யாழ். மாவட்டத்துக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் தடையின்றி இருபத்துநான்கு மணித்தியாலமும் மின்சாரம் வழங்கக்கூடியதாக இருக்குமென வடபிராந்திய மின்சார சபை அலுவலகம் அறிவித்துள்ளது. குடாநாட்டில் மின்பாவனை அதிகரித்தமையால் கடந்த பதினெட்டு மாதங்களாக மாலை ஆறு மணிமுதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு குடாநாடு முழுவதும் சுழற்சிமுறையில் அமுல் செய்யப்பட்டுவந்த மின்தடை முற்றாக நீங்குமென மின்சார சபையினர் அறிவித்துள்ளனர்.
யாழ். மாவட்டத்துக்கு முப்பத்தைந்து மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் சீன நிறுவனமான “நோத்பவர்’ ஆறு மின் பிறப்பாக்கிகளில் மூன்று மின் பிறப்பாக்கிமூலம் பன்னிரெண்டு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்து வழங்குவதால், மின்தடை நீங்க வழியேற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது, குடாநாட்டுக்கு பதினைந்து மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்கும் பிரிட்டிஷ் நிறுவனத்தின் ஒப்பந்தகாலம் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பதால், இரு நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குடாநாட்டுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க போதுமானதாகவுள்ளது. இவற்றுக்கு மேலாக சுன்னாகத்திலுள்ள மின்சார சபை மூன்று மெகாவாட் மின்சாரத்தையும், காங்கேசன்துறையில் மூன்று மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்துவருகின்றன
rajai
அடிக்கடி இப்படி நல்ல நல்ல செய்தியா சொல்லுங்கப்பா…
யுத்தம் முடின்சி போச்சி என்ட செய்தி எப்போ சொல்லுவீங்க?…..