சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை பொதுமக்கள் பயன்படுத்தினால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் அபேசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த போது,
சீனாவில் அதிகளவான இரசாயன உரங்கள் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படுகிறது. தரமற்ற உணவை உட்கொள்வதால் சிறுநீரக நோய்கள் ஏற்படுவதாகவும், இலங்கையில் நாளாந்தம் 6.5 மில்லியன் கிலோகிராம் அரிசி நுகரப்படும் அதேவேளை 3.5 மில்லியன் பாண்களும் நாளாந்தம் நுகரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரு ஹெக்டேர் செய்கைக்கு 137 கிலோ யூரியா உரம் பயன்படுத்தப்படுகிறது, இதேவேளை சீனா 500 கிலோகிராம் யூரிவை பயன்படுத்துகிறது, மியான்மாரே அதிக அளவு உரங்களைப் பயன்படுத்துகிறது.
இரசாயன உரத்தை 3-4 மடங்கு அதிகமாக பயன்படுத்தும் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி பாவனைக்கு பாதுகாப்பானதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் மின்சார நெருக்கடி நிலவும் போதிலும் அரசாங்கத்தின் வீண் செயற்பாடுகள் இன்னும் குறையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.