அரசாங்கம் பொதுமக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்த முயல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின்
பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாதகமான பொருளாதார நிலைமைக்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்பு. அரசாங்கத்தின் மீது வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்வதாகவும், தரகு கட்டணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும், அரச சொத்துக்களை விற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக நாட்டின் அபிவிருத்தியை தொடர்ந்து சந்தைப்படுத்துகிறது. அண்மையில் இடம்பெற்ற எரிவாயு கசிவுகளால் வீடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதால் எதிர்காலத்தில் பொதுமக்கள் பொருத்தமான தீர்மானத்தை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.