இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1345 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 540 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வானது, நாளை(வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.