புதுக்குடியிருப்பு சந்தியை படையினர் கைப்பற்றியுள்ளனர்

puthukkudiyiruppu-junction.jpgமேஜர் ஜெனரல் கமால் குனரத்ன தலைமையிலான 53வது படைப்பிரிவின் படையணியான 8வது செயலணி படைப் பிரிவினரும் பிரிகேடிய சாவேன்திர சில்வா தலைமையிலான 58வது படைப்பிரிவினரும் இன்று (மார்: 03) காலை 9.30 மணியளவில் எல்ரிரிஈ இன் இறுதித் தளமான புதுக்குடியிருப்பு நகரின் சந்தியைக் கைப்பற்றியுள்ளனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

58வது படைப்பிரிவினரும் 8வது செயலணிப்படையினரும் கடந்த 20ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி புலிகளின் நிலைகளை முற்றாக அழித்துக் கொண்டு இச்சந்தியை அடைந்துள்ளனர். இப்படைப்பிரிவின் படையணிகளான 12 வது கஜபா றெஜிமன்ட், முதலாவது கஜபா றெஜிமன்ட் மற்றும் 4வது விஜயபாகு படையணிகள் தற்பொழுது இச்சந்தியின் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருவதுடன் எல்ரிரிஈ இன் மீதித் தளங்களை நோக்கி முன்னேறி வருகின்றனர் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது

புதுக்குடியிருப்பு நகரின் மேற்கு எல்லையில் 10வது மற்றும் 12வது கஜபா படையணிகள் நிலைகொண்டுள்ளன. 6வது, 9வது, 12து கெமுனுப் படையினர் கோம்பாவிலிருந்து புதுக்குடியிருப்பு நகருக்கு வடக்காக தாக்குதல் தொடுத்து வருகின்றனர். 7வது சிங்கப் படையினரும் 10வது, 11வது காலால்படையினரும்  எல்ரிரிஈ இன் நிலைகளை தேடி அழிப்பதிலும் ஈடுபட்டுள்ளதாக படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ-35 பாதைக்கு தெற்காக முதலாது கஜபா படையினரும் நான்காவது விஜயபாகு படையினரும் 8வது செயலணி படையனரும் தாக்குதல் நடத்தி புதுக்கடியிருப்பு சந்தியை கைபற்றியுள்ளனர். படையினர் இப்பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

7 Comments

 • palli
  palli

  அங்கும் புலிகள் இலையா? அப்ப எங்குதான் புலிகள் போட்டார்கள். இப்போதாவது பேச்சுவார்தையை தொடங்கலாமே. பல்லி புலியுடன் என சொல்லவில்லை. தமிழருடன் அதிலும் ஒரு அங்த்தவராக புலியும் கலந்து கொள்ளட்டுமே.

  நம்ம தலைவர் அன்றே பாடிவிட்டார். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என. பல்லி திருடன் என சொல்லியது
  புலியை மட்டுமல்ல.

  Reply
 • santhanam
  santhanam

  தமிழ் மக்களை குறுகிய தம் எல்லைக்குள் மந்தைக் கூட்டமாக புலியை சுற்றி வீதியில் தமிழினத்தை அழிக்க பேரினவாதிகளுக்கு உதவி செய்கின்றனர். தமிழினமோ தன் மேலான இன அழிப்பை எதிர்த்து போராட முடியாத வண்ணம், புலிகள் இதை தம் குறுகிய எல்லைக்குள் தள்ளியுள்ளனர்.’சிங்களவன் மோடன்” என்று சொல்லிக்கொண்டு புலிகளால் நாம் மோடராகிப் போன துயரம்.இப்படி இன்று தமிழ் இனவழிப்பு நடப்பது புலிகளால் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களை இனவழிப்புக்கு எதிரான பொதுக்கோசத்தின் கீழ் மக்களை அணிதிரட்ட புலிதடைசெய்கின்றது. இனவழிப்புக்கு எதிரான போராட்டமாக பொதுமைப்படுத்தத் தவறி, தம்மை சுற்றி போராட்டங்களை விலங்கிட்டு வைத்துள்ளனர். ஒரு இனத்தின் மேல் நடத்தும் காட்டுமிராண்டித்தனமான வாழ்வியல் திணிக்கப்படுகின்றது. ஒரு இனத்தின் மேல் அடிமைத்தனம் புகுத்தப்படுகின்றது

  Reply
 • Thaksan
  Thaksan

  சீ! என்ன கொடுமை சார் இது. தமிழீழத்தின்ட கடசி நகர் சந்தியைக்கூட பிடிச்சுப் போட்டான்கள் ஆமிக்காரன்கள். ஒரு லெவலுக்கு சண்டித்தனத்தோட சந்தியில குந்தியிருக்ககூட ஒரு சந்தியையும் விட்டுவைக்காமல் எல்லாச் சந்தியும் அவங்கட கையில் போயிட்டுது. தேசத்துரோகிகளை கட்டித்தூக்கி வெடிவைக்க ஒரு சந்தியையாவது விட்டுத் தரலாம்தானே? நீதி இல்லையா?நியாயமில்லையா? புலம்பெயர் உறவுகளே ஒரேயொரு சந்தியையாவது தரச்சொல்லி ஐ.நா.முன் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்யுங்கள். ……….. பொறுத்ததுபோதும் பொங்கியெழுங்கள்.

  Reply
 • சுரேஸ் எம்.எம்.ஏ
  சுரேஸ் எம்.எம்.ஏ

  அதுதான் எல்லாம் பொங்கி வழிந்துதோடி விட்டதே தக்சன். இனிப் பொங்கினால் இருக்கிற பழைய பானையும் சில்லவல்லமா உடைந்துபோய் விடுமே.

  சுரேஸ் டபுள் எம்.ஏ

  Reply
 • palli
  palli

  பல்லி நினைக்குது. 1985ம் ஆண்டு புளொட் அமைப்பினர் ஒரு அறிக்கை விட்டவை. புளொடின் ரானுவ நடவடிக்கை அனைத்தும் தர்க்காலிகமாக இடைநிறுத்தம் செய்வதாக. இன்றுவரை அந்த இடைநிறுத்தத்தை எடுக்கவே இல்லை. அப்படி புலியும் கிழக்கில் தொடங்கிய தடக்குபட்டு விழுந்த (தந்திரமான) பின்வாங்கல் புதுக்குடியிருப்பு சந்திவரை தொடர்கிறது. 25 வருடத்துக்கு முன்பே இப்படிதான் வருமென, புளொட்டுக்கு தெரியுமோ என்னவோ.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  பல்லி அப்ப புளொட்காரர்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்ல வாறியள் போல.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  Thaksan, முந்திப் புலிகளும் ஒருவரை துரோகி எண்டு போட்டுத்தள்ளி லைற் கம்பத்திலை கட்டுறதுக்கு போட்டுத்தள்ளியவரின் ஊரிலை செய்யாமல் 4, 5 ஊர் தள்ளி தான் போட்டுத் தள்ளி பின் லைற் கம்பத்திலை கட்டுறவை. காரணம் உண்மை மற்றவைக்கு தெரிந்து விடக் கூடததென்பதற்காக……….. …….

  Reply