அறியாமையுடைய, சர்வாதிகார நாடுகளைப் போன்றே இலங்கையிலும் சில சம்பவங்கள் இடம்பெறுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு சென்று சாட்சியம் வாங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,
1994 இல் ஆட்சியை பொறுப்பேற்கும்போது வறுமைக் கோட்டிலுள்ள நாடுகள் பட்டியலில் 25 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, தனது 11 ஆண்டுகால ஆட்சியில் போசாக்குள்ள 72 நாடுகளுக்குள் கொண்டுவரப்பட்டது என சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமின்றி தனிநபர் வருமானம் மூன்று மடங்காக அதிகரித்ததோடு தேசிய உற்பத்தியும் மூன்று மடங்காக அதிகரிக்க அந்த காலகட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
இருப்பினும் சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டிருந்த கல்வி துறை 2006 இன் பின்னர் முழுமையாக சீரழிக்கப்பட்டது என சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டினார்.