ஜனாதிபதியின் வருகையால் புறக்கணிக்கப்பட்ட தமிழ்மொழி – சிங்களத்துக்கு மாற்றப்பட்ட வவுனியா பல்கலைகழக கல்வெட்டு !

வவுனியா பல்கலைக் கழகத்தின் திரை நீக்கபகுதியில் இருந்த தமிழ் மொழி கல்வெட்டுக்கு திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

IMG 20220210 WA0023

வவுனியா பல்கலைக் கழகத்திற்கு, இன்று(11) விஜயம் செய்யும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதனை அங்குராப்பணம் செய்து வைக்கவுள்ளார். இந்நிலையில் பல்கலை கழகத்திற்கு நுழைவாயில் ஊடாக உட் சென்று பல்வேறு பீடங்களுக்கும் பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் முக்கோண வடியில் பல்கலைக்கழகத்தின் பெயருடன் கூடிய கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

வீதியில் இருந்து உட் செல்லும் போது காட்சிக்கு புலப்படும் வகையில் தமிழ் மொழியும், மற்றைய இரு பங்கங்களில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வீதியில் இருந்து பல்கலைக்கழகத்திற்குள் செல்லும் போது பீடங்களுக்கு பிரிந்து செல்லும் பிரதான பகுதியில் தமிழ் மொழியில் காட்சி கொடுத்த கல்வெட்டு அவசர அவசரமாக அக்கற்பட்டு மறுபக்கம் மாற்றப்பட்டுள்ளதுடன், முன் பகுதியில் சிங்கள மொழி கல்வெட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ள போது,  இந் நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று மொழிகளிலும் தனித்தனியான கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார் நிலையில் குறித்த இடத்தில் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு முன்னுரிமைப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகத்தின் முகப்பு வாயிற்பகுதியை நோக்கியவாறு காணப்பட்டுள்ளது. எனினும் அங்கு வந்த அதிகாரிகள் தமிழ் மொழியை பின்புறமாக அமைக்குமாறும் சிங்கள மொழியை முன்னுரிமைப்படுத்துமாறு கூறி குறித்த கல்வெட்டை உடனடியாக இடம்மாற்றியுள்ளனர்.

ஜனாதிபதி சிங்கள மொழிக்கும் பெளத்தத்திற்கும் முன்னுரிமை என தேர்தலில் வெற்றி பெற்ற காலத்தில் இருந்தே தெரிவித்து வரும் நிலையில் அதன் ஒரு வடிவமாகவே இந்த செயற்பாட்டையும் நோக்க வேண்டியுள்ளது.
வடக்கு கிழக்கில் தமிழ் மொழி முன்னுரிமை என அரசியலமைப்பு ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் வடக்கிற்கு வந்த நீதி அமைச்சரும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை என தெரிவித்திருந்த நிலையிலும் இவ்வாறான ஒரு சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் அரங்கேறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளாது புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *