப்பின் நிமித்தம் ஒதுங்கிவிட்டனர். இளையோரே அதிகாரவர்க்கத்தின் உழைப்புச் சக்திகளாக உருவாகியிருக்கின்றது. இந்த இளையோரை எண்ணி ஆத்திரப்பட முடியவில்லை. அரசியல் உணர்வற்ற நிலையில் இருக்கும் மக்களை எண்ணி ஆத்திரப்பட முடியாதோ அவ்வாறுதான் இளையோர் மட்டிலும் நிலைப்பாடக இருக்கின்றது. இளையோர் மத்தியில் இருந்துவரும் வெறுப்பான வார்த்தை என்னவெனில் எவ்வாறு போராடினாலும் எந்தச் சக்தியும் எமது மக்களுக்கு சாதகமாக காரியமாற்றுகின்றார்கள் இல்லையே என்பதாகும். புலிகளின் ஏகபிரதிநிதித்துவ கருத்தாக்கத்தை வைத்தே தமிழ் மக்களுக்கான உரிமையை அடைவதற்கு குறுக்கீடாக அனைத்து சக்திகளும் ஈடுபடுவர் என்பதை புலிகள் உணர வேண்டும். இவற்றை வெற்றிகொள்ளும் வகையில் தமது ஏகபிரதிநிதித்துவக் கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

ஆனால் இவற்றை உணராது ஜி-ரிவி கண்ணீர் துளிகள் என்ற நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்களிடையே பல தாக்கங்கள் உருவாகியிருக்கின்றன. தொலைக்காட்சியின் தாக்கம் அரசியல் ரீதியாக பார்க்கின்ற போது புலிகளின் அரசியல் போக்கை எவ்வித விமர்சனம் இல்லாது ஏற்றுக் கொள்கின்றார்கள். புலிகளைப் பற்றிய விமர்சனம் என்பது இன்றைய சோகமான நிகழ்வுகள் நடக்கும் காலமாகையால் அவற்றை தவிர்ப்பது நல்லது எனக் கூறுகின்றனர். தொலைக்காட்சியானது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடிக் கொள்ளும் நிலைப்பாட்டில் இருந்து செயற்படுகின்றார்கள்.

தொலைக்காட்சியை திறந்தால் உணர்ச்சிப் பாடல்கள்
தமிழர்களின் ஒற்றுமை
அவலங்களை கொண்ட காட்சிகள்
இழப்புக்களினால் ஏற்படும் சோகம்

இவர்களின் நோக்கமானது இரத்தம் கொதிக்க வேண்டும். உணர்வு பெறவேண்டும் அவலங்களை வெளிக்கொணர வேண்டும். இவைகள் நியாயமானவையாகத் தோன்றினாலும் இது எதிர்வினையாற்றுகின்றது. தமிழ்மக்களின் குடும்பங்களிடையே உளவியல் பிரச்சனை என்பது உருவெடுக்கின்றது. ஏற்கனவே வன்னியில் தமது உறவினரைப் பற்றிய ஏக்கத்திலும், மக்களின் அவலங்களை பார்த்தும், கேட்டும் மக்கள் துயரத்தில் இருக்கையில் உளவியல் பிரச்சனை என்பது சமூகம் தழுவிய பிரச்சனையாக மாறுகின்றது. இழப்புக்களை வைத்தே தமது இருப்பை உறுதி செய்யும் அரசியல் இருக்கையில் இன்னும் இன்றும் மக்களின் துன்பம் துயரத்தை மறுவுற்பத்தி செய்து கொண்டேதான் போகவேண்டும். குறிப்பாக இங்கு உருவாகியிருக்கும் ஆதிக்க வர்க்க சிந்தனாசக்தி கொண்டவர்கள் இன்னும் இன்றும் ஆபத்தானவர்களாவர். புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தல் என்பது துரோகமே.

இன்றைய யுத்தத்தினால் இழக்கப்படுவது புலிகளின் அடிமட்டப் போராளிகள், தேசபக்தர்கள், புலிகளின் குடும்ப உறுப்பினர்கள், அங்கவீனமான போராளிகள் எனவும் பொது மக்களில் நோயாளிகள், வயோதிபர் என எந்த பேதம் இல்லாது பாதிக்கப்படும் மக்களே புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் அரசிடம் சரணடைந்து சாவதை விட புலிகளுடன் இருந்தே சாவோம் எனத் திடத்துடன் இருக்கும் பொது மக்களும் இருக்கின்றார்கள். இந்த முடிவிற்கு காரணம் சிறிலங்கா அரசின் காரணமாக ஏற்பட்ட வடு என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

இவ்வாறு இருக்கையில் எதிரியிடம் போராளிகள் தமது சரணடைவது மாத்திரம் அல்ல. எந்தப் போராளிகளையும் எந்த அடக்குமுறையாளர்களும் தண்டனை கொடுக்க அதிகாரம் இல்லை. தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளை தமது இறைமைக்கு உட்பட்டதை அவர்களே செய்து முடிப்பர். புலிகளின் தவறுகள் கூட தமிழ் மக்கள் இறைமைக்கு உட்பட்ட நிலையில் விசாரணைகள் தமிழ் மக்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும்.

இந்த நிலைப்பாட்டை தவறென்று கூறுபவர்கள் ஈராக்கில் அமெரிக்க படை சென்று சதாமை கைது செய்த போது புலியெதிர்ப்பில் ஓரு பகுதினர் சதாமின் ஆட்சியை கவிட்டதற்கும், மரண தண்டனை வழங்கியதற்கும் எதிர்ப்புக் குரலை தெரிவித்திருந்தன. இதுசரியான நிலைப்பாடு இவ்வாறான நிலைப்பாடே தமிழ் மக்களின் போராட்ட சக்திகள் சம்பந்த பட்டமட்டில் பொருந்தும். ஆயுங்கள் உட்பட கையழிக்க முடியாது. இவைகள் ஒரு அரசியல் தீர்வு வரை முடக்கி வைத்திருக்க வேண்டும். நேப்பாளத்தில் நடைபெற்றது போன்றதான ஒரு ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுத்தலாம்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தல் என்பது துரோகம் இவைதான் சரியான நிலைப்பாடாகும். இன்றைய நிலையில் அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்வது என்பதைப் பற்றிய பிரச்சினை தான் எம்முன்னோக்கி இருக்கின்றது. இந்த நிலைப்பாடாது புலியெதிர்ப்பாளர்கள், ஒடுக்குமுறையாளர்களின் விருப்பத்திற்கு நேர்மாறானது. இவை மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு காரணியாகின்றது. புலிகளின் அதிகாரவர்க்க நிர்வாக கட்டமைப்பு அழிக்கப்படுகின்றது. ஆனாலும் புலிகளில் உள்ள தேசபக்தர்கள் அடிமட்டப் போராளிகள் எல்லோரும் எதிரிகளிடம் சரணடைகின்ற போது அவர்கள் துடைத்தெறியப்படுவார்கள். இவர்கள் சரணடைந்தாலும் இவர்களின் நலனைப் பாதுகாத்தக் கொள்ளத்தக்க ஒரு ஜனநாயக கட்டமைப்பு இல்லை. ஒரு ஜனநாயகக் கட்டமைப்பு என்பது ஒரு பேச்சுவார்த்தை மூலமாக உருவாக்கப்பட வேண்டியதாகும். இவற்றில் சாத்தியமானது சிறுபகுதியில் தன்னும் யுத்த நிறுத்தின் மூலம் இடைக்காலத்துக்கு வாழ விடுவதும். பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் இந்த மக்களின் போராளிகளின் மக்களின் எதிர்காலம் பற்றி பேசி முடிவெடுக்கலாம்.

உடனடியாக செயற்படுத்தப்பட வேண்டியவை :

1. உடனடி யுத்த நிறுத்தம் – படைகளை தத்தம் இடங்களில் நிலைகொள்ளல்
2. நிவாரணம் வழங்கள்
3. உடனடி நீண்டகால தேவையை உறுதி செய்வது.
4. இடம் பெயர்ந்தவர்கள் தத்தம் உறவுகளுடன் மீளவும் இணைந்து கொள்வது
5. பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது
6. புலிகள் ஏக பிரதிநிதித்துவ கோட்பாட்டை கைவிடல் வேண்டும்
7. எவரும் தமது ஆயுதங்களுடன் அரச அல்லது புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் செல்லக்கூடாது.

அரசியல் தீர்வை நோக்கி :

1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம். தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கு என்பதை ஏற்றுக் கொள்ளல் மாத்திரம் அல்லாமல் முஸ்லீம், மலையக மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
2. வட- கிழக்கு இணைப்பு.
3. வடக்கு -கிழக்கு என்னும் போது தமிழ்பேசும் முஸ்லீம்களுக்கான ஒரு அலகு உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில் தீர்வுத் திட்டத்தை ஆராய்வதற்கு முன்னர் சிறுபான்மையினருக்கான ஒரு அரசியல் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதிகளை சிறுபான்மையினரே தெரிவு செய்தல் வேண்டும். இதன் மூலம் இதில் அங்கம் பெறும் உறுப்பினர்கள் தற்காலிகமாக வடக்கு-கிழக்கிற்கு இடைக்காலத்தில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருப்பர். இவர்களை தெரிவு செய்வதற்கான ஒரு தேர்தலை நடத்துவது.

இந்தத் தேர்தலில் புலிகள் உட்பட அனைத்துப் பிரிவினரும் போட்டியிட உரிமை கொடுக்கப்பட வேண்டும். (புலிகளின் ஏகபிரதிநிதித்துவ கருத்தாக்கத்தை வைத்தே தமிழ் மக்களுக்கான உரிமையை அடைவதற்கு குறுக்கீடாக அனைத்து சக்திகளும் ஈடுபடுவர் என்பதை புலிகள் உணர வேண்டும். இவற்றை வெற்றிகொள்ளும் வகையில் தமது ஏகபிரதிநிதித்துவக் கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.)

இவ்வாறு தமிழ் மக்களே தமது அரசியல் பேச்சுவார்த்தைக்கான சபையை உருவாக்கிக் கொள்வதன் மூலம் உள்நாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஆட்சியாளர்களின் எதேர்ச்சாதிகரமாக தீர்வை திணிப்பதை தவிர்க்க முடியும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஆனால் இவற்றை உணராது ஜி-ரிவி கண்ணீர் துளிகள் என்ற நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்களிடையே பல தாக்கங்கள் உருவாகியிருக்கின்றன. தொலைக்காட்சியின் தாக்கம் அரசியல் ரீதியாக பார்க்கின்ற போது புலிகளின் அரசியல் போக்கை எவ்வித விமர்சனம் இல்லாது ஏற்றுக் கொள்கின்றார்கள். புலிகளைப் பற்றிய விமர்சனம் என்பது இன்றைய சோகமான நிகழ்வுகள் நடக்கும் காலமாகையால் அவற்றை தவிர்ப்பது நல்லது எனக் கூறுகின்றனர். தொலைக்காட்சியானது குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடிக் கொள்ளும் நிலைப்பாட்டில் இருந்து செயற்படுகின்றார்கள்.//- நாதன்

    உண்மையில் இந்தக் கண்ணீர்த் துளிகள் நிகழ்ச்சி ஜி-ரிவி மற்றும் தீபம் தொலைக்காட்சிகளில் பிரித்தானிய அமைப்பொன்று காசு சுரண்டுவதற்காக ஆரம்பித்த நிகழ்ச்சி. அந்த அமைப்பு வன்னி மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவென்று காசு சேர்த்தது. அவர்கள் நினைத்தது போலவே ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் (1`50`000) பவுண்டுகளுக்கு மேல் நிதியும் சேர்ந்தது. ஆனால் வன்னிக்கு ஒரு சதமும் பெயரவில்லை. காசு சேர்த்து இரண்டு மாதங்களாகிவிட்டது. என்ன செய்தீர்கள் என்று எவராவது கேட்டீர்களா?? அல்லது கேட்டுப் பிரயோசமில்லை என்று விட்டுவிட்டீர்களா??

    தரிசனமாக இருந்த போது பலதடவை கட்டணத் தொலைக்காட்சியாக்க முயன்று தோல்வியுற்று, இப்போ ஜி-ரிவி க்கு இதே கண்ணீர்த் துளிகள் கைகொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் விளம்பரங்களும் அதிகரிக்க உடனே கட்டணத் தொலைக்காட்சி அறிவிப்பையும் வெளிப்படுத்தி பணம் சேர்க்கத் தொடங்கி விட்டார்கள். சனத்திற்கு எப்படிச் செய்தி சொன்னால் சந்தோசப்படுவினமோ அப்படியெல்லாம் எடுத்து விடுகின்றது. வாற சனமும் அந்தச் செய்திகள் உண்மையோ பொய்யோ என்று கேட்காமல் தமது பங்கிற்கும் எதையாவது எடுத்து விடறதிலையே குறியாக இருக்கினம். மொத்தத்தில் கண்ணீர்த் துளிகள் வன்னி மக்களுக்கு கை கொடுக்குதோ இல்லையோ, அதை நடத்திறவைக்கு ஏராளமாகவே கை கொடுக்கிறது. ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கும் யோகம் தானே !!

    Reply
  • accu
    accu

    நாதன் உங்கள் கட்டுரை எனக்கு விளங்கக் கஷ்டமாய் உள்ளது. இருந்தும் நீங்கள் புலிகள் அழிக்கப்படக் கூடாது என்பதில் மிகத் தெளிவாய் உள்ளது நன்றாகப் புரிகிறது. எனவே நீங்கள் யார் என்பதும் புரிகிறது. மன்னிக்கவும் நாதன் இது காலம் கடந்த ஞானம். எதுவுமே நீங்கள் விரும்புவது போல் நடக்கப்போவதில்லை. இன்றய மக்களின் அழிவைத் தடுப்பதற்க்கோ அன்றி நாளை எமது மக்களின் உரிமைகளை நிலைநாட்டவோ நாம் செய்யவேண்டிய முக்கிய பணி புலிகளை முற்றாக அழித்தொழிப்பதே. இதற்க்கு நாம் புலிகளை எந்த நிபந்தனையுமின்றி ஆயுதங்களை போட நிற்ப்பந்திக்க வேண்டும் இல்லையேல் போர் நடக்கும் இடத்தில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை சுதந்திரமாய் வெளியேற புலிகளை வற்ப்புறுத்துவதோடு மக்களை வெளியேற்ற உதவுவதாய் கூறும் நாடுகளுக்கு எமது ஆதரவை காட்டவேண்டும். இதை மறுதலிப்பவர்கள் புலித் தலைமையின் உண்மை முகம் அறியாதவர்கள் அல்லது விடுதலையின் பெயரால் நடக்கும் லாபகரமான வியாபாரத்தின் பங்குதாரிகள். இவர்கள்தான் உண்மையான ……. இந்த வியாபாரிகள்தான் இன்று நடக்கும் கவனயீர்ப்புகள், ஊர்வலங்கள் அனைத்துக்கும் இளைய சமுதாயத்தை தூண்டிவிடும் பின்னணியில் உள்ளவர்கள்.

    ஒரு விடயத்தை நாம் கவனிக்கவேண்டும் ஆரம்பத்தில் இப்படியான ஊர்வலங்களில் பிரபாகரனின் படங்களையோ அன்றி புலிக்கொடிகளையோ தவிர்த்தவர்கள் இப்போ அவற்றை முன்நிலைப்படுத்தத் தொடங்குகின்றனர். புலிகளின் ஊடகங்களும் அதை ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டனர். காரணம் இந்த நிகழ்ச்சிகள் புலி சம்பந்தப்படாதது என்ற எண்ணம் மக்களிடையே பரவத்தொடங்கியதேயாகும். இதனால் தாம் மக்களிடமிருந்து தனிப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் புலம்பெயர் புலிஆதரவுகளுக்கு. எனினும் அதுதான் நடக்கப்போகிறது.

    // எவரும் தமது ஆயுதங்களுடன் அரச அல்லது புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் செல்லக்கூடாது. // கொஞ்சம் பொறுங்கள் நாதன் புலிக்கட்டுப்பாட்டு பிரதேசம் என்று ஒன்று இருக்காது. // புலிகள் ஏக பிரதிநிதித்துவ கோட்பாட்டை கைவிடல் வேண்டும்// சந்தோசம் இப்பவாவது புரிகிறதா? இவ்வளவு காலமும் எங்கே போனது இந்த அறிவு. இதைத்தான் அடியைபோல அண்ணன் தம்பி உதவான் என்பதா? இந்த ஏகபிரதிநிதித்துவத்துக்காக புலிகள் செய்த கொடுங் கொலைகளுக்கு சீரழிவுகளுக்கெல்லாம் என்ன பதில்? நாதன் நல்ல ஆக்கங்களுடன் வாருங்கள் நிச்சயம் நன்றி சொல்வோம்.

    Reply