இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நேபாளம் பயணமானார். நேபாளப் பிரதமர் புஷ்பகமல் தஹலின் அழைப்பை ஏற்றே ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கும், நேபாளத்திற்குமிடையிலான இருபக்க நல்லுறவுகள் குறித்து நேபாள ஜனாதிபதி கலாநிதி ராம்பாரன் யாதெவ், பிரதமர் புஷ்ப கமல் தஹல, வெளி விவகார அமைச்சர் உபேந்திர யாதெவ் உட்பட அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த விருக்கிறார்.
ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் போது இலங்கைக்கும், நேபாளத்திற்குமிடையில் பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மேம்பாட்டுக்குமான இரு பக்க உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி புத்தபிரானின் பிறந்த இடமான லும்பினிக்கும் விஜயம் செய்யவிருக்கிறார்.
palli
புஸ்பகமலுக்கும் சின்னாதாய் ஒருஆசை. ஏன் மகிந்தா மாதிரி நானும் ஒரு கிட்லராககூடது என. அகவேதான் மகிந்தாவை கூப்பிட்டு
எப்படி இது எல்லாம் சாத்தியம் (ராணுவமுன்னேற்றம்) எனக்கும் சாத்யபடுமா? என கேக்கவே ஒரு சின்ன விருந்துடன் அழத்துள்ளார். புஸ்பகமல் மகிந்தாபோல் உமக்கும் முதலில் ஒரு கருனாவை ஒழுங்கு செய்யவேண்டும். அதன்பின் வேண்டாமே… எமது இனதுரோகத்தை அம்பலபடுத்துவது. எதுக்கும் மகிந்தாவின் கதையை கேட்டு திரும்பவும் நேபாலை மன்னர் ஆட்சியாகாவிட்டால் சரிதான். வந்தவர்க்கு ஏதாவது கடன் கொடுத்து உதவுங்கோ. அவர் வெக்கபட்டு கேக்கமாட்டார். நீங்களாய்தான் கொடுத்து உதவ வேண்டும். காரணம் எமது பிரதமர் இலங்கையை விட்டு புறப்பட்டால் பணம் இல்லாமல் திரும்புவதில்லை.
Kusumbo
இதைத்தான் சொல்லுறது பிச்சைக்காரனிட்டை களவெடுக்கிறது என்று. நேபாளக்காரன் பஞ்சப்பட்டிணியில் இருக்க அங்கை பொருளாதார மேம்பாடு பத்திக்கதைக்க இராசபக்ச போயிருக்கிறார் எண்டால் பாருங்கோ. புலிகளிட்டை எடுத்த சுடாத துவக்குகளையும் பீரங்கிகளையும் விக்கபோன விசயமாவெல்லே இருக்குது.
பார்த்திபன்
//எமது பிரதமர் இலங்கையை விட்டு புறப்பட்டால் பணம் இல்லாமல் திரும்புவதில்லை.//- பல்லி
என்ன கொடுமை பல்லி இது?? ஜனாதிபதி மகிந்தாவாகச் சென்றவரை திரும்பும் போது பிரதமராக்கிவிடுவீர் போலுள்ளது………..
palli
தவறை சுட்டி காட்டியதுக்கு நன்றி பார்த்திபன். குழப்பம் பின்னோட்டத்தில் மட்டுமல்ல மனதிலும்தான். இருப்பினும் இந்த தவறு இனி வராமல் இருக்க முயற்ச்சிக்கிறேன். நன்றி பார்த்திபன்.