11 வயது சிறுமி ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 6 இளைஞர்கள் தலங்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள், 4 ஆண்களும் 2 பெண்களும் உள்ளடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி சிகிச்சைகளுக்காக முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர்கள் இந்த சிறுமியை பலமுறை இரவுநேர விருந்தகங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், அவரை மது அருந்தவும் பழக்கப்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இராஜகிரிய, மட்டக்குளி மற்றும் களனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தரவ்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்களு் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதானது சிறுவர்கள் தொடர்பில் கவலையான அதே நேரம் அச்சமான சூழலையும் உருவாக்கியுள்ளது. மிகக்குறுகிய கால இடைவெளியில் பல துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளது இன்னும் வேதனையளிக்கின்றது. முல்லைத்தீவில் 13 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். வேரு ஒரு இடத்தில் 20 வயது இளைஞனால் இரணஒ்டு சிறுவர்கள் மிருகத்தனமான முறையில் துஷ்பிரயேகப்பட்டிருந்தனர். கடந்த வருடம் 16 வயது சிறுமி முன்னாள் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இது தவிர மாணவர்கள் – சிறுவர்கள் கடந்த வருடம் வீடுகளிலிருந்த பாலப்பகுதியில் அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டதாக மிகக்குறுகிய காலத்தில் சுமார் 8000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைததுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவித்திருந்தது. இந்தப்போக்கு நாளுக்கு நாள் இன்னும் வன்மமான வடிவத்தை எட்டிக்கொண்டிருக்கின்றது. ஊடகங்களும் – அரச துறையினரும் பிரச்சினை காலங்களில் மட்டும் இவற்றை பிரமாண்டப்படுத்தி காட்டிவிட்டு ஒதுங்கிவிடுகின்ற போக்கே தொடர்கின்றது. இதே போக்கு தொடருமாயின் ஒரு பாதுகாப்பற்ற எதிர்கால தலைமுறை உருவாவதையும் – அந்த தலைமுறை நம் கண்முன்னே சீரழிவதையும் காண சபிக்கப்பட்டவர்களாக நாம் இருப்போம்.