கடந்த இரண்டு வருட கால ஆட்சியில் இலங்கை வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாக குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர்,
போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டுக் கையிருப்பு வளர்ந்துள்ளது. அதற்குக் கீழே இலங்கை இருக்கின்றது. இன்று தெற்காசியாவிலேயே மிகவும் வங்குரோத்து நாடாக இலங்கை மாறியுள்ளது.
இந்த வருடமும் இந்த ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளார். நிச்சயமாக. எனவே, இனியும் மக்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொள்ள முடியாது. போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் கூட வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரித்துள்ளது.
தெற்காசியாவிலுள்ள அனைத்து நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் வெளிநாட்டுக் கையிருப்பு 79 வீதத்தால் குறைந்துள்ளது. இரண்டு வருடங்களாக நாடு வங்குரோத்தாகி விட்டது. இரண்டு வருட ஆட்சி நாட்டுக்கு சாபமாகிவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.