Wednesday, September 29, 2021

சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் (குண்டர் சட்டம்). 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை

seeman.jpgஇயக் குனரும், இலங்கைத் தமிழர் போராட்ட ஆதரவாளருமான திரைப்பட இயக்குனர் சீமானை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (குண்டர் சட்டம்) கைது செய்ய தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.

ஈழத் தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப் பேசிய இயக்குனர் சீமான் மீது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசிதாக காங்கிரஸ் கட்சியினர் கூறிய புகாரின் அடிப்படையில் புதுச்சேரி போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடிக்கொண்டிருக்கும் போதே, சீமான் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடந்த ஈழத் தமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக போலீசார் அறிக்கை சமர்ப்பித்தனர். இந் நிலையில் சீமான் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக வக்கீல்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இங்கும் இந்திய அரசுக்கு எதிராக அவர் பேசியதாக குறிப்பு அனுப்பப்பட்டது. அந்த நேரத்தில்தான் அவரைக் கைது செய்வதற்கு புதுச்சேரி போலீசார் வந்தனர். ஆனால் அதற்குள் சீமான் தனது பேச்சை முடித்துக் கொண்டு அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டார் சீமான்.

இதையடுத்து புதுச்சேரி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அச்சமயம் தானே நேரில் வந்து ஆஜராவதாக சீமான் அறிவித்தார். அதன்படி நெல்லை காவல்துறை ஆணையர் முன்பு சீமான் நேரில் சரணடைந்தார்.

நெல்லை கமிஷனர் மஞ்சுநாதா, சீமானை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சீமானை புதுச்சேரி நீதிமன்றத் தீர்ப்பின் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந் நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதாகக் கூறி சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

க்ரைம் நம்பர் 308/2009,  இந்திய தண்டனை சட்டம் 505, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 13(1), (B), 13(2) ஆகிய சட்டப்பிரிவுகளில் காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் இன்று, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் தமிழக அரசின் உத்தரவை புதுச்சேரி சிறையில் இருக்கும் சீமானிடம் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் வழங்கினார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் சிறையில் அடைக்கப்படுவதால் அவர் 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபடும் எண்ணத்தில் இருந்தார் சீமான். இந்த நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு  சட்டம் பாய்ந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

6 Comments

 • கந்தப்பு
  கந்தப்பு

  ஒரு மாவீரனுக்கு இதெல்லாம் துரும்பு. ஒரு வருடமென்ன.. ஆயுள் முழுவதும் சிறையிலிட்டாலும் அண்ணன் சீமான் துவண்டுவிடப் போவதில்லை. ஒரு வாரத்துக்கு மேலாக பொலிசாருக்குத் தண்ணி காட்டிக்கொண்டு பொது மேடைகளில் பேசி வந்தவர் அண்ணன் சீமான். அவர் நினைத்திருந்தால் தொடர்ந்து அப்படிச் செய்திருக்க முடியும். தமிழ்நாட்டின் சட்டத்தை தானே மதிக்கவில்லையென்றால்… தனது தோழர்களும் மதிக்க மாட்டார்கள் என்ற ஒரே காரணம்தான் அவரை சரணைடைய வைத்தது. புயலை யாராவது சிறையில் அடைக்க முடியுமா என்ன?!

  “நாம் கடக்க வேண்டியது நெருப்பாறு என்பது எமக்குத் தெரியும். ஆனால் அதனைக் கடக்க மக்கள் எனும் கவசம் எம்மிடம் உண்டு” என்று தலைவர் அன்றே சொல்லி வைத்ததை தனது தாரக மந்திரமாய் தலையேற்று களம் இறங்கியவர்தான் அண்ணன் சீமான். வீழ்வோமாயினும் வாழ்வோம்!

  இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்.

  Reply
 • rajai
  rajai

  வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபடும் எண்ணத்தில் இருந்தார் சீமான். இந்த நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

  இப்பதான் புரியுது புலி ஆவெசம் ஏன் வந்தது என்று, கூண்டில் இருக்கும் போதே வோட்டு போடுறத்துக்கு நிறய புலி வாலாட்டிகள் இருக்காங்க… கவலை படாதே சகோதரா.

  Reply
 • கந்தப்பு
  கந்தப்பு

  வோட்டுப் பொறுக்கவேண்டிய தேவையோ அல்லது சராசரி அரசியல்வாதியாகியோ பணம் புகழ் தேடவேண்டிய எந்தத் தேவையும் அண்ணன் சீமானுக்கு இல்லை. அவர் போராளி. தமிழீழத்துக்கொரு தலைவன்போல் தமிழகத்துக்கொரு மறவன்.

  இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்.

  Reply
 • VADIVELU
  VADIVELU

  //நாம் கடக்க வேண்டியது நெருப்பாறு என்பது எமக்குத் தெரியும். ஆனால் அதனைக் கடக்க மக்கள் எனும் கவசம் எம்மிடம் உண்டு” என்று தலைவர் அன்றே சொல்லி வைத்ததை//
  இப்ப அதுதான் நடந்து கொண்டிருக்குது வன்னியில.(மக்களெல்லாம் மனித கேடயங்களாக புலினால் தடுத்து வைப்பு) கவனம் கந்தப்பு நெருப்பாத்த கடக்க கவசத்த(இரும்பு) பயன்படுத்துறது முட்டாள்தனம். ஏனெண்டா அது ஆள வேக வச்சிக் கொள்ளும் இல்லாட்டா நெருப்பாத்துக்குள்ளேயே ஆள அமுக்கி சமாதி கட்டி விடும். இந்த சிம்பிள் லொஜிக் தெரியாதவனெல்லாம் ஒரு தலை.

  Reply
 • palli
  palli

  சீமான் குண்டர் சட்டத்தில் போடுவது நியாயமற்ற செயல். காரனம் சீமானை விட மிக அகோரமாக சிலர் பேசியுள்ளனர். (பெயர் குறிப்படவில்லை பல்லிக்கு ஏன் வம்பு) ஆனால் அவர்களை இப்படி செய்தால் தீக்குளிப்பு பஸ் எரிப்பு என பல தாக்குதல் நடக்கும் என நினைத்த தமிழகஅரசு எல்லோருக்கும் ஒரு மிரட்டல் கொடுக்க சீமானை சாடியுள்ளனர். ஆனால் தமிழக அரசு தெரிந்தோ தெரியாமலோ சீமானை தமிழக மக்கள் மத்தியில் ஒரு அரசியல் நாயகனாக்கி விட்டது என்பதில் மாற்றுகருத்து இருக்கமுடியாது. சிலவேளை சீமான் சிறையில் இருக்கும்போது தமிழக மக்களின் விடுதலை (சுகந்திரம்) பற்றி யோசிக்ககூடும். அப்படி ஏதும் நடந்திச்சு அவருக்கு பின்னால் தமிழகத்தின் தென்னக மக்கள் பலர் பின்தொடர்வார்கள் என்பது திண்ணம். பல்லியை பொறுத்த மட்டில் இது தவறான செயலோ அல்லது தவறான தண்டனையோ என்பதை விட கருனானிதி சோனியாவுக்கு பயப்படுகிறார் என்பதை புரிய வைத்துள்ளார்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  தற்போதய நிலையில் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததை தவறு என்று சொல்வதும் தவறு தான். காரணம் சீமான் பொன்றவர்கள் புலிகளிடம் பணம் பெற்று இன்று தமிழகத்தையே சுடுகாடாக்க முயன்று வருபவர்களில் முக்கியமானவர். ஏற்கனவே இரண்டு முறை கைது செய்யப்பட்டு நிபந்தனைப் பிணையில் வெளிவந்தும் திரும்பத் திரும்ப அதே தவறுகளையே செய்தார். இந்த நிலையில் சீமானை தேசிய பாதுகாப்புத் சட்டத்தில் கைது செய்வதை விட வேறு வழியில்லை என்பதே உண்மை. ஆரம்பத்திலேயே கலைஞர் சில காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமல் மெளனம் காத்ததே இன்று தமிழகத்தில் இன்று பல நெருக்கடியான நிலைகளை உருவாக்கி விட்டது. இன்று வக்கீல்கள் பொலிசாரின் போராட்டமாக உருமாறி தமிழகத்தையே சுடுகாடாக்குவது போல் நிலை மாறுவதை ஒரு அரசு பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

  Reply