விடு தலைப் புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்குமானால் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலை உருவாகும். தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். சீனா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளின் ஆதரவு எமக்கிருக்கின்றது. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்தும் ஐ.நா. சபையில் ஹோம்ஸ் வெளியிட்ட தகவல்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கையிலேயே சுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்
rajai
இவர்போல ஆட்களினால் தான் இந்த நாட்டிக்கு இந்த கேடு… இவர்கள் இருக்கும் வரை புலிக்கு கொண்டாட்டம் தான்
Kusumbo
தேசப்பற்றாளர்கள் உங்கடை ஆட்சியிலை எத்தனை தடவை றோட்டிலை இறங்கினவை. உதை வைச்சுக்கொண்டு வெருட்டாதையுங்கோ. பிரணாப் முகாஜி சும்மா பகிடிக்குச் சொன்னதை நீங்கள் பெரிசு படுத்துகிறியள். இந்தியா சொல்லுறமாதிரிச் சொல்லும் நீங்கள் மறுக்கிறமாதிரி மறுவுங்கோ எண்டு இராசபக்சவுக்கு சொன்னது தெரியாதோ.