இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ”ஆசியாவின் ராணி” (Queen Of Asia) என பெயர் சூட்டப்பட்ட இரத்தினக்கலை கொள்வனவு செய்ய டுபாய் நிறுவனமொன்று விருப்பம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த இரத்தினக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்ய அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இலங்கை பெறுமதியில் 2000 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரத்தினக்கல் பலாங்கொடை பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது