பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் கையெழுத்துதிடும் நடவடிக்கை நாளை கொழும்பிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத்திற்கு நிலையத்துக்கு முன்பாக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரனின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.
1979 ஆம் ஆண்டு ஆறு மாதங்களுக்கு ஒரு தற்காலிக விதிகள் சட்டமாக கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்பாட்டில் உள்ளது. அன்றைய அரசாங்கத்திற்கு எதிரான கருத்து வேறுபாடுகளை நசுக்க கொண்டுவரப்பட்ட இச்சட்டம் இன்றும் தொடர்கிறது என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வாரம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் வெளிவிவகார அமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.