Wednesday, September 29, 2021

”எல்ரிரிஈ யின் யுத்த நிறுத்தத்தை இலங்கை ஏற்க வேண்டும்” இந்தியா

Pranab_Mukherjeeஎல்ரிரியின் யுத்த நிறுத்தத்தை இலங்கை ஏற்க வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணர்ப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இச்செய்தியை ஐஏஎன்எஸ் வெளியிட்டு உள்ளது. இவர் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசு மறுத்திருந்த நிலையில் இந்த வேண்டுகோள் இன்று (பெப்ரவரி 28) மீண்டும் விடுக்கப்பட்டு உள்ளது. எல்ரிரி, இன் இந்த யுத்த நிறுத்த அழைப்பு தங்கள் ஆயுதங்களைப் போடுவதற்கு சற்றுக் குறைவானதாக இருக்கலாம் ஆனாலும் எங்களது நிலைப்பாடு இலங்கை அரசு இந்த யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

யுத்தப்பகுதியில் சிக்குண்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான பாதுகாப்பான வழியை ஏற்படுத்தி அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான உடனடி வேலைகளை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கேட்டுக் கொள்வதாகவும் வெளிநாட்டு அமைச்சர் பிரணர்ப் முகர்ஜி தனது வேண்டுகொளில் குறிப்பிட்டு உள்ளார்.

எல்ரிரிஈ உடனான இந்த யுத்தத்தை இந்தியாவே பின்னின்று நடத்துவதாக பெரும்பாலான இராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் இந்தியாவிடம் இருந்து வந்துள்ள இந்த வேண்டுகோள் அரசியல் பலமுடையதா அல்லது சர்வதேச கண்டனங்களுக்காக விடுக்கப்பட்ட கண்துடைப்பு வேண்டுகொளா என்பது இன்னும் சில மணி நேரங்களில் அல்லது நாட்களில் தெரியவரலாம்.

இந்திய வெளிநாட்டு அமைச்சர் பிரணர்ப் முகர்ஜி வன்னி யுத்தத்தில் சிக்குண்டுள்ள 70000 மக்கள் பற்றிய கரிசனையின் அடிப்படையிலேயே இந்த வேண்டுகோளை விடுவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். எல்ரிரிஈ தங்களது கட்டப்பாட்டுப் பிரதேசத்தில் 300000 மக்கள் உள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர். யுஎன் உட்பட சர்வதேச அமைப்புகள் யுத்த பிரதேசத்திற்குள் உள்ள மக்களின் எண்ணிக்கை 200000 என்று மதிப்பிடுகிறது. ஆனால் இலங்கை மற்றும் இந்திய அரசுகள் 70000 பேர் மட்டுமே யுத்தப் பிரதேசத்தினுள் சிக்குண்டு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் மருத்துவக் குழுக்களையும் மருத்துவப் பொருட்களையும் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கியுள்ளதாக இந்தியா அறிவித்து இருந்தது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

5 Comments

 • rijai
  rijai

  என்ன சேர் ! தமிழ் நாட்டிக்கு போனதும் பட்டென்னு மாறிட்டிங்க… எல்லாம் அரசியல்தான்…நடத்துங்க… நடத்துங்க

  Reply
 • கந்தப்பு
  கந்தப்பு

  “நாங்க சொல்லுற மாதிரி சொல்லுறம் நீங்க கேட்காத மாதிரியே இருங்கோ” இதுதானே முகர்ஜி சாப் உங்க ஐடியா?
  இப்படிக்கு உண்மையுள்ள கந்தப்பு பெருமாள்.

  Reply
 • palli
  palli

  உங்களுடைய திருவிளையாடல் தமிழகத்துக்கு மட்டுமல்ல உலகுக்கே தெரிய தொடங்கிவிட்டது. இது இந்தியா முழுவதும்தெரிய வரும்போது. பொற்கோவிலில் ராணுவத்தை அனுப்ப அனுமதித்த அன்றய ஜனாதிபதி (இந்திய) ஜெயின்சிங் பின்புதான் தன் சமூகத்துக்கு செய்த தவறை உனர்ந்து மிகமோசமான ஒரு தண்டனையை தானாகவே முன் வந்து அனுபவித்தார். அந்த நிலை தங்களுக்கும் வரலாம். பிரபாவும் மகிந்தாவும் முட்டாள்தனமான முடிவுகள் எடுக்கிறார்கள் என்பதால் அவர்களுடன் போட்டிக்கு தாங்களும் சில தவறான முடிவுகளை எடுப்பதாக அரசியல் தெரிந்த பிரமுகர் சொல்லுகினம். அது ஏன்??

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  கவலைப்படாதேங்கோ. யுத்தம் முடிய யுத்த நிறுத்தம் தானே வரும். அப்போ எமது கோரிக்கையை ஏற்ற இலங்கை அரசிற்கு நன்றி எண்டொரு அறிக்கை விட்டால்ப் போச்சு.

  Reply
 • Thambiah Sabarutnam
  Thambiah Sabarutnam

  புலிகளின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை எடுத்துப்பார்க்கையில் வன்னியில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் யுத்தமானது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. ஒரு விடுதலை போராட்டம் என்பது அடிப்படையில் மக்களுக்கானது. எனவே அது முழுக்க முழுக்க மக்களை சார்ந்தே நிற்கவேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கும் புலிகளின் அகங்கார அதிகார நலன்களுக்குமிடையே பாரிய முரண்பாடு காணப்படுகிறது. புலிகள் தமது கேள்விக்கிடமற்ற அதிகார அகங்கார நலன்களையே சுயநிர்ணய உரிமை என்கிறார்கள். அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்னும் பட்டுத் துப்பட்டாவினால் புலிகள் தமது குரூர சொரூபத்தை மூடி மறைக்க முயல்கிறார்கள்.
  தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களின் சகல ஜனநாயக உரிமைகளையும் உள்ளடக்கியது.
  மக்கள்மீது நம்பிக்கையில்லாமல் அவர்கள்மீது அடக்குமுறை செலுத்தும் புலிகள் ஆயுதங்கள்மீது மட்டுமே தமது முழு நம்பிக்கையையும் வைத்து வந்துள்ளனர். மேலும் ஒரு விடுதலை போராட்டத்தின் வெற்றி என்பது தனது பிரதான எதிரி யார்; என்பதை இனம்காண்பதிலேயே தங்கியுள்ளது. ஆனால் புலிகள் சாதாரண தமிழ்-சிங்கள-முஸ்லீம் மக்களை எதிரியாக தீர்மானித்து அவர்கள் மீது தாக்குதல்களை நடாத்தி வருகின்றனர். ஒரு விடுதலை இயக்கம் தனது சொந்த மக்களை மட்டுமல்லாது நீதியை விரும்பும் அனைத்து மக்கள் உட்பட சகல வளங்களையும் திரட்டிப் போராடாமல் ஒருபோதும் வெற்றிபெறமுடியாது என்பதை உலகின் பல விடுதலைப்போராட்டங்கள் நிரூபித்துள்ளன. ஆனால் புலிகளோ தமிழ் மக்களின் விடுதலைக்காக போராட புறப்பட்ட பல போராளிகள் ஜனநாயகவாதிகள் கல்விமான்கள் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோரை கொன்றுகுவித்து தமது எதேச்சாதிகார ஏகத்தலைமையை மக்கள்மீது திணித்துள்ளனர்

  Reply