நைஜீரியாவிலிருந்து பெற்ற கடனை மீள செலுத்த முடி யாத நிலைமை ஏற்பட்டால் நாட்டிலுள்ள முக்கிய பகுதி களை நைஜீரியாவிற்கு விற்க வேண்டியேற்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
நைஜீரியாவிலிருந்து கடன் அடிப்படையில் மசகு எண் ணெய்யை இறக்குமதி செய்யவுள்ளதாக ராஜபக்ஷ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நைஜீரியாவிலிருந்து பெற்ற கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டால் நாட்டிலுள்ள முக்கிய பகுதிகளை நைஜீரியாவிற்கு விற்க வேண்டியேற் படும் என கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
அத்துடன் இந்த நிலைமை தொடர்ந்தால் கடன் பெற்றுக் கொண்ட அனைத்து நாடுகளுக்கும் இலங்கையின் வளங்களைக் கொடுக்க வேண்டிய நிலையே ஏற்படும் என சிறிகொத்தாவில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டில் தற்போது காணப்படும் டொலர் நெருக் கடிக்குத் தீர்வு காண, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மாத்திரமே முடியும் என ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.