ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் மாறுபாடு தற்போது உலகின் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதில், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
வைரஸில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸ் மற்றும் கடுமையான சுகாதார நடைமுறைகளை கடைபிடிப்பது முக்கியம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில்,ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்ட நபரிடம் காணக்கூடிய முக்கிய எட்டு நோய் அறிகுறிகள் குறித்து வௌிப்படுத்தப்பட்டுள்ளது.
தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், சோர்வு, தும்மல், கீழ் முதுகு வலி, தலைவலி, இரவில் வியர்த்தல் மற்றும் தசைவலி ஆகியவை இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.