இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விசேஷ பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புத்தம்புதிய மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 காரில் பயணம் செய்து வருகிறார்.
சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்திருந்த போது ஹைதராபாத் இல்லத்தில் அவரை வரவேற்க பிரதமர் மோடி முதன்முறையாக இந்த காரில் வந்திருந்தார். அவருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் SPG எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் பரிந்துரையின் பேரில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த கார் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் காரில் VR10 என்ற உயர் ரக பாதுகாப்பு அம்சம் உள்ளது. இக்காரின் விண்டோ கண்ணாடிகள் துப்பாக்கி புல்லட்களாலும், அணுகுண்டுகளாலும் துளைக்கமுடியாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வெடி குண்டு தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. இதுபோன்று மேலும் பல பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த இந்த காரில்தான் பிரதமர் இப்போது பயணிக்கிறார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.